வாயைப் போற்றி நோயைத் தவிர்,
வேரை அறுத்து வியாதியை அழி.
தாயைப் பேணும் பண்பினை வளர்,
ஊரையும் பேரையும் உயர்த்திடேல் துயர்.
வாரை இழந்தால் செருப்பும் இழியும்,
வேரை அழித்தால் மரமும் அழியும். Continue reading
வாயைப் போற்றி நோயைத் தவிர்,
வேரை அறுத்து வியாதியை அழி.
தாயைப் பேணும் பண்பினை வளர்,
ஊரையும் பேரையும் உயர்த்திடேல் துயர்.
வாரை இழந்தால் செருப்பும் இழியும்,
வேரை அழித்தால் மரமும் அழியும். Continue reading
குர்ஆன் வழியில் …
முஃமின்களாக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்வோர் சொர்க்கம் செல்வர்!
(A VVIP Visa to Heaven – Allah’s Promise)
வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா தன்னருள் மறையில் ஆங்காங்கே நற்செயல் செய்யும்படியும், நற்செயல் செய்பவர்களுக்குரிய கூலி பற்றியும், அவர்களின் பண்புகள் பற்றியும் கூறிச் சென்றுள்ளான். இது மனித வர்க்கத்தின் மேல் அவன் கொண்டுள்ள கருணை, கரிசனை, காருண்யம், அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும், உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் அமைதி நிலவ வேண்டும் போன்ற இன்னோரன்னவற்றை அடிப்படையாகக் கொண்டதே! Continue reading
குர்ஆன் குறள் – இத்தா அல்லது காத்திருத்தல்
இத்தாவை யறிய எளிதான சட்டங்கள்
சத்தான குர்ஆனில் காண்
இழந்தார்க் கென்றில்லை இத்தா கணவனைக்
கழன்றாரும் காத்தல் கடன்
மீண்டிடும் காலம் நாலுமாசம் மனைவியை
மீண்டுகண்டிட 2-226 பார் Continue reading
குர் ஆன் வழியில் …
மன்னிப்பைக் கைக்கொள்வீராக – நன்மையை ஏவுவீராக!
இத்தலைப்பு ஓர் குர்ஆனிய வசனமே! யாராவது நமக்கு ஏதாவது தீமை, அநியாயம் செய்து விட்டால், அதற்கு வரம்பு மீறாது பதிலடி கொடுக்க அனுமதித்த இடத்திலேயே மன்னிப்பைப் பற்றியும் சிலாகித்துக் கூறியுள்ளான். மேலும், குற்றப்பரிகாரப் பணம் பெறும்படி கூறி விட்டு அதனைத் தர்மமாக்கிடுமாறும் கூறியுள்ளான். அதற்கும் மேல் ஒருபடி சென்று அப்படி மன்னித்துவிடுவோருக்கான கூலி தன்னிடம் உள்ளதாக உத்தரவாதம் தந்துள்ளான். இவையெல்லாம் கூறிய கருணைக் கடலான வல்ல நாயன் அல்லாஹ், மேற்கண்ட வசனத்தில் மன்னிப்பை கைக் கொள்வீராக என்பதுடன் தொடராக நன்மையை ஏவுவீராக எனப் பணித்துள்ளான். Continue reading
குர்ஆன் குறள் – கடன்
கொடுத்தவ ரெடுப்பதும் எடுத்தவர் கொடுப்பதும்
கொடுகடன் முறையின் கடமையதாகும்
எடுத்தவர் கொடுத்திலரென் றெரிந்திட வேண்டா
கொடுத்திட முடியாத போது
கொடுத்தலும் நன்றே எடுத்தலும் நன்றே
கொடுத்திடாது தீமை யெனின்
கொடுத்தலை எடுத்தலை அடுத்தவ ரொருவர்
வடித்திடுக எழுத்தத னில் Continue reading
|
குர் ஆன் வழியில் …
அல்லாஹ்வின் மன்னிப்பும், கண்ணியமான கூலியும் யாருக்கு?
