குர்ஆன் குறள் KuRan kuRaL!
நிறைவாய் அளந்தால் சரியாய் நிறுத்தால்
சிறப்பாமது அழகு மஃதே – 17:35
படித்துத்தரத் தன்மறையை இறக்கினா னல்லாஹ்
படிப்படியாய்ப் பிரித்தே பகுதி – 17:106 Continue reading
குர்ஆன் குறள் KuRan kuRaL!
நிறைவாய் அளந்தால் சரியாய் நிறுத்தால்
சிறப்பாமது அழகு மஃதே – 17:35
படித்துத்தரத் தன்மறையை இறக்கினா னல்லாஹ்
படிப்படியாய்ப் பிரித்தே பகுதி – 17:106 Continue reading
குர்ஆன் குறள்
வெற்றி பெறார் குற்றவாளிகளெனத் திட்டமாய்க்
கூறினான் யூனூஸ் 17ல்
அச்சம்கவலையற்ற அவ்லியாதமை மெச்சுறா னல்லாஹ்
மிச்சம்காண் யூனூஸ்62 முதல்
ஹைகூ கவிதைகள்….
சாறிகள்
ஆடையான சாறிகள்
நடைப் பிணமாகி
பாடையேறின அடித்தட்டில்!
பிரேக் டான்ஸ்
டான்ஸ் என்ற பெயரில்
நவீன உடல் முறிப்பு
பிரேக் டான்ஸ்
-நிஹா -
குர்ஆன் குறள்
அகிலத்தார்க்கு நினைவூட்டலேயன்றி வேறில்லை யிதென
புகலுதே அல்கலாம் 52
துதிப்பீரே ரப்பின் திருப்பெயர் கொண்டு
விதித்தானே ஹாக்கா கடை Continue reading
நற்சிந்தனை!
நபி இபுறாஹீம் அலைஹிஸ ஸலாம் அவர்களுக்கு சொந்தமானவர்கள் என அல்லாஹ்வால் கூறப்பட்டவர்கள்
1. அவர்களுடைய காலத்தில் அவர்களைப் பின்பற்றிய கூட்டத்தினர்
2. மேலும் எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள்
3. முஃமின்கள்
அல் குர்ஆன் 3:68 – நிச்சயமாக மனிதர்களில் இபுறாஹிமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவரைப் பின்பற்றியவர்களும், மேலும் இந்த நபியும், முஃமின்களும்தான். அல்லாஹ் முஃமின்களுக்கு நேசமானவனாக இருக்கின்றான்.
- நிஹா -
ஹைகூ வில் கால்!
கால்
உடலைத் தாங்கி
உலவ உதவுவது. Continue reading
மார்க்கம் பின்பற்றுவதற்கே அன்றி வேறல்ல. மார்க்கத்தை யாரும் காப்பற்றவோ மார்க்கத்தைப் பரப்பவோ தேவையில்லை. அது அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. அவன் நாடியவர்களுக்கு வழிகாட்டுகின்றான். அவனே மார்க்கத்தைப் பினபற்றத் தகுந்தவன் யார் என்பதையும் அறிந்திருக்கின்றான். அல்லாஹ் விரும்பியிருந்தால் அனைவரையும் இஸ்லாமியராக ஆக்கியிருக்க முடியம் என்பதும் அவனது வாக்கே!
மார்க்கத்தைப் பின்பற்றின் மார்க்கம் நமக்குப் பாதுகாப்பாக அமையும். மார்க்கத்தைப் பின்பற்றி முஃமின்களாக வாழ்ந்தால் அல்வாஹ்வே நமக்குப் பாதுகாவலனாக மாறிவிடுகிறான். மார்க்கத்தில் உள்ளவற்றை உள்ளவாறே வெளிப்படுத்துவது அறிந்த அனைவரதும் கடமையே தவிர. மார்க்கத்தைப் பரப்புவது அல்ல. இஸ்லாத்திற்கு எததனை பேர் வந்துள்ளார்கள் என்பதைவிட, இஸ்லாமியர் எத்தனை பேர் இஸ்லாமியராக வாழ்ந்து கொண்டிக்கின்றனர் என்பதே முக்கியம்!
நம் உயிரிலும் மேலாக நேசிக்கப்பட வேண்டிய அண்ணலார் அவர்களுக்கு எத்தனை பேர் முஸ்லிம்களாக இருந்திருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே கூலி வழங்கப்படவுள்ளதாக அல்லாஹ் தன்மாமறையில் கூறியுள்ளமை எண்ணிக்கை முஸ்லிம்கள் அல்லர், உண்மை முஸ்லிம்கள்!
மார்க்கத்தைப் பிரித்துக் கூறுபோட்டுக் கொண்டிருப்போர் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நபிகளாருக்குமே எவ்வித சம்பந்தமும் கிடையாது என அல்லாஹ் கூறியமை அனைவரதும் கவனத்திற்கு உரியது.
– நிஹா –
முஸ்லிம் பெண்களின் முகத்திரை குர்ஆனியக் கோட்பாடல்ல!
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அது இயற்கையோடு ஒட்டி வாழக் கூடியவற்றையே அனைத்து விடயங்களிலும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இம்மார்க்கம், எந்த இடத்திலும் நிர்ப்பந்தத்தை வலியுறுத்தவில்லை. விலக்கப்பட்ட (ஹறாம்) உணவில்கூட விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கின்றது. காரணம் மனிதர் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் வாழ்க்கையைக் கஷ்டத்துக்குள் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே! Continue reading
குர்ஆன் வழியில்…
கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !
இஸ்லாமியர் இறந்து அடக்கப்பட்டால், அவ்வடக்கப்படும் தலத்தைக் கப்ர் என்கின்றோம். நாம் அடக்கப்பட்டு, அடக்க வந்தோர் சில அடிகள் எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கும் போதே கப்ரில், முன்கர் நக்கீர் என்ற மலக்குகள் நம்மிடம் கேள்வியைத் தொடங்கி விடுமாம். அதனால், கப்ரில் நடைபெறவுள்ள, அல்லது நடந்து கொண்டிருக்கும் வேதனைகளைக் குறைப்பதற்காக அடக்கப்பட்ட முஸ்லிமின் வேதனையைக் குறைக்கும் நோக்குடன் துவா என்ற பிரார்த்தனையை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்பது நமது மத்தியில் நடந்து வருவது யாவரும் அறிந்ததே! இதனை நாயகமவர்கள் தனது வாழ்விலும் கடைப்பிடித்து வந்துள்ளமை பற்றி ஹதீஸ் பதிவுகள் நிறையவே இருந்தாலும், குர்ஆனில் அது சார்ந்த வசனமொன்று காணப்படுவது அதன் சிறப்பை, தாற்பரியத்தை, அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக நிறுவ உதவும். Continue reading
ஜிஹாத் !
பாதையில் நடுவிலுள்ள
பள்ளத்தை மூடுவதும் ஜிஹாதே!
மூடிடாவிடினும் பள்ளத்தைக் காட்டிட
நாடியே பழம் கழியினை நாட்டுவதும் ஜிஹாதே!
பலர் காலைக் குத்திக் குதறவுள்ள
முள்ளை அகற்றுவதும் ஜிஹாதே! Continue reading