படிப்படியாக பொடியாகிறதா மனித உரிமை!
அடிப்படை மனித உரிமை மீறல்
படிப்படியாக சுக்கான் அற்ற படகாய்
கடிமனங் கொண்டோர் கைகளில் சிக்கி
பொடிப் பொடியாக போகின்ற தய்யோ!
காவி யுடையில் மதத்தின் பெயரால்
கட்டாக்காலிகள் சிலது யாப்பினை மிதித்து
அடுத்தவர் உரிமையை மடுத்திட விழைந்து
கொடுத்திடா சுதந்திரம் பறிப்பது காண்பீர்!
சிறுபான்மை என்பது சிதைத்திட வல்ல
பெறுமதி யற்ற தறுதலைகளு மல்லர்
உறுதுணை யாப்பால் உரிமையும் உள்ளோர்
மறுத்திடும் உரிமை யாருக்கு உண்டோ!
யாப்பால் யாம் பெற்ற மதசுதந்திரம்
கோப்பில் கிடந்து இறப்பதற் கல்ல!
யாப்பது யாப்பை பழம் பேப்பருக்காயல்ல!
காப்பது அரசது கட்டாய கடமை!
சுதந்திரம் என்பது மற்றவர் ஒருவர்
தந்திரம் செய்து பறிப்பதும் அல்ல
சுதந்திரம் என்பது இடையீ டின்றி
சுதந்திரமாக சமத்துவம் பேணல் தானே!
மதங்கள் என்பது பின்பற்று தற்கே
மதங்கள் பின்பற்றல் என்பது அடுத்தவர்
மதத்தைப் பின்பற்றவிடாது தடுப்பதற் கல்ல
சமத்துவம் பேணி பின்பற்றுதல் தானே!
பேணப்படுவதே மதத்தில் பெறு பயன்
பேணர்கள் சுமந்து பழித்திட வல்ல!
ஊணப் படுத்தல் மனஊனம் அடைந்த
ஈனர்கள் செய்யும் இழி செயல் அன்றோ
யாரும் காப்பதற்கல்ல மதங்கள் பெற்றது
பாரில் பண்புடன் வாழ்ந்து பின்பும்
சீர்பெற்று நலம்பல புரிந்து நன்மைபெற்று
நரகினில் உழலாது காப்பதற் கல்லோ!
விடுத்திட ஆளின்றி தடுத்திடும் உளமுமின்றி
தடியர்கள் கையில் பொடிபோல் சிக்கி
விடிவில்லா கருமை படருது தடுத்திட
கடிமனம் தளர்வது குடிகளைக் காக்கும்!
- தேசபக்தன் –