Category Archives: Islam

Quran Kural ! குர்ஆன் குறள்!

குர்ஆன் குறள்!

 

செய்யாததற்குப் புகழ்தேடின் செய்வனே வேதனை
மெய்யாக மறுமையில்3:188 காண்!

இறந்தாலும் உயிருண்டு ஊட்டுவன் உணவும்
இறந்தாலவன் பாதையில்3:16 பார்! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 28:56

நீர் விரும்பியவரை நிச்சயமாக நேர்வழியில் செலுத்திட முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான். நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.

 
- நிஹா -

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர் ஆன் 50:45

அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை அடக்கியாள்பவரல்ல.

ஆகவே, எனது எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கு திருக்குர்ஆனைக்கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!

- நிஹா -

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 
36:1 முற்றிலும் ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!

36:3 நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர்!

32:4 நேரான வழியின் மீதிருக்கிறீர்!

 
- நிஹா -

பிரிவினைவாதிகளின் பார்வைக்கு!

பிரிவினைவாதிகளின் பார்வைக்கு!

இவை தராசு. புர்கான் உரைகல்!

நிறுத்து, உரசிப்  பாருங்கள் உங்கள் எடையை!

 

6:159 –  நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களுடன் நீர் எவ்விஷயத்திலும் சேர்ந்தவரல்லர்.  அவர்களது காரியமெல்லாம் அல்லாஹ்வின்பால் உள்ளன. பின்னர் அவர்கள் செய்துகொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

 

30:32 –  தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருந்துள்ளவற்றைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

 

23:53 – பிறகு அவர்கள் தம் காரியத்தைத் தங்களுக்கிடையே பல பிரிவுகளாகத் துண்டாக்கி விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமிருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

21:93 – தங்களது காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டுவிட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்.

 

3:105 –  இன்னும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னர், கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டார்களே, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். அத்தகையோருக்கு மகத்தான வேதனையுண்டு.

 

15:90 – பலவாறாகப் பிரித்தோர் மீது, நாம் இறக்கியவாறே.

 

15:91 – இந்தக் குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கிக்கொண்டவர்கள் மீதும்.

 

15:92 – உமது ரப்பின் மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம்

 

இஸ்லாம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்ற இறைகருத்தை ஏற்று ஒற்றுமையைக் கடைப் பிடிக்காதவரை இவ்வாறான கேவலங்களை இம்மையிலும், மறுமையில் தண்டனையையும் பெறவே வேண்டி வரும். 

 

பிரிவினையாளர்களுடன் நபிகள் கோமான் ஸல் அவர்களுக்கே எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை அறிந்தால் பிரிவினையாளர்களின் இஸ்லாமிய நிலை என்னவென்பது விளங்கும்.

 

- நிஹா -

தினம் ஒரு மறை வசனம் மனனம் பண்ண!

தினம் ஒரு மறை வசனம் மனனம் பண்ண!

 

  அல் குர்ஆன் 34:49 :

” நீர் கூறுவீராக! உண்மை வந்து விட்டது. பொய் புதிதாக ஒன்றையும் செய்திடவில்லை. இனி செய்யப் போவதும் இல்லை.“

 

 தொடர்பான வசனம்: 17:81, 21:18, 42:24

 

 

 

 

Quranic Way… மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்

குர்ஆன் வழியில்…

மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்!

நாம் பிறந்த இந்தப் பூவுலகிலும், நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்ணகத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமிகள், பிரபஞ்சங்கள் என எவையெவை யெல்லாமோ விரவிக் கிடக்கின்றன. Continue reading

குர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா !

குர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா !

அல்லாஹ் ஒரு விடயத்தைத் தொடங்கு முன்னர் அது பற்றிய அறிவை, எச்சரிக்கையை, அனர்த்தத்தை தெளிவாக விளக்கமாக, சந்தேகமற அறிவித்தலாகத் தந்து விடுகின்றான், அவ்வாறு தரப்பட்டவையே அனைத்து, வேதங்களும், ஆகமங்களும், வேதக் கட்டளைகளும். Continue reading

Quran Kural !

குர்ஆன் குறள்!

செய்திடுகலந் தாலோசனை காரியங்க ளனைத்தையும்
செய்யுமுன் 3:159 காண்!

குன்றிடாதீர் பலம் கொண்டிடாதீர் கவலை
குன்றாவிசுவாசி 3:139 பார்! Continue reading

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா?

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா?
என்ற விவாதம் இறை விரோதக் கருத்தே!

A view about the debate on Allah!

மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் அண்மையில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்படுகிறேன். Continue reading