Category Archives: Religious

திருமணத்தை வலியுறுத்தி வரம்பிட்டு வழிகாட்டும் திருக்குர்ஆன்

அனைத்து உயிரினங்களினதும் இனப் பரம்பலுக்கு வல்ல அல்லாஹ் வகுத்த வழியே ஆண் பெண் உறவு. ஆதம் – ஹவ்வா, ஈஸா தவிர்ந்த அனைத்து மனிதர்களும் ஆண்-பெண் இணைவால் உருவானவர்களே. உலகம் தோன்றிய காலத்தில் முதல் மனிதர் இருவரைத் தவிர மற்றையோர் தற்போதைய முறையில் திருமணம் செய்து வாழ்ந்தவர்களல்லர். முதல் மனிதருக்குப் பிறந்த குழந்தைகள் ஆண் பெண்ணாகப் பிறந்ததாக வரலாறு விளம்புகின்றது. அந்த வகையில் அன்றைய நிலையில் சகோதரர் மத்தியிலேயே பாலியல் நடவடிக்கைகள் நடந்து இனப் பெருக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும். Continue reading

ஓரிறை பற்றி புனித பைபிள் ….

வேதங்களில் இருந்து நாம் அறிந்தபடிக்கு, தற்கால கிறிஸ்தவ மக்கள் பின்பற்றும், தற்போது வழக்கிலுள்ள புனித பைபிளில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. இதனையே கத்தோலிக்க மக்கள் அனைவரும் தமது வேதநூலாகக் கைக்கொண்டு ஒழுகி வருவதாகக் கூறப்படுகின்றது. இதில் பழைய ஏற்பாடு என்ற முதற் பகுதி மூஸா (அலை) என்ற மோஸஸ், தாவூத் (அலை) என்றழைக்கப்படும் தாவீது ஆகிய இருவர்களதும் வேதாகாமங்களையும், புதிய ஏற்பாடு என்ற இரண்டாம் பகுதி ஈஸா என்றழைக்கப்படும் யேசு கிறிஸ்து அவர்களாலும் போதிக்கப்பட்டவையென நம்பப்படுபவை களைக் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் வசனங்கள், யேசு நாதரின் பன்னிரு சிஷ்யர்களில் நால்வர்களான மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோரால், இயேசு நாதரின் மறைவுக்குப் பின்னர், வரையப்பட்டவைகளும், இன்னும் பவுல் மற்றும் சிலரது கடிதங்களும் கோவை செய்யப்பட்டுள்ளன.

Continue reading

நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்

வையகம் தழைக்க உலக மையத்திலே உதித்த உத்தமர் நாயகத்திருமேனி நபிகள் கோமான் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு முன்னர்  வல்ல நாயன் 124,000 நபிமார்களையும், தூதர்களையும் அவர்கள் மூலம் புனித மார்க்கங்களையும் அனுப்பி அறியாமை ‌என்ற இருளில் மூழ்கி தம்மனோ இச்சைகளைத் தெய்வமாக்கி அனாச்சாரங்களை, மாச்சாரியங்களை வாழ்க்கையாகக் கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்துமாறு அவ்வப்போது அவர்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.  Continue reading

அகில உலகிலும் அரிவையர்க்கான அதியுயர் பாதுகாப்புப் பெட்டகம் அல் குர்ஆனே!

இன்று உலகளாவிய ரீதியில் ஒவ்வோர்  மூலை முடுக்கில் இருந்தும் பெண்ணிலை வாதம்,  சமவுரிமை,  பெண்ணியம்,  பெண்ணுரிமை போன்ற பதப் பிரயோகங்களுடன், காளான்களாக சில இயக்கங்கள் அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருக்கின்ற வரலாற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இப்படி தோன்றியவைகள் உருப்படியாக எதனையாவது செய்திருக்கின்றனவா? என நோக்குவோர், எதிர்மாறான  தன்மைத்ததாக,  பெண்களின் வாழ்க்கை நிலை படுபயங்கரமாக, அதள பாதாளத்தை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வர்.

