Category Archives: Hinduism

குர்ஆன் கூறும் ஒழுக்க மாண்பு !

‘ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ இது வள்ளுவர் கூறும் அறநெறி. ‘எந்தத் தந்தையும் தனது குழந்தைக்கு நல்லொழுக்கத்தைத் தவிர மிகச்சிறந்த ஒன்றைக் கொடுத்துவிட முடியாது’. இது மேலைத்தேய அறிஞரான வைற் ஹெட் என்பாரின் கூற்று. இதுபோன்ற பல்வேறு கருத்துக்கள் ஒழுக்கத்தின் விழுப்பத்தை, அதன் இன்றியமையாமையை, அதன் நன்மைகளை எடுத்தியம்புகின்றன.

‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’-68:4. இது புனித குர்ஆனில், இறைவன் தனது திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி வழங்கிய நற்சாட்சிப்பத்திரம். உலகையே உய்விப்பதற்காகத் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மனிதரில் எத்தனையோ சிறப்பம்சங்கள் நிறைந்திருந்தன. அவைகளில் எதனையும் பற்றிக் கூறாது உயர் குணத்தைப் பற்றி மட்டும் சொல்வதிலிருந்து ஒழுக்கத்தின் பெருமையும், அதன் இன்றியமையாமையும், அதன் உயர்வும், அதன் நன்மைகளும் தெரிய வருகிறது. அந்த வகைச் சிறப்பம்சங்கள் பொருந்திய உயர் குணமாய், அல்லாஹ்வே பெருமைப்படுத்தும் ஒழுக்கம் பற்றிக் குர்ஆன் கூறுவதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். Continue reading

ஈமான் கொண்டு நற்செயல் செய்தல் …

ஈமான் கொண்டு நற்செயல் செய்தல் என்ற இத்தொடரும், அதன் நன்மைகளும் பற்றிப் புனித குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிச் சென்றுள்ளது. அல்லாஹ் இந்தளவு முக்கியத்துவத்தை, ஏன் இவ்விரு செயற்பாடுகளுக்கும் கொடுத்துள்ளான் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், மனித வர்க்கத்துக்கு வல்ல அல்லாஹ் வழங்கியுள்ள அளவற்ற அருட்கொடைகளும், அதன் பயன்பாடுகளும், அதனால் பெறப்படவுள்ள நன்மை தீமைகளும் அறிவுகளும், ஒழுக்கங்களும், இன்ன பிறவும் தெரிய வரும். இத்தகு நன்மைகளை எழுத முயல்வது, இமயத்தை ஊசித் துளையுள் நுழைத்துவிடும் செயலே! ஆனால், அதனை அறியும் முயற்சியில் ஈடுபடின் வல்ல அல்லாஹ் அதனை இலகுவாக்கி நமது முயற்சிகளுக்கு உந்துதலைத் தருவான் என்பது அசைக்க முடியா உண்மையும் கூட. காரணம், அல்லாஹ் நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி நிர்ப்பந்தித்துச் செல்பவனல்ல. இமயத்தை ஊசித்துளையுள் நுழைத்துவிடும் செயல் என நான் கூறியது, நற்செயலின் செறிவும் பருமனும் எந்தளவுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டவே. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பது வழக்கிலுள்ள பழமொழி. முயற்சியாளர் அடைந்த வெற்றிகளும் நாமறிந்தவையே. வல்ல அல்லாஹ்வும் அது பற்றி, நீங்கள் முயன்றதைத் தவிர வேறில்லை எனவும் உங்கள் முயற்சிகள் எண்ணப்படும் அதற்கான கூலியும் உண்டு என்றெல்லாம் கூறியிருப்பது நாம் அறிந்து கொள்ளப் போதுமானதாகும். Continue reading

அல்லாஹ்வால் கேடு என எச்சரிக்கப்பட்டோர்…

குர்ஆன் வழியில் …

அல்லாஹ்வால் கேடு என எச்சரிக்கப்பட்டோர்…

குர் ஆனில் சில இடங்களில் சில தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்வதனாலோ, அன்றி ஏவப்பட்டவற்றை செய்யாமல் விடுவதனாலோ நம்மில் கேடடைவோர் பற்றி வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா கூறியுள்ளான்.அவ்வாறு எச்சரிக்கப்பட்டு,சாபத்துக்கு உள்ளானவர்களாகக் கூறப்பட்டவர்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் இறுக்கம் அடைந்தவர்கள் பற்றி ஆய்வதே இப்பக்கத்தின் நோக்கம். அல் குர்ஆன் 39:22 ‘அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமானவர்கக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்’.

