குர்ஆனை ஏற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆன் விலக்கிய வற்றையும், ஏவியவற்றையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டு உள்ளனர். இதனைப் பின்வரும் குர்ஆனிய வசனம் வலியுறுத்தும். 6:106 – ‘உம்முடைய ரப்பிடமிருந்து உம்பால் ‘வஹீ’ யாக அறிவிக்கப்பட்டதை நீர் பின்பற்றுவீராக…’ அதனைப் பின்பற்றுவோரே உண்மை முஸ்லிம்கள். Continue reading
Category Archives: Religious
இன்றைய காலகட்டத்தில் குர்ஆனியச் சட்டங்களும் – ஷரிஆச் சட்டங்களும் … சிறப்புப் பார்வை.
முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் -குர்ஆன் கூறுவதென்ன?
அண்மைக் காலமாக முஸ்லிம் மாதர் சிலர் முகத்திரை அணியத் தொடங்கியுள்ளார்கள். இது அனுமதிக்கப்பட்ட அல்லது குர்ஆன் குறித்துரைத்த ஆடை முறையா என்பதை ஆராயும் முன் உலக வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதும், நடைமுறைச் சாத்தியமானது என்பதும், இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள், வழிகேடுகள், பிரச்சினைகள் போன்ற இன்னோரன்னவற்றையும் ஆராய்வது, ஆடை பற்றிய குர்ஆனியக் கருதுகோளைச் சரியாகப் புரிந்துகொள்வதிலும், இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களையும், மேலாக, இத்திரைகளை அணிவோர் அல்லது அப்படி அணிய வேண்டும் என்ற கருத்துக் கொண்டோரும், தமது பெண்களை அணியுமாறு வற்புறுத்துவோரும் அறிந்து கொள்ளவும், குர்ஆனிய வாழ்க்கையை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பது என் வலுவான அபிப்பிராயம். Continue reading
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்…
மேற்கண்ட தலைப்பு அருளாளனனின் திருவசனம். புனித குர்ஆன் 2:153 ‘முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுiகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்வாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான்.’ என்ற வசனமேயாகும். பொறுமையையும் தொழுகையையும் கொண்டு உதவி தேடுங்கள் என்ற இந்த வசனம் எனக்குப் புரியாத புதிராகவும், பின்னர் முரண்பாடு போலவும் தோற்றம் அளித்தாலும், அல்லாஹ் மீதும் அவனது அருள்மறையின் மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையும், வல்ல அல்லாஹ்வின் கருணையும் இருந்ததனால், பொறுமை என்றால் என்ன ? தொழுகை என்றால் என்ன? என்பதை அறியும் ஆவலும் தொடர்ந்து முயற்சியும் உண்டானது. அதன் பயனே இவ்வாக்கத்தின் வெளிப்பாடு. தொடங்குமுன் அருளாளன் அன்புடையோனாகிய அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் பாதுகாப்பையும், வழிகாட்டையும் வேண்டுகிறேன். Continue reading
குர் ஆன் குறள்
1. இல்லைஇலாஹு அல்லாஹ் வையன்றி வேறென
சொல்லுக சொல்லால் மனத்தால்
2. இல்லை இலாஹு அல்லாஹ்வை யன்றிவேறு
சொல்லை அறிந்து ணர்க.
3. கூறியநற் கலிமாவை ஐயறஅறிந் துணர்ந்து
கூறுக சாட்சி யத்தை
4. வாழ்த்துது வணங்குதிறை விண்மண்ணி லனைத்தும்
தாழ்த்தியே தமது தலை – 22:18
5. அனைத்தும் பரப்புது ஆதியவன் புகழை
அணுமுத லகண்டம் வரை Continue reading
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்ற விவாதம் இறை விரோதக் கருத்தே!
மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்பட வைத்தது.
