Category Archives: Religious

குர்ஆன் வழியில் … அல்லாஹ் யாருடன் இருப்பான்?

குர்ஆன் வழியில் …

அல்லாஹ் யாருடன் இருப்பான்?

அல்லாஹ் தனது வாயால் என்ன கூறியுள்ளான் என்பதை அவனது அருள் மறை குர்ஆனில் இருந்தே விளங்கிக் கொள்வோம். 5:12 நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸக்காத்தையும் நிறைவேற்றி, இன்னும் என்னுடைய தூதர்களை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு உதவி புரிந்து அல்லாஹ்வுக்காக அழகிய கடனையும் கொடுப்பீர்களாயின்! Continue reading

குர் ஆனைப் புறக்கணிப்போருக்கு அல்லாஹ் ஷைத்தானைச் சாட்டிவிடுகிறான்.

குர் ஆன் வழியில் …

குர் ஆனைப் புறக்கணிப்போருக்கு அல்லாஹ் ஷைத்தானைச் சாட்டிவிடுகிறான்.

மேற்கண்ட தலையங்கம் ஓர் குர் ஆனியக் கருத்து. அல் குர்ஆன் 43:26இல் பதிவாகியுள்ளது. ‘எவர் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணித்து விடுகிறாரோ அவருக்கு நாம் ஷைத்தானை சாட்டிவிடுவோம். அவன் அவருக்கு உற்ற நண்பன் ஆகிவிடுவான்’.

Continue reading

The four holy places made sacred by their association with the Buddha!

There are four places for faithful followers to see their inspiration. These are four holy places made sacred by their association with the Buddha. They are:

1. The Buddha’s birth place (Lumbini)

2. The place where the Buddha attained enlightenment (Bodh Gaya)

3. The place where the Buddha gave his first teachings and set in  motion the Wheel of the Dharma or Truth (Sarnath)

4. The place where the Buddha attained parinibbana, or final liberation      (Kusinaga)

 

- niha – 

Source: Web

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்களின் காணப்படும் மானுட உய்விற்கான ஓரே கட்டளை !

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்களின் காணப்படும் மானுட உய்விற்கான ஓரே கட்டளை !

சமயங்களோ, மார்க்கங்களோ, மதங்களோ, வேதங்களோ பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரு அடிப்படைக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது ஒன்றே நமது கருத்தைக் கவர்வது. அதிர்ஷ்ட வசமாக இவ்வுண்மையான அடிப்படைக் கொள்கை, அனைத்து வேதங்களிலும் ஒன்றாகக் காணப்பட்டு இருப்பது ஒன்றே, அவை அனைத்தும் இறைவனால் அருளப்பட்டிருக்கின்றன என்ற ஒப்பற்ற உண்மை மறைக்கப்பட முடியாமல் மிளிர்ந்து கொண்டிருப்பது. Continue reading

குழப்பங்கள் பற்றிய பார்வை!

சீர்திருத்தத்தின் போதுகூட குழப்பம் உருவாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

நல்ல நோக்குடன் தொடரும் காரியங்களால் ஏற்படும் குழப்பங்களை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்று அவர்கள் நல்லதென்று எண்ணிச் ‌செய்யும் காரியங்களால் குழப்பம் உருவாவது.  அடுத்தது, மனோ இச்சை சார்ந்து, நல்லது என எண்ணி பிழையான காரியத்தை முன்னெடுப்பது. இதனால் ஏற்படும் குழப்பம். Continue reading

குர்ஆன் தான் இஸ்லாம்!

குர்ஆன் தான் இஸ்லாம்!

எது இஸ்லாம் என்றால் இதுதான் இஸ்லாம் என்றோ, அதுதான் இஸ்லாம் என்றோ கூற விழையும் போது, அது பிழையான கருத்தொன்றை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதைக் காணக் கூடியதாயுள்ளது. அதனால், பல இஸ்லாம் இருப்பது போலவும், அவைகளை எல்லாம் மறுதலித்து இதுதான் இஸ்லாம் எனக் கூறுவது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது. இன்னும் அவ்வடை மொழிகள் எதுவும் எது இஸ்லாம் என்ற அடிப்படை உண்மையை வெளிப்படுத்துவன ஆகா!

இஸ்லாம் மனிதரின் ஒரு அடைமொழியுள் தன்னை அடக்கிக் கொள்ளக் கூடியதல்ல, அகண்டங்களுக்கும் அப்பால் விரிவடைவது, அதனை சில சொற்களால் மட்டுப்படுத்த முனைவதும் இஸ்லாத்தைப் பூரணமாக அறியாத தன்மையை வெளிப்படுத்துவதே! இன்னும் கூறின், முழுமையான ஒன்றை முழுமையற்ற சொற்பிரயோகங்களால் வெளிப்படுத்த முடியாது! வேண்டுமானால், துறைசார்ந்து ஆய்வுகளை வெளிப்படுத்தலாம் அதற்காகத் தனி அடை மொழிப் பிரயோகம் குழப்பமானதே!

