Category Archives: Hinduism

Non Muslims about Islam !

The founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is Muhammed. As regards all standards by which human greatness may be measured, we may well ask, is there any man greater than he? ” Lamartine, Historie de la Turquie, Paris 1854, Vol. 11 pp. 276-2727                         

நன்றியின் மகத்துவம் – சிறப்புக் கண்ணோட்டம்

‘நன்றி’ இச்சொல் மக்களின் வாய்களில் வராத நேரம் ஒன்று இருக்குமாயின் அது வியப்பிற்கு உரியதே. அப்படியான அனைவருக்கும் தெரிந்த, புரிந்த, நடைமுறையில் உள்ள ஒன்றைப் பற்றி நான் என்ன புதிதாக எழுதிவிடப் போகிறேன் என உங்கள் மனங்களில் மோதலை ஏற்படுத்தாது இருந்தால் அது அடுத்து நமக்கு வியப்பைத் தரும் ஒன்றே!

நன்றி பற்றிய அறிவு, நாம் இதுவரை புரிந்து வைத்திருக்கும், நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் அளவுள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா? வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹூவதஆலா குர்ஆனில் பல இடங்களில் நன்றி பற்றிப் பேசியுள்ளான். ஆயினும், நன்றியின் முழுமையான கருத்தை அறிந்துள்ளோமா? அதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பலனை நமக்கு ஏற்படுத்தி உள்ளதா? என்பது பற்றி சிறிது சிந்திக்கத் தூண்டியது புனித மாமறையின் நன்றியால் பெறப்படவுள்ள நன்மை பற்றிய அறைகூவலே. 

Continue reading

குர்ஆன் வழியில் … குர் ஆன் போதனைக்கு மாற்றமான எதுவும் ஏற்கப்படாது.

குர் ஆன் போதனைக்கு மாற்றமான எதுவும் ஏற்கப்படாது !

நாம் புனித குர்ஆன் கூறியவாறு ஆறு காரியங்களில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆறு காரியங்களில் ஈமான் கொள்ள வேண்டியதை அறியவும், உறுதிப்படுத்திக் கொள்ளவும் புனித குர்ஆனே அத்தியாவசிய மாயுள்ளமை நிரூபணமாகிறது. அல்லாஹ் இஸ்லாத்தை நாயகத் திருமேனி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய போதுகூட ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமா தையிபாவைக் கூறும்படி பணிக்கவில்லை. மாறாக ஓதுவீராக எனக் கூறி அறிவை அறிய உதவும் குர்ஆனையே முன்னிலைப்படுத்தி உள்ளான். அத்தோடு வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா முதன் முதலில் குர்ஆனை இறக்கி, அதனைப் போதித்த பின்னரே, இஸ்லாமியர் என்ற வரைவுக்குள் மனிதரைக் கொணர்ந்தான். அத்தோடு அல்குர்ஆன் உரைகல் எனக் கூறி மகிமைப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியும் உள்ளான். Continue reading

குர்ஆன் குறள் – சன்மானம்

சன்மானம் என்பது எந்நோக்கும் இல்லாது
தன்னாலே கொடுக்கப் பெறும்

தன்மானம் இழக்காத சன்மானம் பெறுவது
பின்னாளில் இகழ்வைத் தரா

பெறுமானம் அற்ற சன்மானம் தனக்கு
வருமானம் எதிர்பாரா தீர் Continue reading

குர்ஆன் வழியில்… மறுமைக்குமுன் நிலைநிறுத்துங்கள் தொழுகையை!

மறுமைக்குமுன் நிலைநிறுத்துங்கள் தொழுகையை!

14:31 ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் கூறும் சொல்லால் மிக அழகானவர் !

அல்லாஹ் கூறும் சொல்லால் மிக அழகானவர் !

இங்கு குறிப்பிடப்படும் மனிதர் உடலால் மிக அழகானவர் அல்ல. மாறாகச் சொல்லால் மிக அழகானவர். நல்லவற்றைப் பேசுவோர் எல்லோரும் நமது பார்வையில் சொல்லால் அழகானவராகத் தெரிந்தாலும், மிக அழகானவராக அல்லாஹ்வால் குறிப்பிடப்படுபவர் நமது தெரிவிற்குட்பட்டவர் அல்லர். அப்படியானவர் யாரெனத் தன் திருமறை 41:33 இல் அல்லாஹ் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளான்.’எவர் அல்லாஹ்வின்பால் அழைத்து நற்கருமங்களைச் செய்து, ‘நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளேன்’ என்று கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக அழகானவர் யார்?’ எனக் கேள்வியாக கேட்கின்றான். இதன் உண்மைத் தன்மையை நாம் கீழ்வரும் பந்திகளில் பார்ப்போம். Continue reading

அல் குர்ஆன் 3:167 ஓர் பார்வை…

‘… அன்றைய தினம் அவர்கள் ஈமானின் பக்கமிருந்ததைவிட, நிராகரிப்பின் பக்கமே மிக நெருக்கமாக இருந்தார்கள். தங்களது உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்களது வாயினால் கூறுகின்றனர். மேலும் அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை மிகவும் அறிந்தவன்’ Continue reading

குர் ஆன் வழியில் … குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

18:54 இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்கு ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். எனினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவே இருக்கிறான்.

18:55. மனிதர்களை அவர்களிடம் நேரான வழி வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் ரப்பிடம் பிழை பொறுக்கத் தேடுவதை விட்டும், முன்னோர்களுடைய வழி முறை அவர்களிடம் வருவதையும் அல்லது அவர்களுக்கு முன்னிலையில் வேதனை வருவதையும் தவிர தடுக்கவில்லை. Continue reading

குர் ஆன் வழியில் … உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

மேற்கண்ட கூற்று அல்லாஹ்வால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குக் கூறப்பட்டது. இக்கூற்று புனித குர்ஆன் 10: 109 இல் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் நபிகள் பெருமானாருக்குப் பின்னர் பின்பற்றலில் பல தடைகளை, தடுமாற்றங்களை, தப்பிதங்களை, திசை திருப்பங்களை சந்தித்துள்ளனர். கலீபாக்கள் காலம் ஓரளவு முஸ்லிம்களைக் குழப்ப நிலையில் தள்ளப் படாதவாறு காப்பாற்றி உள்ளது. அதன் பின்னர் இந்நிலையில் சரிவுகள், தளர்வுகள், சங்கடங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம்களில் ஏற்பட்ட படிப்படியான இம்மாற்றங்கள் அவர்கள் பிழையான வழியைப் பின்பற்றிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன Continue reading

குர்ஆன் வழியில் … இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

அல் குர்ஆன் 32:21 – அவர்கள் மீண்டு விடுவதற்காக, பெரிய வேதனைக்கு முன் மிகத் தாழ்ந்த வேதனையை அவர்களை நாம் நிச்சயமாக சுவைக்கச் செய்வோம். இது இறைவனின் கருணையின் வெளிப்பாடு. ஓரே இறை கொள்கையை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக நபிமார்களை, தூதுவர்களை, வேதங்களுடன் அனுப்பி அனைத்துலக மக்களையும் அவ்வப்போது அறிவுறுத்தி, அச்சமூட்டி, எச்சரித்தும் திருந்தாத நிலையிலும் அவன் தனது வேதனையை யார் மீதும் இறக்கி விடுவதில்லை. மாறாக, சிறு வேதனைகளைக் கொடுத்து மக்களை எச்சரித்து அவர்கள் தமது பிழைகளில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பத்தையும், அறிவுரையையும், எச்சரிக்கையாகப் பின்னும் விடுக்கிறான். Continue reading