Author Archives: factsbeh

இஸ்ரேலுக்கு எதிராக யுத்தப் பிரகடணம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் அரபு நாடுகள் !

இஸ்ரேலுக்கு எதிராக யுத்தப் பிரகடணம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் அரபு நாடுகள் !

 

இதயம் வலிப்பதனால்
இதயமற்றோரின் கொடுமையிலிருந்து
உதயம் கிடைக்க போவதில்லை!

எழுதிக்கொண்டு
பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளோமென
புழுதியுடன் குருதி ஒட்டியுள்ள
அழுது கொண்டிருக்கும்
அம்முகங்களின் தொடர்கதை
அழுது வடித்துக் கொண்டிருக்கின்றது
நமது ஆற்றாமையைக் கூறி! Continue reading

நற்சிந்தனை! 12

நற்சிந்தனை! 12

நமது செயற்பாடுகள் குர்ஆனிய அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ‌வேளை இது!

முஸ்லிம்கள், குர்ஆன் கூறியுள்ளபடி, முழுமையாக இஸ்லாத்துள் நுழைந்து, வாழ்ந்து வருவார்களேயானால், மிகக் குறுகிய காலத்திலேயே உலக மக்களனைவரும், முஸ்லிம்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கி விடுவர். ஆனால், நாம் குர்ஆனிய வாழ்க்கையைத் தவறவிட்டு, மனோ இச்சைகளுக்கு அடிமையாகி, யார் யாரோ கூறுவதைக் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டு வாழ்வது, குர்ஆனிலிருந்து நம்மை தொலைவிற்குக் கொண்டு போய்விட்டது. Continue reading

நற்சிந்தனை ! 11 ஆற்றல்களின் வெளிப்பாடு அமரத்துவத்தைத் தரும்!

நற்சிந்தனை ! 11

 

ஆற்றல்களின் வெளிப்பாடு அமரத்துவத்தைத் தரும்!

நமது ஆற்றல்கள் உலக மாந்தரின் உய்வுக்காக ஏதாவதொரு வகையில் வெளிப்படுத்தப்படுவதே நாம் மனிதனாகப் பிறந்ததன் முக்கியத்துவத்தை நிறைவு செய்வது!

இம்முக்கியத்துவமே, நம்மை மறுமை வாழ்வுக்கும் தயார்படுத்தி விடும்!

இதையே அல்லாஹ். ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்வோர் சுவனத்துள் நுழைந்து விடுவர் என்கின்றான். சுவனத்தின் அனைத்து வாசல்களும் திறந்தே இருக்கும். இதனாலேயே இஸ்லாம் சாந்தி மார்க்கமாகின்றது.

சுவனத்துள் நுழைந்து விடுவர் என்பது பல்வேறு உண்மைகளை உள்ளடக்கி உள்ளது. உய்த்துணர்தல் அவசியம்.

 

- நிஹா -

அறிவோம் அறிவை! அறிவால்!

அறிவோம் அறிவை! அறிவால்!

 

” மனித அறிவு வளர்ந்து முதிரும் போது இறை பற்றிய உண்மைகள் வலுப் பெறும், இறை அச்சமும் வெளிப்படும்.

ஆக மனிதர் புனிதர் ஆவார். இதனாலேயே அறியும்படி இறைவன் அறைகூவுகின்றான். அறிவோம் அறிவை, அறிவால்!

 

அறிவால் அறியும் அறிவை அறிந்தவனே எல்லாம் அறிந்தவனாகின்றான்.

- நிஹா

-

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 39:32

ஆகவே, அல்லாஹ்வின் மீதும் பொய்யுரைத்து, இன்னும் உண்மையையும், அது தன்னிடம் வந்த போது பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளருக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

- நிஹா -

 

Al Quran 39:32

Who, then, said more wrong than one utters a lie concerning Allah and rejects the Truth when it comes to him! Is there not in Hell an abode for the unbelievers?

– niha –

 

 

 

Teachings of Lord Buddha!

The Panchshila 

All the religions of the world are based on the fundamental principles of good conduct and prohibit their followers to indulge in the misconduct and misbehavior that may harm the society at large.

So, the Panchshila of Buddha is comprised of the basic teachings of conduct which are as under:

1. No killing Respect for life
2. No stealing Respect for others’ property
3. No sexual misconduct Respect for our pure nature
4. No lying Respect for honesty
5. No intoxicants Respect for a clear mind

- niha -

From Web

நற்சிந்தனை! 10 தர்மம் பற்றிய பிழையான கருத்துக்களைத் தகர்க்கும் குர்ஆன்!

தர்மம் பற்றிய பிழையான கருத்துக்களைத் தகர்க்கும் குர்ஆன்!

 

அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே!

மாலை வானொலியில் ஒரு பெரியாரின் மார்க்கச் சொற்பொழிவு நடந்தது. நோன்பு காலம் என்பதால் தர்மம் அந்த பயானின் கருப் பொருளாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு பணம் படைத்தவரின் தர்ம சிந்தை பற்றிய விடயம் ஹதீஸ் ஒன்றின் ஆதாரத்துடன் விளக்கப்பட்டது.  சுருக்கமாக,

Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 6:50

நீர் கூறுவீராக! அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும், மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி நான் பின்பற்றுவதில்லை. குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? என நீர் கேட்பீராக! எனவே, நீங்கள் சிநதிக்க மாட்டீர்களா?

- நிஹா -

Al Quran 6:50

Say: “I tell you not that with me are the treasures of Allah, nor do I know what is hidden, nor do I tell you I am an angel. I but follow what is revealed to me.” Say: “can the blind be held equal to the seeing?” Will ye then consider not?

- niha -

கருஞ்சீரகத்தின் மகிமை!

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

 

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது.
கருஞ்சீரகத்தைக் வினாகிரியில்  (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

- நிஹா -

தகவல்: இணையம்

Continue reading