சில விஷமிகள் தங்களுக்கு விளங்காத நிலையில் அறிவதற்கும் மனமின்றி தமது மனோஇச்சைப்படி குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் கொடுத்துத் தம்மையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். குர்ஆனிய வசனங்களின் உண்மைகளை, நன்மைகளை அறிவதற்கு எள்ளளவும் எத்தனங்களை மேற்கொள்வதில்லை. மனோ இச்சை வணங்கப்படும் தெய்வங்களில் மிக மோசமானது என்பது இறைகூற்று. மனோஇச்சை ஷிர்க்கை வருவிப்பது.

இந்தளவுக்கு இறைவனின் சாபத்துக்கு உள்ளாவதற்கு காரணம் என்னவென்று காண்போமாயின் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். இவ்வுலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும், இறக்கப்பட்ட வேதங்களும், கட்டளைகளும் அல்லாஹ்வை நினைவு கூரும்படியே கூறிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அதனைச் செய்யாமல் இருப்பது இறைநிராகரிப்பு என்பதும், அவனது கட்டளைகளை சட்டை செய்யாது விடுவதும், மறுமையில் அவனது  விசாரணைக்கும், அவனது தண்டனைக்கும் பயப்படாத தன்மையைக் கொண்டனவாகவும் உள்ளதே. அந்த வகையில் அல்லாஹ் கூறியமைக்கொப்ப அவனை நினைவுகூராதோர் மறுமையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, நரக நெருப்புக்கு இரையாவதைக் கேடு என வலியுறுத்தவே, அவன் எதிர்வுகூறலாகவும், ஞாபகமூட்டலாகவும் எச்சரிக்கையாகவும், கூறியுள்ளான் என்பது இங்கு தெளிவாகிறது.

அல்லாஹ்வை நினைவுகூருங்கள் எனக் கூறிவிட்டு அவன் வாளாவிராது பல் வேறு உத்திகளையும், நினைவூட்டல்களையும் குர்ஆனில் ஆங்காங்கே பதிவாக்கி உள்ளான். அவைகள் நமது கண்ணில் படாததும், கருத்தைக் கவராததும் துர்அதிர்ஸ்டமே. மேலும், அவனை நினைவு கூர்வதற்கு வழிசமைக்கும் வண்ணம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கி அதில் அவனை நினைவுகூர்வதன் மூலம் தொழுகையை நிலைநிறுத்தும்படி நமக்கு அறிவூட்டுகின்றான்.

தனது குர்ஆன் 20:14 ஆம் வசனத்தில், மேலும், என்னை நினைவு கூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக’ எனக் கூறியிருப்பதில் தொழுகையின் நோக்கம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் தொழுகையின் நன்மை பற்றிக் கூறிய 29:45 வசனத்தில், ‘ … இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையானது மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும்’ என அவனை நினைவு கூர்வதே மிகப் பெரியது எனவும் கூறியிருப்பது நாம் கவனத்தில் இருத்த வேண்டியது. அவனைத் தொழுகையில் நினைவு கூரவில்லை என்றால், முக்கிய கடமையாக்கப்பட்ட தொழுகைகூட பயனற்றதாகி விடுவதோடு நஷ்டத்தையும் ஏற்படுத்திவிடும்.

இதனை அல்லாஹ் குர்ஆனில் ‘வேறோரிடத்தில் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்’ எனக் கூறியே உள்ளான். இவ்வசனம் தொழுவதில் உரிய பயன்பாடான அல்லாஹ்வை நினைவுகூரல் இடம்பெறாத விடத்து ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தும், அ்றிவுரையும் அல்லாஹ்வினதே!

இன்னும், நாம் அவனை நினைவுகூர்வதை இலகுபடுத்தும் பொருட்டு, குர்ஆனில் பல இடங்களில் நமக்கும் அவனுக்குமிடையில் நடந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துள்ளான். அப்படியான வசனங்களில் 7:172 மிகவும் உன்னிப்பாக அறியப்பட வேண்டியது. ‘இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ . ‘ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறியதை நினைவுகூரட்டும். ஏனென்றால், ‘நிச்சயமாக, தாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்துவிட்டோம்’ என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக’.

