Author Archives: factsbeh

உடற் பராமரிப்பின் ஒழுங்கு முறைகள்!

உடற் பராமரிப்பின் ஒழுங்கு முறைகள்!

கவனத்திலிருத்த வேண்டிய காலமும் வேலையும்

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. 

இதோ கால அட்டவணை:

விடியற் காலை 3 முதல் 5 மணிவரை – நுரையீரல் நேரம்.

Continue reading

The Dhammapada Translated from the Pali

The Dhammapada !

 

2. Heedfulness!

 

25.  By effort and heedfulness, discipline and self-mastery, let the wise one make for himself an island which no flood can overwhelm. 

 

26. The foolish and ignorant indulge in heedlessness, but the wise one keeps his heedfulness as his best treasure. 

 

- niha -

Quran Kural in Tamil Poem form !

Quran Kural in Tamil Poem form !

குர் ஆன் குறள்!

கூறிடுங்கள் சாட்சி அல்லாஹ் வுக்காக
தேறிடுங்கள் 4:135 கண்டு!

அறிந்திடுவீர் ஈமான் வகைதனை 4:136இல்
புரிந்திடுவீர் ஆமன்து பில்லாஹி! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

அல் குர்ஆன் 9:126

 

 நிச்சயமாகஅவர்கள் ஒவ்வோராண்டும், ஒரு முறையோ அல்லது இரு முறையோ சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா?  அவ்வாறிருந்தும், அவர்கள் தௌபாச் (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை. நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. Continue reading

நற்சிந்தனை! 8 பிறப்பிலேயே நபியாகவும், இறைதூதராகவுமாகி தொட்டிலில் கிடந்தவாறே உபதேசித்த உயிர் வாழும் நபி!

நற்சிந்தனை! 8

 

பிறப்பிலேயே நபியாகவும், இறைதூதராகவுமாகி தொட்டிலில் கிடந்தவாறே   உபதேசித்த உயிர் வாழும் நபி!

உலக வரலாற்றில் புதுமைகள் பலவற்றை நாம் கண்டும், கேட்டும். வாசித்தும் அறிந்து வைத்துள்ளோம். அவை படைப்புகளில் புதுமை, படைப்புகளின் புதுமை, பிறப்பில், இறப்பில், உயர்வில் என வளர்ந்து கொண்டே போகும். நாம் இங்கு காண விழைவது, பிறப்பில் புதுமை, பிறந்தவுடன்புதுமை, இறவாப் புதுமை என்ற அத்தனை புதுமைகளையும் ஒரு சேரக் கொண்ட ஓர் உத்தமர் பற்றியதே! Continue reading

சித்தர்கள் கண்ட யுக்திகள்! நோயை அறிய சிறுநீர் சோதனை!

 

சித்தர்கள் கண்ட யுக்திகள்!

நோயை அறிய சிறுநீர் சோதனை!

சிறுநீர்ப் பரிசோதனை முறை


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள். 

எண்ணெய்த் துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
Continue reading

ஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்!

ஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்!

 

படித்தோரெல்லாம் அறிந்ததுமில்லை,
படியாதோரெல்லாம்
அறியாதிருந்ததுமில்லை

அறிதலற்ற வாழ்வு,
எந்த சீவராசிகளினதையும்விட
உயர்ந்ததல்ல.

மனிதவாழ்வின் உயர்வே
அறிதலில்.
அறிதல் பேரின்பம்.

 

- நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 3:126 

இன்னும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் அமைதி  பெறுவதற்காகவுமே அன்றி அல்லாஹ் இதனை ஆக்கவில்லை. மேலும் மிகைத்தோனும்,  ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர உதவி இல்லை.

Continue reading

இலக்கிய இன்பம்!

இலக்கிய இன்பம்!

 

நளன் – தமயந்தி காதை!

 

நள மகாராசன் வாழ்வில் கலி பிடித்து அவனை வாட்டியது. கட்டிய குற்றத்திற்காக அவன் அருமை மனைவி தமயந்தியும் மகனும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வருகின்றது. வனத்தில் கட்டியிருந்த தனது ஆடையினையும், கலியின் சூழ்ச்சியால் இழந்து. மனைவியின் ஆடைக்குள் தன் மானத்தைக் காத்துக் கொள்கின்றான். நடுநிசியில், மனையாளைப் பிரியும் மனத்தோடு, ஆடையில் பாதியை கிழித்துக் கொண்டு வெளியேறுகிறான்.

கண் விழித்த போது கணவனைக் காணாத பெண் மயிலாள் செய்வதறியாது. அவனைத் தேடு பணிகளில் ஈடுபடுகின்றாள். கலியின் வலியால், அவனது உருவமும் மாற்றமடைந்து விட்டதால் தேடிக் கண்டு பிடித்தல் என்பது வெற்றியளிக்காது என்பதை உணர்ந்து தந்திரம் செய்கிறாள்.

பறை அறிவிப்பவனை அழைத்து தெருத் தெருவாக கீழ்க் கண்ட பாடலைப் பாடும்படி கூறுகின்றாள். அந்தப் பாடலைப் பாடினால், அது தன் கணவன் நளனின் காதுகளை எட்டுமாயின் அவன் பதில் தர வருவான். அதன் மூலம் அவன் உயிரோடு எங்கிருக்கின்றான், என்பதை உறுதிப்டுத்திக் கொள்ளலாம் என்பதுவே!

அப்பாடல்:

கானகத்துக் காதலியை காரிருளில் கைவிட்டுப்
போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று 
சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன் செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்.

தன்னைக் கண்டு கொள்வதற்கான தந்திரோபாயமே இது  என்பதை அறிந்த நளனும், தன்னையும் பிடி கொடுக்காது அதற்கு பதில் கொடுக்க முனைகின்ற காட்சியே பின்வரும் செய்யுளாக வருகின்றது.

ஒன்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டைவிதியின் பயனே காண் – தண்டளரப் பூத்தாம
வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தான் என்றையுரேல் நீ!

 

தமயந்திக்கு இச்செய்தி அறிவிக்கபபட்டு, தன்னருமைக் கணவன் உருமாறிய நிலையில் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்கின்றாள்.

ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னர் படித்ததில் பிடித்து மனத்தில் இருந்து சுவைத்து மகிழ்ந்தது.

 

- நிஹா -