எதுதான் இஸ்லாம் என்றால் அது குர்ஆன்தான் இஸ்லாம். வேறு இஸ்லாம் உலகில் இதுவரை தோன்றவும் இல்லை, தோன்றப் போவதுமில்லை. இன்றைய தினம் இஸ்லாத்தை உங்கள் மார்க்கமாகத் தேர்ந்து கொண்டேன் என்று வல்ல நாயன் அல்லாஹ் தன் மாமறையில் கூறுகின்றான். மேலும், அதுவே இறைவனால் உலகில் அருளப்ட்ட மார்க்கங்கள் அனைத்தையும், உண்மைப்படுத்தி, சாட்சியம் கூறி, பாதுகாத்து நிற்கின்றது. அதில் சர்ச்சைகள் இருந்தால் மட்டுமே இதுதான், அதுதான், எதுதான் போன்ற கேள்விகளும் விடைகளும் தோன்றும். முற்றும் உணர்ந்த வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா அவ்வாறான நிலையை நமக்கு ஏற்படுத்தாமல் அருள்பாலித்துள்ளான்.  

ஆக, குர்ஆன் முழுமையடையும் நிலையில் முடிவுரை போன்று கொடுக்கப்பட்டதே, இன்று எனது அருட்கொடையை உங்கள் மீது சம்பூரணமாக்கிவிட்டேன். இதனை உங்களுக்கு மார்க்கமாகத் தேர்ந்து கொண்டேன் என்பதெல்லாம்!

சிலரால் தமது மேதாவிலாசத்தைக் காட்டுவதற்காகக் பாவிக்கப்படும் பதப் பிரயோகங்கள் பலவாறான திரிபுகளுக்குக் காரணமாகி விடுகின்றன. இஸ்லாம் என்றால் என்ன என்று அறியாதோர், இப்படியான பதப் பிரயோகங்களால் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகின்றனர். குழப்பம் விளைவிப்பது கொடிய குற்றம் என்பதை இவர்கள் மறந்து விடுவதேனோ! இக்குற்றத்துக்குத் தண்டனையாக அல்லாஹ்வால் கொலை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது!

இஸ்லாம் ஓரே மார்க்கம்தான். அதில் பிரிவுகள் இல்லை. முன்னைய மார்க்கங்களைப் போன்று பிரிவினை ஏற்படுத்தி இறை தண்டனையைப் பெற்றவர்கள் போன்றே, இந்த குர்ஆனை பிரிவுகளாக்க முனைபவர்களுக்கும் தண்டனை உண்டு என அல்லாஹ் கூறியுள்ளான். 15ஆவது சூராவின் 90,91இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

மேலும் குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கிக் கொள்பவர் எவரும் முஸ்லிம்களல்ல என்பதும் அல்லாஹ்வின் வசனங்களில் இருந்து தெரிய வருகின்றது. 6:159 வசனம், நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களுடன் நீர் எவ் விஷயத்திலும் சேர்ந்தவரல்லர். இதன்படி மார்க்கத்தில் பிரிவினையை உருவாக்குவோருடன் நபிகள் நாயகம் ஸல் அவர்களே எவ்விஷயத்திலும் சேர்ந்தவர் அல்லர் என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

21:92 – நிச்சயமாக இது ஓரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும். என்ற வசனத்தைத் தொடர்ந்து வரும் 93ஆவது வசனம், தங்களது காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டுவிட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள் என்று மிக அழகாக பிரிவினைக்காரரைப் பற்றி எச்சரித்துள்ளான்.

இன்னும் 23:53ஆவது வசனத்தில், பிறகு அவர்கள் தம் காரியத்தை தங்களுக்கிடையே பல பிரிவுகளாகத் துண்டாக்கி விட்டனர். ஓவ்வொரு பிரிவினரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர். அடுத்த வசனத்தில், அவர்களை ஒரு நேரம் வரை, அவர்களது மூடத் தனத்திலேயே விட்டு விடுவீராக எனக் கூறியதில் இருந்தும் மார்க்கத்தில் பிரிவுகளை ஏற்படுத்துவதை அல்லாஹ் எந்தளவு வெறுக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்குர்ஆன் வசனம் 30:32இலும் பிரிவினை பற்றிக் கதைக்கின்றான். தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும், தங்களிடமிருந்துள்ளவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

மேற்கண்ட குர்ஆனிய வசனங்களின்படி, இஸ்லாம் என்பது ஓரே மார்க்கமே! அது குர்ஆனே! அதில் பிரிவினைகள் ஏதுமில்லை எனக் கூறியிருப்பது தெளிவாகிறது. அதற்குப் பின்னர், இன்னும் பல வசனங்களில், இந்த வேதம் சம்பூரணப்படுத்தப்பட்டது, தனது பாதுகாப்பில் உள்ளது என்றெல்லாம் அல்லாஹ் கூறியுள்ளான்.

அந்த வகையில் யாரும் குர்ஆனில் எவ்வித மாற்றத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ விதைக்க முடியாது. யாரும் எவ்வித பங்களிப்பையும் செய்ய முடியாது. இது சந்தேகமற்றது என அவனே வேறிடங்களில் கூறியுள்ளதும், மிக எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியவாறு தெளிவாகச் சிறுசிறு உதாரணங்களுடன் அல்லாஹ்வே விளக்கி உள்ளேன் எனக் கூறிய பின்னர் மாற்றுக் கருத்துக்களுக்கோ, அபிப்பிராய பேதங்களுக்கோ, வேற்றுமைகளுக்கோ இடமில்லை.