மேற்கண்ட  இந்த வசனம் மறுமையில் அவனை நினைவு கூராததற்கான தண்டனையில் இருந்து மன்னிப்புக் கிடைக்காத சந்தர்ப்பத்தை நன்கு விளக்குகின்றது. அச்சமயத்தில் எந்தச் சாக்குப் போக்குகளுக்கும், சாட்டுகளுக்கும் இடம் தராதவாறு அல்லாஹ் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ளமை நம் கையறு நிலையைத் தெட்டத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அதனாலேயே அவன், தன்னை நினைவு கூராதவர்களை இதயம் இறுக்கமடைந்தவர்களாக விமர்சிப்பதோடு அவர்களுக்குக் கேடுதான் எனவும் சபித்துள்ளான். ஆதலின் நாம் அவைகளை உணர்ந்து மறுமைக்கு ஆயத்தமாவோமா?

– நிஹா -

அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

குர்ஆன் வழியில் …

அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

அல்லாஹ் அனுமதியாதது அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். நமக்கு நன்மை போல் தெரிவதில் தீமைகள் காணப்படுவதும், தீமை போல் தெரிவதில் நன்மைகள் காணப்படுவதும் நமக்குப் புலப்படுவதில்லை. தெரிய வரும் காலங்களில் விடயங்கள் நடந்தேறி விடுகின்றன. இங்கு நாம் ஆராயவிருப்பது நாம் அறியாமற் செய்பவை அல்ல. அறிந்து கொண்டே, அதாவது அல்லாஹ் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டே ஒன்றைப் பின்பற்றுவது. இச்செய்கை மிகப் பாரதூரமானதும், அச்செயலைத் தானாகச் செய்பவர் அல்லாஹ்வைப் போன்று காரியமாற்றுவதாக இருப்பின், அல்லது தனது மனோ இச்சைப்படி நடப்பவராக இருந்தால் அது (ஷிர்க்கை) இணைவைத்தலை வருவிக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விடும். Continue reading

குர் ஆன் குறள்

1. பார்த்திடு பழுதிலாதறி பகறா 256
மார்க்கத்தில் பலவந்த மிலை

2. பொதிந்துள திறைசக்தி பொருட்க ளனைத்திலும்
பதிவையறிய பகறா 259

3. மன்னித்தலும் நல்வார்த்தையும் நனிசிறந்தன நாளும்
துன்பந்தொடர் தர்மத்தை விட Continue reading

இஸ்லாம் ஓர் நடைமுறை வாழ்க்கைத் திட்டம்!

இன்றைய உலகில், கல்வியின் போக்கை அவதானிக்கும் எவரும் மக்கள் தேவையினையே கருத்திற் கொண்டு பாடத்திட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆரம்ப காலங்களில் ஓரிரு துறை தவிர்ந்த அனைத்தும் பொதுக் கல்வியாகப் கற்பிக்கப்பட்டன. கற்கப்பட்டன. இந்தவகைக் கல்வி பெற்றவரிடமிருந்தே எல்லா வேலைகளும், சேவைகளும் பெறப்பட்டன. இதனால் உரிய, எதிர்பார்த்த பயன்பாடு அமைவதில் பல்வேறு தடைகளும் தடங்கல்களும், இலக்கை எட்ட முடியா நிலைகளும் இனங் காணப்பட்டன. பின்னர் அவ்வத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்தம் துறைசார் பயிற்சிகள் தொழில் செய்யும் காலங்களின் போதே வழங்கப்பட்டன. (தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழில் போன்ற ஒன்றிரண்டில் இந்நடைமுறை இன்னும் பின்பற்றப்படுகின்றது.) பின்னர் படிப்படியாக இந்நிலைமாறி அவ்வவ் துறைசார் கல்வி முறைகள் ஓரளவு அறிமுகமாயின.

இவைகூட முழுஅளவில் அமையாததால் சிறந்த துறைசார் பணியாளர்களைப் பெறுவதில் முன் அநுபவம் கோரப்பட்டது. இந்நிலை பிரச்சினைகளுக்குத் தீர்வாகவல்லாமல் பிரச்சினையாகவே உருப்பெற்றது. பணி வழங்கப்படாது ‘பணி முன்னனுபவம்’ பெறுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகக் காணப்பட்டது. பின்னர் பாடசாலை விட்டோரைத் தெரிவுசெய்து ‘தொழில் முன்பயிற்சி’  Apprenticeship வழங்கப்பட்டது. அப்பயிற்சிகளின்போது சிறு ஊதியமும் வழங்கப்பட்டதுடன், அவ்வகைப் பயிற்சி பெற்றோருக்கே தொழில் தர தொழில் முகவர்கள் முன்வந்தனர்.

