Category Archives: Religious

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

தமிழில் இலக்கங்களுடன்

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

மேற்கண்ட பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வதையே தமிழர்கள் தம் வாழ்த்தாகக் கொண்டிருந்தனர் என்பதிலிருந்து அவர்கள் வாழ்ககையின் தரத்தை, மனோபாவத்தை அறிந்து கொள்ளலாம்.

– நிஹா -

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் அனைத்திலும் உயர்ந்தது !

குர்ஆன் வழியில் …

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் அனைத்திலும் உயர்ந்தது!

முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படுவதே. அது தொழுகையாக, நோன்பாக, ஸக்காத்தாக, தர்மமாக, அல்லது எந்த நல்ல விடயமாக இருப்பினும் அவை அனைத்தும் அல்லாஹ்வை ஆதரவு வைத்துச் செய்யப்படுவதே! நாம் யாருக்கும் செய்யும் எந்த உதவிகளுக்கும் உரிய நன்மைகளும், அதற்கான கூலிகளும் அல்லாஹ்விடம் இருந்தே தவிர வருவது இல்லை. அதனாலேயே யாராவது நமக்கு உதவி செய்தால், ‘ஜஸாக் அல்லாஹ் ஹைறா’ எனவோ ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனவோ கூறி விடுகிறோம். Continue reading

இந்துக்கள் எதிர்பார்த்திருந்த கலியுக கல்கியின் அவதாரம்!

இந்திய இந்து சமயப் பிராமணர் கூறுகிறார்…

 இந்துக்கள் எதிர்பார்த்திருந்த கலியுக கல்கியின் அவதாரம்!  இஸ்லாத்தை அவணிக்களித்த இறைவனின் தூதராம் !

இந்துக்கள் மத்தியில் தசாவதாரங்களின் இறுதி அவதாரமாக, உலக அழிவு நடைபெறவுள்ள கலியுகமான இந்த யுகத்தில் கல்கி என்ற பெயரில் ஒருவர் வருவார் என்ற கருத்து நிலவி வருகிறது. அவர்கள் இது நாள் வரை எதிர்பார்த்திருந்த கல்கி என்பவர் வேறு யாருமல்ல, அவர், இஸ்லாத்தை அவணிக்களித்த அல்லாஹ்வின் இறுதிநபியும் தூதுவருமான முஹம்மது ஸல் அவர்களே என்கிறார் இந்து சமய (பிராமண) ஆய்வாளர். Continue reading

அநியாயம் செய்யப்பட்டோருக்கு அல்லாஹ் அளித்துள்ள உரிமைகளும் நன்மைகளும்.

உலகம் தோன்றிய நாள் முதல் அநியாயங்கள் நடந்த வண்ணமே உள்ளன. இயன்றவர்கள் அநியாயம் செய்வதும், இயலாதவர்கள் அநியாயத்துக்கு உள்ளாக்கப்படுவதும் வாழ்வின் ஓர் பகுதியாகவே உள்ளன. அனைத்து உயிரினங்களும் கூட இந்நிலைக்கு விதிவிலக்கின்றியே உள்ளன. இவ்வநியாயங்களின் பிரதி பலன்களே உலகில் தலையெடுத்த அத்தனை புரட்சிகளுக்கும், பயங்கரவாதங்களுக்கும், வன்செயல்களுக்கும் காரணமாயமைந்தன. அநியாயங்களின் ஆரம்பம் எங்குள்ளது என்பது கட்டுரையின் வரைவுக்கு அப்பாற்பட்டது. அநியாயங்கள் அமைதியை அழித்தொழித்தன என்பதே தெளிந்த உண்மை! Continue reading

செல் குறள் செல் குரல் !

செலவின்றிச் செய்தி செக்கன்களில் செகமெங்குஞ்
செல்வதே செல் விந்தை

நேரமும் மீந்தன தூரமும் தொலைந்தன
கரத்தமை செல் போனால்

சுருங்கிய துலகமென்பர் முருகன் வாயினுள்
சுருக்கினர் இன்றோ செல்லுள் Continue reading

குர்ஆன் வழியில்… திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

குர்ஆன் வழியில்…

திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

புனித குர்ஆனின் 61:2,3 ஆம் வசனங்களிலேயே எனது கட்டுரையைத் தொடர்கிறேன்.
61:2. முஃமின்களே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது, அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரியதாகும்! Continue reading

குர்ஆன் குறள் – தக்வா அல்லது இறையச்சம்

 

பயபக்தி யுடையோர்க்கு பயன்மிகு வழிகாட்டும்
பயகம்பர் வேதம் 2-2

பயந்திடுவீர் அல்லாஹ்வை மறுமையின் சந்திப்பை
உயர்ந்திடுவீர் 2-203ல் கண்டு

அஞ்சிடுக றப்பை அறிந்திடுக படைப்புதனை
எஞ்சியுள்ளது 4-1ல் காண் Continue reading

அறவழி நடந்திட அறிவுரை சில

வாயைப் போற்றி நோயைத் தவிர்,
வேரை அறுத்து வியாதியை அழி.

தாயைப் பேணும் பண்பினை வளர்,
ஊரையும் பேரையும் உயர்த்திடேல் துயர்.

வாரை இழந்தால் செருப்பும் இழியும்,
வேரை அழித்தால் மரமும் அழியும். Continue reading