29:59 எனினும் இது கல்வியறிவு கொடுக்கப்பட்டார்களே அத்தகையவர்களின் நெஞ்சங்களில்தெளிவான வசனங்களாகும்.

பொதுவான நிலையில், குர்ஆனில் காணப்படும் அடிப்படை வசனங்கள் அனைத்தும், அப்பழுக்கில்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் விளங்கிக் கொள்ளக்கூடியவை என்பதே இறைவனின் வாக்குறுதி. தனது குர்ஆன் இன்னொருவரின் மூலம் விளக்கி வைக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அல்லாஹ் வைக்கவில்லை. சில வசனங்கள் பல கருத்துக்கள் கொண்டவை என்பதால் அதன் கருத்தை இறைவன் அறிவான்(3:7). அப்படியான வசனங்களின் கருத்தை, நமக்கு இறைவன் அந்நிiலையை அடையும் போது அறிவித்துவிடுவான். அதனை நாம் பல படிகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறியதிலிருந்தும், நமது ஈமானுக்கும். முயற்சிக்கும், நமது தரத்திற்கும் ஏற்ப வெளிப்படுத்துவான்.  இவை அனைத்தும் அவனது வாக்குறுதிகளே!

6:125 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ, அவர்களின் நெஞ்சங்களை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான் என்பதும் அவனது அமுத வாக்கே!

இஸ்லாத்தினால் அடையப்பெறும் அடைவை விளக்கும் வகையில் அமைந்த நாயக வாக்கியம் ஒன்று சிந்தனைக்கு விருந்தாகின்றது. சுருக்கமாகக் கூறின், நமது கண்மணி நாயகம், ரசூலே கரீம் அவர்களிடம் மூன்று காலக் கட்டங்களில், ஜிபுறீல் அலை அவர்கள் வருகை தந்து, இஸ்லாம் என்றால் என்ன என்ற வினாவை விடுத்ததாகவும். முதல் முறையில் நீண்ட விரிவான, இரண்டாவது தடவையில், சுருக்கமாகக் குறுகிய விளக்கமும், மூன்றாவது கட்டத்தில், ஓரே சொல்லில் ‘நற்குணம்’ என்ற பதிலை மும்முறை பகன்றதாகவும், அதனை ஜிபுறீல் அலை அவர்கள் அங்கீகரித்து நன்றே கூறினீர் எனக் கூறிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வும் நாயகத் திருமேனி அவர்கள் பற்றிய சான்றிதழைக் கொடுத்த போது, அவர்களை நீர் உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறீர் எனத் திருவாய் மொழிந்தருளி இருப்பதும் இதற்குக் கட்டியங்கூறி நிற்கின்றது.

நாம் இஸ்லாம், குர்ஆனின் போதனைகளை ஏற்றுள்ளவர்கள் எனக் கூறும் எவரும் அதனை அறிந்து கொள்ள மிகக் கஷ்டப்படத் தேவையில்லை, தம்மிடம் நற்குணம் குடிகொண்டுள்ளதா என்பதை குர்ஆனின் அடிப்படையில் உரசிப் பார்த்தால், நமக்கு நாமே சாட்சியாகியாளராகி விடுவோம்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த குர்ஆனைத்தான் தனது 40 வயது முதல் இறக்கும் வரை பின்பற்றினார்கள் என்பதும். அதனால்தான் அல்லாஹ் தனது சான்றிதழை வழங்கினான் என்பதும், குர்ஆன்தான் இஸ்லாம் என்ற தெளிவான உண்மையை மீண்டும் நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கின்றது.

நாயகம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என ஆயிஷா நாயகி அவர்கள் கூறியுள்ளதாக அறியப்படும் ஹதீஸும் இதனையே வலியுறுத்துகின்றது. நாயகம் அவர்கள் தனக்கு வஹீயாக அறிவிக்கப்பட்ட குர்ஆனைத் தவிர வேறொன்றையும் பேசவில்லை என அல்லாஹ்வும், தான் தனக்கு வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர எதனையும் பேசுவதில்லை என நபிகளாரே கூறியிருப்பதில் இருந்தும் குர்ஆன்தான் இஸ்லாம் என்பது மிகத் தெளிவாகின்றது.

அல்லாத வகையில் செய்யப்படுவன அனைத்தும், விரயமாகிவிடும் என்பதை, 25:30 இல் நாயகம் அவர்கள் கூறுவார்கள் என அல்லாஹ்வால் எதிர்வு கூறப்பட்டுள்ள, என்னுடைய சமூகத்தினர் இந்த குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் என்ற கூற்றுக்குள் அமைவனவே! ஆக இதுவே, மிகத் துலாம்பரமாக குர்ஆன்தான் இஸ்லாம் என்ற இறுதி அறிக்கைக்கும் அளவுகோலாய் அமைந்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

- நிஹா -