இதென்ன தலையங்கத்துக்குச் சம்பந்தமில்லாது கட்டுரை போகின்றது என்ற கேள்வி உங்கள் மனதை அரிப்பதைக் காண்கின்றேன். இதை நான் எழுதியது நடைமுறைச் சாத்தியத்தின் அவசியம், அவசரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை மனதிற்குக் கொண்டு வந்து. அதன் மூலம் கட்டுரையை விளங்கிக் கொள்வதை இலகு படுத்துவதுமேயாகும். Continue reading

குர்ஆன் வழியில்… பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போவது என்னவோ உண்மைதான். அதனை யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் பல வருடங்களுக்கு முன்பு கடல் இருந்த இடம் வேறு, அது தற்போது இருக்கும் இடம் வேறு. தூரத்தில் இருந்த கடல் நம்மை நோக்கி மிக அண்மித்து வந்து கொண்டிருக்கின்றது. நிலத்தின் அளவு வரவரக் குறைந்து கொண்டே போவதை சாதாரண கண்களினாலேயே காணக் கூடியதாயுள்ளது. Continue reading

உங்களுக்குள்ளேயே நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

கட்டுரையுள் நுழையுமுன் கற்றுக்கொள்ள சில:

54:17,22,32,40 – மேலும், நாம் திட்டமாகக் குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே படிப்பினை பெறுவோருண்டா?
8:24 நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனது இதயத்திற்கும்         மத்தியில் சூழ்ந்து இருக்கின்றான்.
7:7 நிச்சயமான நாம் மறைந்திருக்கவில்லை.
42:11 அவனைப் போன்று எப்பொருளும் இல்லை.
2:152 என்னை நினைவு கூருங்கள், நான் உங்களை நினைவு கூருகின்றேன்.
2:286 நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைக்கிறவனின் அழைப்புக்கு பதில் கூறுவேன்.  Continue reading

அனைத்துலக உய்வுக்கான ஓரே அரிய யாப்பு !

எந்தத் தலைப்புக்குள்ளும் அடக்கிக் கொள்ள முடியாத ஓர் அற்புதப் படைப்பான யாப்பில் காணப்படும் அதியுயர் பண்பான உலகச் சட்டம் பற்றியது, இப்போது நான் எழுத முனைந்திருப்பது. எப்படியாயினும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற உலக நியதிக்கொப்ப ஒரு தலையங்கத்தைத் தாங்கி நிற்கிறது, இச்சிறு ஆக்கம். இத்தலையங்கம் உலக உய்வு என்பதைத் தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. Continue reading

குர்ஆன் வழியில்… நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

மேற்கண்ட தலைப்புக்கு உரிமையாளன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா. அவன் தனது புனித மாமறையில் காலம் என்ற பெயரிலான 103ஆவது அத்தியாயத்தில் 2ஆம் வசனமாக இதனைக் கூறியிருக்கிறான். முதலாவது வசனம் காலத்தின் மீது சத்தியமாக என சூழுரைப்பது. 3ஆம் வசனம், இரண்டாம் வசனத்துக்கு விதிவிலக்கு. அதாவது, ‘ஈமான் கொண்டு, நற்செயல் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் உபதேசித்தும் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர’ என்ற விதிவிலக்கைக் கூறுவது. 114 அத்தியாயங்களைக் கொண்ட புனி குர்ஆனில் மூன்றே வசனங்களையும், ஓரே விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றது, காலம் என்ற சூரா. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைக் கூற அல்லாஹ் மூன்று சிறிய வசனங்களுடன், தனது சத்தியத்துடன் ஓர் அத்தியாயத்தை இறக்கி இருக்கிறான் என்பது, இறக்கிய அவ்விடயத்துக்கு எந்தளவு முக்கியத்துவத்தை அவன் அளித்திருக்கிறான் என்பதை விளக்குகின்றது. மனிதன் நஷ்டத்தில் இருப்பது அல்லாஹ்வுக்கு உகப்பான காரியமல்ல என்ற அவனது கருணையாலேயே அந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் அவனது விருப்பத்துக்கமைய நாம் நஷ்டமாகாத தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிறு ஆக்கம் வெளியாகிறது. Continue reading