‘ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ இது வள்ளுவர் கூறும் அறநெறி. ‘எந்தத் தந்தையும் தனது குழந்தைக்கு நல்லொழுக்கத்தைத் தவிர மிகச்சிறந்த ஒன்றைக் கொடுத்துவிட முடியாது’. இது மேலைத்தேய அறிஞரான வைற் ஹெட் என்பாரின் கூற்று. இதுபோன்ற பல்வேறு கருத்துக்கள் ஒழுக்கத்தின் விழுப்பத்தை, அதன் இன்றியமையாமையை, அதன் நன்மைகளை எடுத்தியம்புகின்றன.
‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’-68:4. இது புனித குர்ஆனில், இறைவன் தனது திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி வழங்கிய நற்சாட்சிப்பத்திரம். உலகையே உய்விப்பதற்காகத் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மனிதரில் எத்தனையோ சிறப்பம்சங்கள் நிறைந்திருந்தன. அவைகளில் எதனையும் பற்றிக் கூறாது உயர் குணத்தைப் பற்றி மட்டும் சொல்வதிலிருந்து ஒழுக்கத்தின் பெருமையும், அதன் இன்றியமையாமையும், அதன் உயர்வும், அதன் நன்மைகளும் தெரிய வருகிறது. அந்த வகைச் சிறப்பம்சங்கள் பொருந்திய உயர் குணமாய், அல்லாஹ்வே பெருமைப்படுத்தும் ஒழுக்கம் பற்றிக் குர்ஆன் கூறுவதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். Continue reading →