Category Archives: Religious

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 25:52

ஆகவே, நீர் நிராகரிப்போருக்கு வழிப்படாதீர், அன்றி, இதனை (குர்ஆனை)க் கொண்டு நீர் அவர்களிடம் கடின முயற்சியாக முயற்சி செய்வீராக!

– நிஹா -

 

Al Quran 25:52

Therefore listen not to the Unbelievers, but strive against them with the utmost strenuousness, with (Quran).

- niha -

நற் சிந்தனை! 15 நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

நற் சிந்தனை! 15

 

நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

இஸ்லாமியர் தம்மை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மற்ற இனங்களிடமிருந்து ஒதுங்கி வாழும் இனமாக, சமூக இசைவற்ற இனமாக பிறர் கணிக்கும்படியான வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயமாக மாறிவிடக் கூடாது. அப்படி வாழ்தல், இஸ்லாத்திற்குச் செய்யும் அப்படடமான துரோகமாகும்.

இஸ்லாம் ஒரு நடைமுறை மாரக்கம். செய்து காட்டலினால் மக்கள் மத்தியில் அறிமுகமான மார்க்கம். செய்து காட்டல் என்னும் போதே அதில் மறைந்துள்ள உண்மை வெளிப்படையாக விளங்குகின்றது. செய்து காட்டலுக்கு பார்வையாளர் தேவையாக இருக்கின்றது. இங்கு செய்து காட்டல் என்பதில் பார்வையாளர்களைக் கூட்டி ஏதோ ஒன்றைச் செய்து காட்டும் வேலை நடைபெறுவதில்லை. ஆனால், மக்களோடு மக்களாக குர்ஆனின் அடிப்படையில் வாழ்வதன் மூலம் இஸ்லாம் கூறியுள்ள பண்புகளை நமது நடத்தையின் மூலம் வெளிப்படுத்துவதனால் உலகறியச் செய்ய முடியும். உண்மையிலேயே இதுவே சிறந்த தஃவாப் பணியாகவும் கருதலாம். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர் ஆன் 27:81

குருடர்களுக்கு, அவர்களது வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம்முடையம்பிக்ழை வசனங்களைக் கொண்டு ஈமான் (நம்பிக்கை) கொள்பவர்களைத் தவிர, நீர் செவியேற்கச் செய்திட முடியாது. இவர்கள்தாம் முஸ்லிம்கள்.

– நிஹா -

 

Al Quran 27:81

Nor canst thou be a guide to the Blind, from straying: Only those wilt thou get to listen who believe in our Signs, so they submit 

 

- niha -

 

 

 

நற் சிந்தனை 14 உதவி யாருக்கு… புனித குர்ஆன்.

நற் சிந்தனை 14

 

உதவி யாருக்கு… புனித குர்ஆன்.

 

தாய், தந்தையருக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவி செய்யுங்கள். இது அல்லாஹ்வின் அறிவுறுத்தல்.

இறை கடமையான மேற்கண்டவர்களுக்கு உதவியைச் செய்வதில் குறிப்பிடப்பட்ட நான்கு வகையினரில், பின்னனைய இரு சாராரையும் நாம் எங்கும், எப்போதும் நம் வாழ்நாளில் கண்டு உதவி செய்து கொள்ளலாம். அன்பாக நடந்து கொள்ளலாம்.ஆதரவுக் கரம் நீட்டலாம்.அதன் மூலம் இறை கட்டளையை நிறைவுக்குக் கொணரலாம். Continue reading

நற்சிந்தனை! 13 உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்யத் தேவை இல்லை – புனித குர்ஆன்

நற்சிந்தனை!  13

உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்யத் தேவை இல்லை –  புனித குர்ஆன்

இன்று 10.07.2014 மாலை தமிழ் வானொலியில், இஸ்லாமிய நோன்பு திறக்கும் நேர நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சமயப் பெரியாரால் ஹதீஸ் ஒன்றின் விளக்கம் கொடுக்கப்பட்டது.  

அதில் நாயகத் தோழர் ஒருவர் அழுது கொண்டிருந்ததற்கான காரணம் வினவப்பட்ட போது, அந்த சஹாபா தான் பகலில் மட்டுமே நபிகளார் ஸல் அவர்களுக்குப் பணிவிடை செய்து வருவதாகவும், இரவில் தனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்காதது பற்றி நினைவு இரவு வந்ததனால், உறக்கமற்று இருந்ததாகவும், இரவிலும் நபிகளாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தைத் தனக்குத் தந்தருள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றார். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண! அல் குர்ஆன்

 

அல் குர்ஆன் 34:37

உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய பிள்ளைகளோ, உங்களை நம்மளவில் சமீபமாக நெருக்கி வைப்பவர்கள் அல்லர். எனினும், ஈமான்கொண்டு நற்செயல்கள் ஆற்றி வருபவர்களைத் தவிர, அவர்களுக்கு அவர்கள் செய்த செயல்களின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும். அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.

 

- நிஹா -

 

Al Quran 34:37

It is not your wealth nor your sons, that will bring you nearer to Us in degree: but only those who believe and work righteousness – these are the ones for whom there is a multiplied Reward for their deeds, while secure they in the dwellings on high! 

 

- niha -

 

நற்சிந்தனை! 12

நற்சிந்தனை! 12

நமது செயற்பாடுகள் குர்ஆனிய அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ‌வேளை இது!

முஸ்லிம்கள், குர்ஆன் கூறியுள்ளபடி, முழுமையாக இஸ்லாத்துள் நுழைந்து, வாழ்ந்து வருவார்களேயானால், மிகக் குறுகிய காலத்திலேயே உலக மக்களனைவரும், முஸ்லிம்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கி விடுவர். ஆனால், நாம் குர்ஆனிய வாழ்க்கையைத் தவறவிட்டு, மனோ இச்சைகளுக்கு அடிமையாகி, யார் யாரோ கூறுவதைக் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டு வாழ்வது, குர்ஆனிலிருந்து நம்மை தொலைவிற்குக் கொண்டு போய்விட்டது. Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 39:32

ஆகவே, அல்லாஹ்வின் மீதும் பொய்யுரைத்து, இன்னும் உண்மையையும், அது தன்னிடம் வந்த போது பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளருக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

- நிஹா -

 

Al Quran 39:32

Who, then, said more wrong than one utters a lie concerning Allah and rejects the Truth when it comes to him! Is there not in Hell an abode for the unbelievers?

– niha –

 

 

 

Teachings of Lord Buddha!

The Panchshila 

All the religions of the world are based on the fundamental principles of good conduct and prohibit their followers to indulge in the misconduct and misbehavior that may harm the society at large.

So, the Panchshila of Buddha is comprised of the basic teachings of conduct which are as under:

1. No killing Respect for life
2. No stealing Respect for others’ property
3. No sexual misconduct Respect for our pure nature
4. No lying Respect for honesty
5. No intoxicants Respect for a clear mind

- niha -

From Web