Category Archives: Hinduism

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் சுபுஹானஹுவதாலா தனது திருத்தூதரும், இறுதித் தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை மனிதவர்க்கத்திற்கு மாபெரும் அருட்கொடையாக கொடுத்தருளினான். இவ்வருட் கொடையான திருக்குர்ஆன், ஊழிவரை செல்லுபடியாகக் கூடிய முறையில், அழகான இலகு நடையில், தெளிவாக, பாமரர் முதல் பண்டிதர் வரை புரிந்து கொள்ளக் கூடிய தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவாறு இறக்கப்பட்டுள்ளது. இது கருத்தாழமிக்கது. ஞானம் நிறைந்தது என அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுகின்றான். இது முழுக்க முழுக்க சீரான, செழிப்பான, முறையான, நேரான வாழ்க்கையை மானுட வர்க்கம் மேற்கொள்வதற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் முன்னை நாட்களில் இறைநெறியை ஏற்று வாழ்ந்து வெற்றி பெற்றோரினதும், ஏற்காது முரண்டுபிடித்ததனால் அழித்தொழிக்கப்பட்டவர்களினதும் வரலாறுகளையும் கூறி அறிவுறுத்துகின்றது. Continue reading

சுகக் குறள்

சுகக் குறள்

உண்பதற்கு வாழ்வோரும் வாழ்வதற்கு உண்போரும்
இன்பம் துய்ப்பர் ஒப்ப

சுண்ணமுள்ள உணவு உன்னன்னத்தில் அளவாய்
தின்றுவர என்பு பலமாம்

நார்ச்சத் துணவு நலன்தரும் நம்முடலுக்கு
மலச்சிக்கல் வாராது தவிர்த்து Continue reading

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

தமிழில் இலக்கங்களுடன்

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

மேற்கண்ட பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வதையே தமிழர்கள் தம் வாழ்த்தாகக் கொண்டிருந்தனர் என்பதிலிருந்து அவர்கள் வாழ்ககையின் தரத்தை, மனோபாவத்தை அறிந்து கொள்ளலாம்.

– நிஹா -

செல் குறள் செல் குரல் !

செலவின்றிச் செய்தி செக்கன்களில் செகமெங்குஞ்
செல்வதே செல் விந்தை

நேரமும் மீந்தன தூரமும் தொலைந்தன
கரத்தமை செல் போனால்

சுருங்கிய துலகமென்பர் முருகன் வாயினுள்
சுருக்கினர் இன்றோ செல்லுள் Continue reading

குர்ஆன் குறள் – தக்வா அல்லது இறையச்சம்

 

பயபக்தி யுடையோர்க்கு பயன்மிகு வழிகாட்டும்
பயகம்பர் வேதம் 2-2

பயந்திடுவீர் அல்லாஹ்வை மறுமையின் சந்திப்பை
உயர்ந்திடுவீர் 2-203ல் கண்டு

அஞ்சிடுக றப்பை அறிந்திடுக படைப்புதனை
எஞ்சியுள்ளது 4-1ல் காண் Continue reading