Category Archives: Religious

அல் குர்ஆன் 3:167 ஓர் பார்வை…

‘… அன்றைய தினம் அவர்கள் ஈமானின் பக்கமிருந்ததைவிட, நிராகரிப்பின் பக்கமே மிக நெருக்கமாக இருந்தார்கள். தங்களது உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்களது வாயினால் கூறுகின்றனர். மேலும் அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை மிகவும் அறிந்தவன்’ Continue reading

Bible on women

Burn The Daughter!”And the daughter of any priest, if she profane herself by playing the whore, she profaneth her father: she shall be burnt with fire.” (Leviticus 21:9) (See also Genesis 38:24)

Cut Off Her Hand!”When men strive together one with another, and the wife of the one draweth near for to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets: then thou shalt cut off her hand, thine eye shall not pity her.” (Deuteronomy 25:11-12) (See also Genesis 38:24) Continue reading

குர் ஆன் வழியில் … குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

18:54 இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்கு ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். எனினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவே இருக்கிறான்.

18:55. மனிதர்களை அவர்களிடம் நேரான வழி வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் ரப்பிடம் பிழை பொறுக்கத் தேடுவதை விட்டும், முன்னோர்களுடைய வழி முறை அவர்களிடம் வருவதையும் அல்லது அவர்களுக்கு முன்னிலையில் வேதனை வருவதையும் தவிர தடுக்கவில்லை. Continue reading

குர் ஆன் வழியில் … உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

மேற்கண்ட கூற்று அல்லாஹ்வால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குக் கூறப்பட்டது. இக்கூற்று புனித குர்ஆன் 10: 109 இல் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் நபிகள் பெருமானாருக்குப் பின்னர் பின்பற்றலில் பல தடைகளை, தடுமாற்றங்களை, தப்பிதங்களை, திசை திருப்பங்களை சந்தித்துள்ளனர். கலீபாக்கள் காலம் ஓரளவு முஸ்லிம்களைக் குழப்ப நிலையில் தள்ளப் படாதவாறு காப்பாற்றி உள்ளது. அதன் பின்னர் இந்நிலையில் சரிவுகள், தளர்வுகள், சங்கடங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம்களில் ஏற்பட்ட படிப்படியான இம்மாற்றங்கள் அவர்கள் பிழையான வழியைப் பின்பற்றிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன Continue reading

குர்ஆன் வழியில் … இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

அல் குர்ஆன் 32:21 – அவர்கள் மீண்டு விடுவதற்காக, பெரிய வேதனைக்கு முன் மிகத் தாழ்ந்த வேதனையை அவர்களை நாம் நிச்சயமாக சுவைக்கச் செய்வோம். இது இறைவனின் கருணையின் வெளிப்பாடு. ஓரே இறை கொள்கையை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக நபிமார்களை, தூதுவர்களை, வேதங்களுடன் அனுப்பி அனைத்துலக மக்களையும் அவ்வப்போது அறிவுறுத்தி, அச்சமூட்டி, எச்சரித்தும் திருந்தாத நிலையிலும் அவன் தனது வேதனையை யார் மீதும் இறக்கி விடுவதில்லை. மாறாக, சிறு வேதனைகளைக் கொடுத்து மக்களை எச்சரித்து அவர்கள் தமது பிழைகளில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பத்தையும், அறிவுரையையும், எச்சரிக்கையாகப் பின்னும் விடுக்கிறான். Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

அல்லாஹ் அனுமதியாதது அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். நமக்கு நன்மை போல் தெரிவதில் தீமைகள் காணப்படுவதும், தீமை போல் தெரிவதில் நன்மைகள் காணப்படுவதும் நமக்குப் புலப்படுவதில்லை. தெரிய வரும் காலங்களில் விடயங்கள் நடந்தேறி விடுகின்றன. இங்கு நாம் ஆராயவிருப்பது நாம் அறியாமற் செய்பவை அல்ல. அறிந்து கொண்டே, அதாவது அல்லாஹ் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டே ஒன்றைப் பின்பற்றுவது. இச்செய்கை மிகப் பாரதூரமானதும், அச்செயலைத் தானாகச் செய்பவர் அல்லாஹ்வைப் போன்று காரியமாற்றுவதாக இருப்பின், அல்லது தனது மனோ இச்சைப்படி நடப்பவராக இருந்தால் அது ஷிர்க்கை வருவிக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விடும். இதனை அல்லாஹ் கண்டித்துள்ளான். திரு மறை 42:21 கூறுவதைப் பாருங்கள். Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

மேற்கண்ட விடயம் சாமான்யமானதல்ல. தீமைகளை அகற்றுவது பற்றி அறிந்துள்ளோம். அப்படியான வசனம் ஒன்று 47:24 இல் பதிவாகியுள்ளது. அது பற்றி முன்னர் நான் இதுபோன்ற ஓர் கட்டுரை எழுதியுள்ளேன். ஆனால் இங்கு, அல்லாஹ் அதற்கும் மேல் ஒரு படி சென்று நமது தீமைகளை நன்மைகளாக மாற்றிவிடுவதாகக் கூறியுள்ள 25:70ஆம் வசனத்துக்கு வாசக முஸ்லிம்களது கவனத்தை ஈர்க்கின்றேன். குறிப்பிட்ட வசனம், ‘எவர் தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நற்செயல்களைச் செய்தாரோ அவரைத் தவிர. அத்தகையோர், அவர்களின் தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிகக் கிருபையுடையோனுமாவான்’, என்று கூறுகின்றது. Continue reading

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி என்ற இச்சொல் பழமையானது. பொருள் பொதிந்தது. இறையருள் பெற்றது. இதற்கு அனைத்துலக மக்களாலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணமும் உண்டு.

அண்மைக் காலங்களாக இந்நாட்டில் சில பௌத்த மதத் துறவிகள் எனப்படுபவர்களால் தன்னிச்சையாகச் சில இடங்கள் புனித பூமிகள் எனக் கூறப்பட்டு. அவ்விடங்களில் பிற மதவழிபாட்டு நிலையங்கள் கூட இருக்கக் கூடாது என்ற வகையில், பலாத்காரமாக தகர்ப்பு வேலைகளில் கூட ஈடுபடுவதும், இறைதியானத்தில் ஈடுபட வந்தவர்களைத் தமது கடமையைச் செய்ய விடாது கலைத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. Continue reading