குர்ஆன் வழியில் …
அல்லாஹ்வுக்கு உவமை ஏற்படுத்தாதீர் !
அல்லாஹ் பற்றி அறிந்து கொள்வது ஷிர்க் என்ற இணைவைப்பை வருவிக்காதிருக்கும். அல்லாஹ் தான் விரும்பினால், தனது கருணையைக் கொண்டு மானுடரின் அனைத்துக் குற்றங்களையும் மன்னிப்பான். ஆனால் தனக்கு இணை வைப்பதை அவன் எக்காரணங் கொண்டும் மன்னிக்கமாட்டான். அதனால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களையாவது நாம் அறிந்து வைத்திருத்தல் ஷிர்க்கிலிருந்து நம்மை விலக்கி இறைதண்டனையில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
அந்த வகையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை சரிவரப் புரிந்து ஈமான் கொண்டோமாயின் ஷிர்க்கில் இருந்து விலகிக் கொள்ளலாம். மேற்கண்ட தலைப்புக்கு ஆதாரமாக நிறைய குர்ஆனிய வசனங்கள் இருப்பினும் அது நேரடியாக உணர்த்தும் வசனம் ஒன்றை முதலில் பதிவாக்குகிறேன். ‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை’. இந்த வசனம் மிகத் தெளிவானது. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை- 42:11 என்ற போது, அவன் இப்படி இருப்பான், அப்படி இருப்பான், அங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான். வானத்தில் இருக்கிறான், பூமியில் இருக்கிறான் போன்றவாறு நினைப்பதோ, கூறுவதோ ஷிர்க் என்பதை மக்கள் அறியாமல் இருப்பது அவனது மன்னிப்பை ஹறாமாக்கிவிடுவது. Continue reading