பெண்ணொருத்தி ஆடையின்றி பாதைகளிலும், பயணங்களிலும், பகிரங்க இடங்களிலும், பட்டப் பகலிலும், நட்டநடு நிசியிலும் தட்டத்தனியே திரியும் அவலத்தையே மேற்கண்ட மாதர் நலன் காப்பதற்காக உருவான காளான்கள் பெற்றுத் தந்துள்ளன என்ற பேருண்மை நடைமுறையில் அம்பலமாகி உள்ளது. அம்மணங்களாக பல்வேறு வழிகளில் சாதனைகள்  போன்றும், பொழுது போக்காகவும், நாகரிகம் என்றவாறும், புரட்சி செய்வதாகவும் நினைந்து அவமானச் சின்னங்களாக மாறியுள்ளனர், தாய்க்குலமான பெண்டிர் என்பது மனித இனத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. Continue reading

தர்மம் – ஓர் கண்ணோட்டம்…

குர்ஆன் கூறும் தர்மமும் சமாதான சகவாழ்வும்

தர்மம் பற்றிக் கூறாத சமயங்களோ, ஸ்தாபனங்களோ, பெரியார்களோ இருக்க மாட்டாது என்பது, தர்மத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளப் போதுமானது. மதங்கள், குறிப்பாக இஸ்லாம், தர்மத்தைக் கட்டாய கடமையாக்கியும் வைத்துள்ளது. அப்படியாயின், இத்துனை முக்கியத்துவம் வாய்ந்த அனைவராலும் பரிந்துரை செய்யப்படும் தர்மம் பற்றி நாம் அறிந்திருப்பது நமது கடமையாகின்றது. தர்மம் என்பதை அறியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. காரணம் அது ஏழை எளியவர்களின் வாயில், நாளும் பொழுதும் ஒலிப்பது. ஏழை எளியோர் இல்லாத உலகே இல்லை என்பதால், இச்சொல்லைக் கேளாதோரும் இல்லை எனலாம். ஆயினும் தர்மம், பிச்சை போடுதல் என்ற சிறு வட்டத்துள் அது ஒடுக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஏற்பது இகழ்ச்சி என ஔவையும் தன் ஆத்திசூடியில் கூறியுள்ளமையும், நபிமொழி கைநீட்டி வாழ்வதைவிட மானத்தோடு வாழும் எத்தொழிலையும் இஸ்லாம் வரவேற்கிறது என்று கூறுவதிலிருந்தும், பிச்சை போடுவது மட்டும் தர்மமாக இருக்க முடியாது. அதற்கு மேலும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்பது மறைந்துள்ளது.

Continue reading

இஸ்லாம் மட்டுமே வலியுறுத்தும் ‘இத்தா’ என்பதென்ன? ஏன் கடமையாக்கப்பட்டது? எதை வலியுறுத்துகின்றது? அவசியம்தானா?

சர்வதே சிறுவர் தினத்தையொட்டிய பிரசுரம்

இத்தா என்பது வல்ல அல்லாஹ்வால் குர்ஆனில் பெண்ணினத்துக்கு ஓர் அருளாக, ஆதரவாகப் பரிந்துரை செய்யப்பட்டு, காத்திருக்குங் காலம் குறிப்பிடப்பட்டுக் (மேலும், உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு விட்டு இறந்து போயிருப்பின், அவர்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்களுக்காகக் காத்திருப்பார்கள் – 2:234 ) கட்டாயமாக்கப்பட்டுள்ள கணவனை இழந்தவர்களுக்கான ஓர் கடமையாகும். மணமுடித்துத் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட ஓர் பெண், தான் தனது கணவனை அவனது இறப்பினாலோ, விவாக விடுதலையினாலோ இழக்க அல்லது பிரிய நேரிடும் சந்தர்ப்பங்களில் – அந்த ஷணத்திலிருந்தே – வயது வேறு பாடின்றிக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய கடமை. இதை நாம், வாசகர் விளக்கம் கருதி ‘கருவறியுங் காலம்’ எனக் குறிப்பிடுவோம். கீழ்க்காணும் திருவசனங்கள் மேற்கண்ட கூற்றை விளக்கப் போதுமானவை. (வசனங்கள் 2:226,228,234,235, 33:49, 65:1,5) விரிவு கருதி வசனங்கள் தரப்படவில்லை ). Continue reading

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும

இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள், பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப்படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும், நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும், மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையான தாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர், இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில், அவர்களால் சனாதன தர்மத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றியவையாக இருக்க வேண்டும். ஆயினும், நிச்சயமாக, முக்கிய மூன்று வேதங்களான தோறா, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம். Continue reading

விரோதியின் வீழ்ச்சியில் விதைக்கப்படும் எழுச்சி நிலையானதா?

