Category Archives: Religious

குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள் !

குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள்: அல்குர்ஆன் 23:2-9

1. தொழுகையில் உள்ளச்சம் கொண்டோர்

2. வீணானவற்றைப் புறக்கணிப்போர்  

3. ஸக்காத்தை நிறை‌வேற்றுவோர் Continue reading

விபச்சார ஒழிப்பில் குர்ஆனியச் சட்டங்களின் பங்களிப்பு!

விபச்சார ஒழிப்பில் குர்ஆனியச் சட்டங்களின் பங்களிப்பு!

இயற்கை அமைப்பில் ஆண்-பெண் பாலியல் கவர்ச்சியின் இன்றியமையாமை, ஆண்-பெண் உறவு சிருஷ்டிப்பின் காரணியாய் அமைந்தமையால் பெறப்படுவது. சிருஷ்டிப்பின் முக்கியத்துவம் கருதியே இக்கவர்ச்சியை இறைவன் உண்டாக்கியிருப்பதும், பெண்களை உங்களுக்கு அழகிய பூந்தோட்டமாக ஆக்கியுள்ளோம் என்று கூறுவதிலிருந்தும் அறியக் கூடியதாயுள்ளது. Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்… ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட ‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி குர்ஆனின் வழியில் ஆய்வு !

ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட
‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு
அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி
குர்ஆனின் வழியில் ஆய்வு !

மேற்கண்ட ஆசிரியரால், நேரம்பற்றிய ஓர் சூத்திரம் வசனம் 16:77இலிருந்து உருவாக்கப்படுகிறது. அக்குர்ஆன் வசனம்: ‘வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதைவிடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.’ Continue reading

குர்ஆன் குரல்!

போதுமானவ னல்லாஹ் பொறுப்பேற்க மிகநல்லவன்
ஓதியுணர இம்றான் 173

அதிபயம்பசி கனிபொரு ளுயிர்நஷ்டந் தந்தெமை
சோதிப்பான் பொறுபகறா 155

கூர்ந்திடில் அவனினைவு கூருவான் நினைவுமை
கூர்ந்துகாண் பகறா 152 Continue reading

அறிந்திட அறவுரை சில…

§ ஏற்கனவே அறிந்திராத, கண்டிராத ஒன்றை ஞாபகத்திற்குக் கொணர முடியாது.

அப்படியானால் குர்ஆனில், அல்லாஹ் அடிக்கடி தன்னை ஞாபகப்படுத்தும்படி கூறுவதை யாரும் ஏன் மனத்திலிருத்தி அம்முயற்சியில் ஈடுபட மறுக்கிறார்கள்!

ஞாபகப்படுத்தும்படி கூறுவதை, குர்ஆனில் பார்த்து இருந்தாலும், அது மனத்திலிருத்தி,  அம்முயற்சியில் ஈடுபட்டிருப்பின், அதற்கான விடையையும் குர்ஆனிலேயே கண்டிருக்கலாம்! கண்டிருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்!  Continue reading

PJ யின் பிதற்றல்கள்: அல்லாஹ் மனிதரில் பிரியம், அன்பு என்ற பண்பை வைத்துப் படைக்கவில்லை

அல்லாஹ் மனிதரில் பிரியம், அன்பு என்ற பண்பை வைத்துப் படைக்கவில்லை

என்னால் எதேச்சையாகவே PJ யின் இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் வினா-விடைகளைக் கேட்க நேருகின்ற போதெல்லாம் அவரது அறியாமையினால் ஏற்படுத்தப்படும் விபரீதங்களை அனர்த்தங்களை வழிகேடுகளை  கேட்க முடிகிறது. அப்படியான ஒரு காணொளியால் அல்லாஹ்வுக்கும் நாயகமவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்தியை விளக்குவதே இக்கட்டுரை.  Continue reading