Category Archives: Religious

மலக்குகள் என்றால் ஷைத்தான்கள் என்கின்றார் பீஜே !

மலக்குகள் என்றால் ஷைத்தான்கள் என்கின்றார் பீஜே !

அல் குஆன் சூரத்துல் பகறா வசனம் 102 இல் ஹாரூத், மாரூத் ‌என்ற இருவரும் மலக்கயீன், அதாவது மலக்குகள் அல்லது வானவர்கள் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஆனால் பீ ஜைனுல் ஆபிதீன் என்பவர் மட்டும், ஹாரூத், மாரூத் ‌என்ற இருவரும் ஷைத்தான்கள் என்கின்றார். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய வசனத்தில் அனைவரும் அறிந்த சொல்லான மலக்கு என்பதில் தன் கைவண்ணத்தைக் காட்டுகின்றார். Continue reading

Quran Kural

குர்ஆன் குறள் !

தடுப்பவரார் தூயவுணவு அலங்காரம் அடியாருக்கு
கொடுத்திருக்க 7:32இல் நாம்!

ரப்பு தடுத்ததை அறிந்திடுக அஃராப்ஏழில்
தப்பை விடுத்திடுவீர் வாழ்வில்! 7:33

ஊசியின் ஓட்டையுள் ஒட்டகம் போகும்வரை
போகாரே சுவனம் பொய்யர்! 7:40 Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 3:61

ஞானம் உம்மிடம் வந்த பின்னர், அதில் எவரேனும் உம்முடன் தர்க்கம் செய்வாராயின், நீர் கூறுவீராக! வாருங்கள் எங்களது ஆண் மக்களையும், உங்களது ஆண் மக்களையும், எங்களது பெண்களையும், உங்களது பெண்களையும், எங்களையும், உங்களையும் நாம் அழைத்துக் கொண்டு பின்னர் நாம் இறைஞ்சுவோம். ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’

– நிஹா –

Continue reading

சூனியம் ஒரு கண்ணோட்டம்…

சூனியம் ஒரு கண்ணோட்டம்…

சூனியத்தின் பெயரால் அணமைக் காலமாக நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகளும் குர்ஆனும்!

இஸ்லாமியன், தான் எதைச் செய்தாலும், சொன்னாலும், எதற்காவது தீர்வு காண்பதாக இருந்தாலும் குர்ஆனின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என்கின்றான் அல்லாஹ் தன் திருமறையின் மூலம். அப்படிக் குர்ஆனின் மூலம் தீர்வைக் கூறாதவனைக் காபிர் அதாவது நிரகரிப்பாளன் என்கின்றான். Continue reading

‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முகம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

ஆன்சரிங் இஸ்லாம்என்ற தளத்தில் முகம்மதுவின் பாவங்கள்என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

 

இஸ்லாம்மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கம்

‘அல்லாஹ் எவனை நேர்வழிகாட்ட விரும்புகிறானோ அவனுடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்’ 6:125

‘முகம்மதின் பாவங்கள்’ என்ற தலைப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சூரா 47:19 ‘ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக – அன்றியும் உங்களுடைய நடமாட்டத் தலத்தையும் உங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.என்ற இவ்வசனத்தில் முஹம்மது பாவம் செய்துள்ளாரா என்று ‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முஹம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 29:69

மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ, அவர்களை நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 42:15

அதற்காக நீர் அ‌ழ‌ை‌ப்பீராக! நீர் ஏவப்பட்ட பிரகாரம் நிலைத்து நிற்பீராக! அவர்களது மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும் கூறுவீராக! “அல்லாஹ் வேதத்திலிருந்து இறக்கி வைத்ததையே நான் ஈமான் கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமகவே தீரப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ் எங்களது ரப்பும் உங்களது ரப்புமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்ளுக்குமிடையே எந்த தர்க்கமும் இல்லை. அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பக்கமே திரும்பிச்செல்ல வேண்டியிருக்கின்றது.“ Continue reading

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

அல்லாஹ் மனிதர்களுக்கு சிரமத்தை விரும்புவதில்லை. இலகுவையே விரும்புகின்றான். காலத்தை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்துவிட்டு, அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையை உருவாக்குவானா கருளண நாயன் அல்லாஹ்! றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்பட்ட நாட்களில் நோன்பைப் பிடியுங்கள் எனவே கூறியுள்ளான். Continue reading

எது மார்க்கம் ?

எது மார்க்கம் ?

அல்லாஹ் நமக்கு எதைக் கூறியுள்ளானோ அதனையே மார்க்கமாகக் கொள்கின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பது மார்க்கத்தின் அடிப்படை உண்மை. இந்த உண்மையை மறுக்காமல் அதை நிறுவுவதற்கான வழியைத் தேடிக் கொள்வது மார்க்த்தின் இலக்கை எட்டுவது. Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

ல் குர்ஆன் 6:123

இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அதிலுள்ள குற்றவாளிகளை, தலைவர்களாக நாம் ஆக்கியுள்ளோம். அவர்கள் அதில் சதி செய்து கொண்டிருப்பதற்காக! எனினும் அவர்கள் தங்களுக்கேயன்றி சதி செய்திடவில்லை. அவர்கள் உணர்வதுமில்லை. Continue reading