Author Archives: factsbeh

அறு சுவைகளின் குணம்!

சாப்பிடும் ஒழுங்கு!

முதலில் இனிப்பு. அடுத்து, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, இறுதியில் துவர்ப்பு. இப்படி சாப்பிடுவதனால் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும்.

உண்டபின்….

- தயிரும், உப்பும் கலந்துண்டால், உணவில் கலந்துள்ள வாத, பித்த,         ரசங்கள் எனும் முக்குற்றங்களும் நீங்கிடும்.
- நோய் தோன்றுவதற்கான காரணிகள் அகன்று விடும்.

அறுசுவைகளை உண்டால் மாத்திரம் போதாது, சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- உரிய காலத்தில் உண்ணல்.
- சூரியோதய, அஸ்தமண காலத்தில் உண்பதைத் தவிர்த்தல்.
- கோபம், கவலை, துக்க நேரங்களில் உணவு உட்கொளாது தவிர்த்தல்.
- நின்று கொண்டு, கையை ஊன்றிக் கொண்டு உண்பதை விலக்கல்.

உண்ணலும் திசைகளும்:
- கிழக்கு நோக்கியிருந்து உண்டால் ஆயள் அதிகரிப்பு
- தெற்காயின் புகழ்
- மேற்காயின் செல்வம்
- வடக்காயின் அழிவு

எங்கோ, எப்போதோ வாசித்தறிந்தவை!

- நிஹா -

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகளை ஞாபகமூட்ட அவதரித்த தூதரனைவரும்
தோற்றுப்போன இடமும் அதுவே!

பிரபஞ்ச மனைத்தும் இறை வாக்கால்
பிரயாணித்துக் கொண்டிருப்பனவே!

இறைவாக்கு படைப்பின் மூலம்.
மனித வாக்கு கிடப்பின் அவலம்! Continue reading

அறிந்தவை பத்து!

தற்போதைய தேர்தல் முறை ஒழியும் வரை
நல்ல தலைவர்களைக் காணமுடியாது.

தற்கால அரசியல், மக்களைக் கொன்று 
மக்கள் தலைவராகும் நற்பரிமானம்.

தற்கால விந்தை, மக்களை வஞ்சித்து, உயிரை உறிஞ்சி,
மக்கள் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறுவது. Continue reading

‘ப’ பா ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பக்தர் பற்றிப் பேசுமுன்னே
பக்தியை விற்றுப் பலநாளான கதை கூறுகின்றதே!

ப வில் பக்தர் என்றதுமே பக்தர் என்போர்
பித்தராகிக் கடித்துக்குதறி அலைகின்றன என்றதே!

ப வில் பண்பு என்றேனே பார்க்கலாம் பரதேசிகள் உலகில்
பண்பு பற்றிக் கூற என்னவுளதோ என்றதுவே! Continue reading

குர்ஆன் குரல்!

போதுமானவ னல்லாஹ் பொறுப்பேற்க மிகநல்லவன்
ஓதியுணர இம்றான் 173

அதிபயம்பசி கனிபொரு ளுயிர்நஷ்டந் தந்தெமை
சோதிப்பான் பொறுபகறா 155

கூர்ந்திடில் அவனினைவு கூருவான் நினைவுமை
கூர்ந்துகாண் பகறா 152 Continue reading

அறிந்திட அறவுரை சில…

§ ஏற்கனவே அறிந்திராத, கண்டிராத ஒன்றை ஞாபகத்திற்குக் கொணர முடியாது.

அப்படியானால் குர்ஆனில், அல்லாஹ் அடிக்கடி தன்னை ஞாபகப்படுத்தும்படி கூறுவதை யாரும் ஏன் மனத்திலிருத்தி அம்முயற்சியில் ஈடுபட மறுக்கிறார்கள்!

ஞாபகப்படுத்தும்படி கூறுவதை, குர்ஆனில் பார்த்து இருந்தாலும், அது மனத்திலிருத்தி,  அம்முயற்சியில் ஈடுபட்டிருப்பின், அதற்கான விடையையும் குர்ஆனிலேயே கண்டிருக்கலாம்! கண்டிருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்!  Continue reading