மார்க்கம் பின்பற்றுவதற்கே அன்றி வேறல்ல. மார்க்கத்தை யாரும் காப்பற்றவோ மார்க்கத்தைப் பரப்பவோ தேவையில்லை. அது அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. அவன் நாடியவர்களுக்கு வழிகாட்டுகின்றான். அவனே மார்க்கத்தைப் பினபற்றத் தகுந்தவன் யார் என்பதையும் அறிந்திருக்கின்றான். அல்லாஹ் விரும்பியிருந்தால் அனைவரையும் இஸ்லாமியராக ஆக்கியிருக்க முடியம் என்பதும் அவனது வாக்கே!
மார்க்கத்தைப் பின்பற்றின் மார்க்கம் நமக்குப் பாதுகாப்பாக அமையும். மார்க்கத்தைப் பின்பற்றி முஃமின்களாக வாழ்ந்தால் அல்வாஹ்வே நமக்குப் பாதுகாவலனாக மாறிவிடுகிறான். மார்க்கத்தில் உள்ளவற்றை உள்ளவாறே வெளிப்படுத்துவது அறிந்த அனைவரதும் கடமையே தவிர. மார்க்கத்தைப் பரப்புவது அல்ல. இஸ்லாத்திற்கு எததனை பேர் வந்துள்ளார்கள் என்பதைவிட, இஸ்லாமியர் எத்தனை பேர் இஸ்லாமியராக வாழ்ந்து கொண்டிக்கின்றனர் என்பதே முக்கியம்!
நம் உயிரிலும் மேலாக நேசிக்கப்பட வேண்டிய அண்ணலார் அவர்களுக்கு எத்தனை பேர் முஸ்லிம்களாக இருந்திருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே கூலி வழங்கப்படவுள்ளதாக அல்லாஹ் தன்மாமறையில் கூறியுள்ளமை எண்ணிக்கை முஸ்லிம்கள் அல்லர், உண்மை முஸ்லிம்கள்!
மார்க்கத்தைப் பிரித்துக் கூறுபோட்டுக் கொண்டிருப்போர் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நபிகளாருக்குமே எவ்வித சம்பந்தமும் கிடையாது என அல்லாஹ் கூறியமை அனைவரதும் கவனத்திற்கு உரியது.
– நிஹா –