கோர்ட்டில் கூட இந்த வசனங்களில் ஒன்றைக் கேட்ட போது நான் அப்படியே மலைத்து செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். சட்டத்தின் காவலர்களான அதிசிரேஷ்ட நீதித் துறையினரின் வாய் உமிழ்ந்த விஷத்துளிகள் இவை என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா?. இந்நிலை சட்டத்தின் தவறா? சட்டத்தை இயற்றியோரின் குற்றமா? சட்டங்களைத் தம் நன்மைக்காக கையாள்வோரின் கையாலாகாத்தனத்தால் ஏற்படும் கொடுமையா? மக்களின் முடியாமையின் மனோநிலை வெளிப்பாடா? அடக்குமுறையாளரின் அநியாயங்களின் விதைப்பா? கொடுமையை எதிர்க்கும் கொள்கைக்கு அடிக்கப்படும் சாவு மணியா? அநியாயத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அடிக்கப்படும் இறுதி ஆணியா? பிரித்தாளும் பிரபலங்களின் வஞ்சகமா? உரிமைகளைத் தட்டிப் பறிப்போருக்கு முண்டு கொடுத்து உற்சாகப்படுத்த உருவாக்கப்பட்ட ஊக்கிகளா?
இத்தன்மை நிலவும் எந்த நாடும் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. எந்தச் சமூகமும் சிறப்பாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. புத்தரையும், யேசுவையும், முஹம்மதையும் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாடுகளில் கூட இந்நிலைதான் என்பது வெட்கக்கேடான மனித அவலத்தை கோடிட்டுக் காட்டுகிறது. காட்டு மாடுகள்கூட சிங்க ராஜாவின் அக்கிரமத்துக்கெதிராக வீறு கொண்டெழும் கண்ணொளிகள் இணையங்களில் இடம் பிடித்துள்ள காலமிது. இந்தக் காலத்திலேதான் இவ்வவலங்கள் இழிகுணம் படைத்த மனித உருவிலான மலந்தின்னி ஆறறிவு மிருகங்களினால் மேடையேற்றப்படுகின்றமை மனித அவலத்தை விளக்க வல்லன. Continue reading