இந்த விவாதம்கூட சாதாரண மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தால் சரி போகட்டுமென விட்டு விடலாம்! ஆனால் அவ்விவாதம், தமிழ்நாட்டில், தம்மை இஸ்லாத்தின பிதாமகர்களாகக் கூறிக் கொண்டிருக்கும் இரண்டு இஸ்லாமியக் குழுவினரால், பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏதோ ஓர் சாதனையைச் செய்வது போல் நடத்தப்பட்டமைதான் நமக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தந்த விடயமாகும். இதனால் என்ன நன்மையை எவரும் அடைந்தனரோ! Continue reading
பி.ஜே யின் ‘திருக்குர்ஆன் விளக்கம்’ வழிகேடா !
மேற்படி பிஜே எனவழைக்கப்படும் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ‘திருக்குர் ஆன் விளக்கம்’ என்ற புத்தகத்தின் 243ஆம் பக்கத்தில் 2, 3,4ஆம் பந்திகளில் காணப்படும் வசனங்கள், 50:16 ஆம் வசனத்தின் பிற்பகுதியான ‘….. அன்றியும் பிடரியிலுள்ள நரம்பைவிட அவன்பால் மிக்க சமீபமாக இருக்கிறோம்’ என்ற வசனத்திற்கு விளக்கம் கொடுக்க முனைவன. அவரது விளக்கத்தை அவரது வார்த்தைகளிலேயே பதிவாக்குகிறேன். Continue reading
குர்ஆன் வழியில்… தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்….
தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்….
அல் குர்ஆன் 39: 33 – மேலும் உண்மையைக் கொண்டு வந்தவரும், அதனை உண்மைப்படுத்தி வைத்தவர்களும், அத்தகையவர்கள்தாம் பயபக்தி யாளர்கள்.
அல்குர்ஆன் 39:34- அவர்களுக்குத் தங்கள் ரப்பிடத்தில் அவர்கள் நாடி யவை உண்டு. அது நன்மை செய்கிறவர்களுக்குரிய கூலியாகும். Continue reading
குர்ஆனின் பார்வையில் … உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!
உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!
இன்று உலகளாவிய ரீதியில், மக்கள் மத்தியில் நன்றி செலுத்தல், நன்றி மறத்தல், நன்றி கொல்லல் போன்ற பல சொற் பிரயோகங்கள் சர்வசாதா ரணமாக உதவிகளோடு, அன்பளிப்புகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுவதை அனைவரும் அறிவோம்.
சிறு உதவியைச் செய்தவர் தான் செய்த உதவியை, சம்பந்தப்பட்டவர் நினைவில் வைத்திருக்க வேண்டும், அதற்காக அவர் என்றும் கடமைப் பட்டவராக இருக்க வேண்டும், சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் தனக்கு உதவுபவராகவோ, அன்றி தனக்கு ஒத்தாசை வழங்குபவராகவோ, இக்கட்டான நிலைகளில் தனக்காகப் பேசுபவராகவோ இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். Continue reading
அறிதலுக்காக சில குர்ஆன் வசனங்கள்
3:73 நிச்சயமாக நேர்வழியானது அல்லாஹ்வின் நேர்வழிதான்
6: 125 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்.
3:29 உண்மை விசுவாசிகள் விசுவாசிகளையன்றி உற்ற நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். எவரொருவர் இவ்வாறு செய்வாரோ அப்பொழுது அவர் அல்லாஹ்விடம் எந்த ஒன்றிலும் சேர்ந்தவரல்லர். ஒருவித அச்சத்தினால் நீங்கள் பயந்து கொண்டிருந்தாலன்றி. Continue reading
இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்
இப்பேரண்டத்தைப் வடிவமைத்து, படைத்து, விரிவுபடுத்தி, இற்றைவரை பரிபாலித்துவரும் வல்ல இறைவன் நாம் வாழும் இப்புவியை அமைத்துள்ள விதம் அவனது இருப்புக்குச் சான்று தருவனவற்றுள் முதன்மையானது. 2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக்கினான். 27:61. இந்தப் புமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக் கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? இது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்புகின் அது தொடர் ஆகிவிடும். அதனால் சிலவற்றைக் கூறுகிறேன். Continue reading