இந்த தலையங்கம் பரந்துபட்ட உண்மைகளைத் தன்மேல் தாங்கி நிற்பது. அவை அனைத்தையும் விளக்கப் புகின் எனது இலக்கின் நோக்கம் தடம் மாறிவிடும் என்பதால் தடுமாற்றம் தவிர்க்க, விளக்கத்துக்குத் தேவையான அளவில் குறிப்பிட்ட சில உண்மைகளைச் சுருக்கமாக எழுதவுள்ளேன். உய்த்துணரின் உண்மை விளங்கும்.

ஓன்று இருக்கும் இடத்தில் இன்னொன்று இருப்பதில்லை என்பது பொது விதி. ஓன்றின் அழிவிலேயே இன்னொன்று உருவாகின்றது எனவும் கூறலாம். இயற்கை உண்மையில் இப்பாடத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளதா என்றால், அது நமது விளக்கத்தின் பிழையே தவிர வேறில்லை என்றே கூற வேண்டியுள்ளது. மனிதன் உலகில் எதனையும் புதிதாகப் படைத்து விடுவது இல்லை. ஒன்றில் நாம் அறியாதிருந்தவைகள் தாமாக வெளிப்பட்டிருக்கும் அல்லது புறத் தூண்டல்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அன்றேல் ஒன்றில் இருந்து இன்னொன்று உருவாகி அல்லது உருவாக்கப்பட்டு இருக்கும். உருவமாற்றம், அல்லது கலப்பு நடந்திருக்கும். ஆயினும் அங்கு எதுவும் முற்றாக அழிந்து விடுவதில்லை. அதனாலேயே மனிதன் அழிந்ததாக நமக்குத் தெரிந்தாலும் அவனது எச்சங்கள் அதனையே வெளிப்படுத்த வல்லன என்ற விஞ்ஞான உண்மைகள் விளம்பி நிற்கும். விதிவிலக்குகளும் உண்டே. இந்த அழிவுகளும் ஆக்கங்களும் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன. Continue reading

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

குர் ஆன் வழியில் …

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

புனித குர்ஆனில் நரகம் அழைக்கும் மனிதர்களை சுருக்கமாக புறமுதுகு காட்டிப் புறக்கணித்தவன், சேமித்துப் பதுக்கிக் கொண்டவன், தீங்கொன்று அவனைத் தொட்டால் பதறுகிறவனாக, நன்மை தொட்டால் தடுத்துக் கொள்கிறவனாக எனக் கூறிவிட்டு, அப்படி அழைக்கப்படாதோர் வரிசையில் தொழுகையாளிகளைக் குறிப்பிட்டுள்ளான். 70:21 தொழுகையாளி களைத் தவிர எனக் கூறுவதைக் கவனிக்க. மேலும், அதே வரிசையில் அத்தொழுகையாளிகள் எத்தகையவர்கள் என அவர்களின் பண்புகளை விளாவாரியாகத் தெரிவித்துள்ளான். Continue reading

முஸ்லிம்கள் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?

கட்டுரையுள் புகமுன் அறிதலுக்காகச் சில ஆயத்துக்கள் … ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 49:2.

‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24.

‘இ(ந்த குர்ஆனான)து மனிதர்களுக்கு எத்திவைத்தாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும் அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லறிவு பெற்றிடவுமாகும்’ – 14:52.

‘மேலும், இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல. அன்றியும், முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை.’ – 10:37

‘நிச்சயமாக இந்தக் குர்ஆன், எது மிக மிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகின்றது. அன்றியும், நற்செயல் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டென்று நற்செய்தி கூறுகிறது’ – 17:9. Continue reading