Category Archives: Religious

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 2:114

 

மேலும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில், அவனின் திருப்பெயர் துதிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்துவதில் முயன்று கொண்டிருப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாக அல்லாமல் அவற்றுள் நுழைந்திட அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.

 
- நிஹா -

Quran kural!

 குர்ஆன் குறள் !

 

குன்னென்றா லாகிடுமாயினு மாறுநாளி லனைத்தும்
உண்டான நுட்பத்தை யுணர்!

புகழனைத்து மாலங்களின் ரப்பு அல்லாஹ்தனக்கு
புகழுமே பாத்திஹா ஒன்று! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல்குர்ஆன் 4:105

அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்!

 
- நிஹா -

Quran Kural!

குர்ஆன் குறள் !

விட்டியாதே கார்மானம் தொட்டிடாதே சேர்மானம்
பட்டிடாத வாழ்வு பெற!

விரும்பியவருட னிருப்பீர் கூறுது குர்ஆன்
விரும்புவீர் நெருக்கத்தை இறை! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 23:62 -

 

எந்த ஓர் ஆத்மாவிற்கும், அதனுடைய சக்திக்கு ஏற்பவே அன்றி நாம் சிரமம் கொடுக்கமாட்டோம். உண்மையே உரைத்திடும் பதிவேடு நம்மிடமுள்ளது. மேலும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.

 

- நிஹா -

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 63:9:

ஈமான் கொண்டவர்களே!

உங்களுடைய பொருள்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் உங்களை வீணாக்கிவிட வேண்டாம்.

மேலும், எவர்கள் அதனைச் செய்வார்களோ, அவர்கள்தாம் நஷ்டவாளர்கள்!
- நிஹா -

Quran Kural!

குர்ஆன் குறள்! 

 

பார்த்திடு பார்த்துப்பின் தாழ்த்திடு பார்வையை
தேர்ந்து தீமைதரா வாறு

அச்சமுங் கவலையு மறவேயொழித்து வாழின்
கச்சிதமா யமையும் வாழ்வு!

Continue reading

A Quranic verse to memorize daily!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

A Quranic verse to memorize daily!

 

அல் குர்ஆன் 53:39

மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததே அல்லாமல் இல்லை.

 

Al Quran 53:39

That man can have nothing, but what he strives for!

 
- நிஹா -