Author Archives: factsbeh

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் சுபுஹானஹுவதாலா தனது திருத்தூதரும், இறுதித் தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை மனிதவர்க்கத்திற்கு மாபெரும் அருட்கொடையாக கொடுத்தருளினான். இவ்வருட் கொடையான திருக்குர்ஆன், ஊழிவரை செல்லுபடியாகக் கூடிய முறையில், அழகான இலகு நடையில், தெளிவாக, பாமரர் முதல் பண்டிதர் வரை புரிந்து கொள்ளக் கூடிய தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவாறு இறக்கப்பட்டுள்ளது. இது கருத்தாழமிக்கது. ஞானம் நிறைந்தது என அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுகின்றான். இது முழுக்க முழுக்க சீரான, செழிப்பான, முறையான, நேரான வாழ்க்கையை மானுட வர்க்கம் மேற்கொள்வதற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் முன்னை நாட்களில் இறைநெறியை ஏற்று வாழ்ந்து வெற்றி பெற்றோரினதும், ஏற்காது முரண்டுபிடித்ததனால் அழித்தொழிக்கப்பட்டவர்களினதும் வரலாறுகளையும் கூறி அறிவுறுத்துகின்றது. Continue reading

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்!

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. Continue reading

பலதும் பத்து !

பலதும் பத்து !

காட்டில் மழை பெய்யலாம்,
நாட்டில் வெள்ளம் போடலாமா?

றோட்டு மேல் றோட்டுப் போட்டால்
வீட்டுக்குள்ளே வெள்ளம் வராதா!

கூட்டில் பறவை வளர்ப்பது சரியெனின்,
கூட்டில் மனிதன் இருப்பது பிழையா? Continue reading

‘ப’ – ‘பா’ ஆகின்றது!

‘ப’ – ‘பா’ ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பெரியார் பற்றிப் பேச்செடுக்க
படைத்தவனைப் பார்த்தேன் நிச்சயமாய் முன்னே!

ப வில் பரதம் பற்றி என்றேனே பரதம்
பேரளவில் வேதம் மேடைதனில் என்கின்றது!

ப வில் பாரதமும் அடக்கமே என்றேன்
பாரதமாண்ட பாதுகை வேறு நிற்கின்றதே! Continue reading

சில முஸ்லிம்களின் முகத்திரை சமூகப் பிரச்சினையா? சமூகத்துக்குப் பிரச்சினையா?

குர்ஆன் வழியில் ..

சில முஸ்லிம்களின் முகத்திரை சமூகப் பிரச்சினையா?         சமூகத்துக்குப் பிரச்சினையா? 

இன்று இந்தப் பிரச்சினையை நாளுக்கு நாள் வளர்த்து, விஸ்வரூபம் கொடுத்து அல்லாஹ்வுக்கும், அவனது இஸ்லாத்துக்கும், அவனது நபிகளான தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கைங்கரியத்தில் சில துவேஷம் கொண்ட நாடுகளும், சில விஷமிகளான மதவாதிகளும் முழுமையாகவே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கு வழியேற்படுத்திக் கொண்டவர்கள் தம்மை தீவிர முஸ்லிம்களாகக் கருதிக் கொண்டுள்ள சில முஸ்லிம் இயக்கங்களைச் சார்ந்தவர்களே! முஸ்லிம்கள் முகத்தை மறைக்கும் பழக்கம் மிக அண்மையில் எம்மவர் மத்தியில் புகுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. Continue reading

பயனென் பத்து !

1. வட்டில் இருந்து பயனென்ன சோறு போட ஆளின்றேல்!

2. கட்டில் இருந்து யாது பயன், கட்டிய மனைவி வீட்டிலின்றேல்!

3. தொட்டில் இருந்தென்ன பயன் குழந்தைப் பேறில்லாதபோது! Continue reading