அல்லாஹ்வின் மன்னிப்பு, அவன் நாடியவர்களுக்கு, அவனிடம் உளம் நெகிழ்ந்து, உரியவாறு மன்னிப்புக் கோருவோருக்குக் கிடைக்கும் என்பது நாமறிந்ததே! மேலும், அவனது நற்கூலி, நற்செயல் செய்தவர்களுக்குக் கிடைக்கும் என்பதும் பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்பதே! ஆயினும், இது பற்றி வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவத ஆலாவின் அறிவிப்பொன்று நமது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஆம் அது பெரும்பாலான முஸ்லிம்களால் அடிக்கடி ஓதப்படும் யாஸீன் சூறாவின் 11ஆம் வசனமே. ‘நீர் அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பதெல்லாம், எவர்கள் இந்நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவாகவும் அர்ரஹ்மானை அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குத்தான்.எனவே, அத்தகையோருக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீர் நற் செய்தி கூறுவீராக’ – Continue reading
1. செய்யாவிடில் நீரும்செயப்பட மாட்டீர் அநியாயம்
பொய்யாத குர்ஆன் 2 : 279ல்
2. நேர்வழி யென்ப வேறல்ல அவனதே
சீர்பெறு ஆலஇம்ரான் 17
3. தேடுவீரோ தாழ்ந்ததை சிறந்ததை விடுத்துவேறு
கூவுதே பகறா61 லுமை Continue reading
குர் ஆன் வழியில் …
மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை.
இன்னும் உம்முடைய ரப்பு நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே ஈமான் கொண்டிருப்பார்கள். எனவே, மனிதர்களை அவர்கள் முஸ்லிம்களாகிட வேண்டும் என்று நீர் கட்டாயப்படுத்த முடியுமா? இது அல் குர்ஆன் 10:99 இல் அல்லாஹ் எழுப்பிய கேள்வி. அவன் தனது வேதத்தைப் பரப்புவதற்குக்கூட நிர்ப்பந்தத்தை விரும்பவில்லை. பலவந்தத்தால் சாதிக்கும் காரியங்கள் நிலைப்பதில்லை. விசேடமாக ஈமான் என்ற நம்பிக்கையைப் பலவந்தத்தின் மூலம் அளிப்பதனால் எதிர்பார்த்த இலக்கை எட்டுவதைக் காண முடியாது. பலவந்தத்தின், அல்லது அல்லாஹ்வின் திறமையால் ஏற்பட்ட பலனாகவே இருக்கும். அதனால் உண்மை நிலை வெளிப்படப் போவதில்லை. ஆக அவன் அறிவு பூர்வமாக ஈமான் ஏற்படுவதையே விரும்பி இருக்கிறான். அத்தோடு, மற்றைய படைப்புக்களைப் போலல்லாது மனிதனுக்கு அவன் பிரித்தறியும் அறிவான ஆறாவதறிவைக் கொடுத்து, பூரண சுதந்திரத்தையும் அளித்துள்ளான். நன்மை எது? தீமை எது? என்பதைக் கண்டறியும் உரிமை அவர்களிடமே விடப்பட்டுள்ளதால், மறுமையில் அவரவர் செய்தவற்றுக்குரிய கூலி கொடுப்பதில் தயவு தாட்சன்யம் இருக்காததுடன், அதனை யாரும் எதிர்பார்க்கவும் இயலாது. தாமே தம் நிலையை நன்கு அறிந்து கொள்வர். Continue reading
குர் ஆன் வழியில் …
அல்லாஹ் நமது தீமைகளை அகற்றுவானா?
இந்த வினாவுக்கு நேரடியான பதிலைத் தரும் புனித குர்ஆன் வசனமொன்றை உங்கள் முன் சமர்ப்பித்து கட்டுரையைத் தொடர்வோம். அல் குர்ஆன் சூரா முஹம்மது 47 வசனம் 2. ‘ இன்னும் ஈமான்கொண்டு, நற்செயல்களையும் ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கி வைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களே அவர்களின் தீமைகளை, அவர்களைவிட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ Continue reading