Author Archives: factsbeh

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 7:32

 

‘அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தி இருக்கும் அலங்காரத்தையும், உணவில் தூய்மையனவற்றையும் தடை செய்தவர் யார்? எனக் கேட்பீராக! அவை இவ்வுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு. மறுமை நாளில் பிரத்தியேகமானதாகும்’ என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தினருக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.

- நிஹா -

 

Al Quran 7:32

Say: Who hath forbidden the beautiful (gifts) of Allah, which He hath produced for His servants, and the things, clean and pure, (which He hath provided) for sustenance? Say: They are, in the life of this world, for those who believe, (and) purely for them on the Day of Judgment. Thus do We explain the signs in detail for those who understand.

 

 – niha -

 

 

 

 

 

 

- நிஹா -

நற் சிந்தனை! 9 ஈகையில் நோன்பும் தாயும்!

நற் சிந்தனை!  9

 

ஈகையில் நோன்பும் தாயும்!

 

ஈகையை  உணர்த்திடும் றமழான்!

ஈகையே  பெண்மையின்  இலக்கணம்!!

 

குருதி யால் விளைத்து

குருதியை இழந்து

சுருதியும் சேர்த்து

குருதியை ஊட்டியதால்

 

அருமைத் தாய்

பெருமை பெறுகிறாள்

நோன்பிற்கும் மேலாய்!

 

சுருதி –வேதம்

 

அதனால்தான் அண்ணலார் தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என நவின்றார்களோ!

 

- நிஹா -

இழிவு வழியால் அழிவின் விளிம்பில்…

இழிவு வழியால் அழிவின் விளிம்பில்…

 

இலங்கை மணித்திரு நாட்டில்
இது போலொரு காலம்
என்றும் இருந்ததில்லை
ஈனர்களின் இழி செயலால்!

விளங்காத மூடர்களால்
களங்கமிலா முஸ்லிம் இனம்
கலக்கமுற்று நிற்கின்றனர்
விலக்கிடுவார் யாரோ! Continue reading

தானமும் சுவனம் பெற உதவுவோரும்!

தானமும் சுவனம் பெற உதவுவோரும்!

தானம் இறை சந்நிதானத்திற்கே நம்மைக் கொண்டு செல்கின்றது. தானங் கேட்பவர் மானங் கெட்டவர்களாக மதிப்பிறக்கிப் பேசுகின்றோம்.

உண்மையில், தானம் பெறுவதற்கு யாருமில்லாத நிலையைச் சற்று சிந்தியுங்கள். தானம் பெறுவோர் இன்றேல், தானத்தின் பயனை எவ்வாறு பெறுவோம்!

ஆதலால், தானங் கேட்க வருவோரை ஈனர்களாகக் கருதி வீணாக ஏசாது, வான வாழ்வின் பயனை தானம் தர  வந்தவர்களாக மதித்து மகிழ்விப்போம்!

 

- நிஹா –

ஹைகூ வில் கவிதைகள்!

ஹைகூ வில் கவிதைகள்!

 

பாராத கண்ணைப் போன்றதே,
பகுத்துப் பாரா
பகுத்தறிவும்.

மனிதன் பகுத்தறிவால் மட்டுமே
மற்றைய உயிரினங்களைவிட
மேலானவன்.

பயன்படுத்தப்படாத பகுத்தறிவு
வெளிச்சத்தைக்
காணாத பயிரே!

மனித அறிவு பயன்படுத்தப்பட்டால்
அகிலமனைத்தும்
அவன் காலடியில்.

 

- நிஹா -

வெண்புறா! சமாதானப் புறா!

 

வெண்புறா! சமாதானப் புறா!

 

புவனம் முழுதும் நிறைந்து

கவனம் சிதறாது பறந்து

ஆவணம் கொணர  விரையும்

சமாதானம் கூறும் புறாவே!

புராதனமான  உனது தூதை

சாதனமாக்க மறந்தனரோ!

வேதனை சூழ் வையத்திலே!

 

- நிஹா -

 

 

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

6:125 – அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான். மேலும். எவரை வழி தவறச் சயெ்ய விரும்பகின்றானோ, அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடியானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளதாவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். Continue reading

Medical tips – Boils

Medical tips – Boils

கட்டியைக் கரைக்கும் சப்பாத்திக்கள்ளி..!



உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாகவெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

Continue reading