Monthly Archives: November 2014

பொதுக் குறள் !

பொதுக் குறள் !

 

கார்மேகம் கவிழ்ந்தால் நன்றேதரும் நீரை
கார்வேகம் பறிக்கு முயிரை!

போர்மேகம் சூழும் பார்மீது எங்கும்
சீர்கெட்டோ ர் ஆட்சி யாலே! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 6:72

மேலும், நீங்கள்  தொழுகையை நிலைநிறுத்தி, அவனையே அஞ்சுங்கள். அவன்பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்!

 

- நிஹா -

Al Quran 6:72

” To establish regular prayers and to fear Allah: for it is to Him that we shall  be gathered together”

- niha -

நற்சிந்தனை 31

நற்சிந்தனை 31

ஒளியும் பார்த்தலும்

ஒளியின்றேல் பார்வையில்லை. ஆயினும் ஒளியைப் பார்த்தவரும் உலகில் இல்லை.

அல்லாஹ். பகலைப் பார்ப்பதற்காகப் படைத்திருக்கிறேன் என்று கூறியதும், பகலில்தான் ஒளி வருகின்றது, அது சூரிய ஒளி என்பதை வெளிப்படுத்தவுமாக இருக்கலாம். இரவை ஒய்வுக்காக எனக் கூறினானே தவிர, இரவில் பார்க்க முடியாது என்றும் கூறவில்லை. அப்படியாயின், இரவில் பார்க்கலாம் என்றுதானே பொருள். ஆம் நாம் சந்திர ஒளியால் பார்க்கவும் செய்கிறோம். ஏன்றாலும் அவ்வொளி பொருட்களைக், காட்சிகளை கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியில் பார்ப்பது போன்று கறுப்பும் அதன் வெளிறிய சாம்பல் நிறங்களாகக் காட்டுமே அல்லாது, பல நிறங்களில் காட்டுவதில்லை. சந்திரனின் ஒளி தான விழும் பொருளின் நிறத்தைக் களவாடி விடுகிறது. இது விஞ்ஞானக் கட்டுரை அல்லவென்பதால் இந்த அளவில் தெரிந்து கொள்ளலாம் மேலும், சந்திர ஒளியில் ஒரு புத்தகத்தை வாசிக்கவும் முடியாது, வெகு சிலரைத் தவிர, வாசிக்க முற்பட்டால் எழுத்துக்கள் மறைந்து விடும். பகலிலும் சந்திரன் வந்தாலும், அது சில காலங்களில் பார்வைக்குத் தெரிந்தாலும், அதிலிருந்து இரவில் போன்று ஒளி வெளிவருவது தெரிவதில்லை. Continue reading

பொதுக் குறள்

பொதுக் குறள்!

 

காதவழி போவார் பாதவலி யற்று
வாதவலி இல்லா தார்!

படைபல மிருந்தும் நடைபலம் இன்றேல்
தடைப்படும் குடி யாட்சி!

கடிவாளமிலாக் குதிரையும் பிடிமானமிலா வாழ்வும்
படிமான மற்றுப் போம்!

உறையுள் வாளும் பறையுள் ஒலியும்
சிறையுள் வாழ்வு போலாம்!

சூடானால் மறைந்தும் குளிரானால் உறைந்தும்
பாடாவதே நீரின் பண்பு!

– நிஹா -

உங்களுக்குத் தெரியுமா!

உங்களுக்குத் தெரியுமா!

சூரிய வெளிச்சம் பற்றிய குறுந் தகவல்.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் ஒளி  நாம் வாழும் இப்பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் 8.3 நிமிடங்கள்.

அதே வேளை சூரியனின் மத்திய பகுதியிலிருந்து வெளிப்படும் PHOTON போட்டோன் எனப்படும் ஒளித்துகள் தனது போக்கை மாற்றிய வண்ணமே எதிர்ப்படும் துணுக்குகளுடன் போராடி சூரியனின் மேற்பரப்பை வந்தடைய எடுக்கும் நேரம் 10,000 முதல் 170, 000 வருடங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சூரிய ஒளியின் மு‌னை என்பது, போட்டோன் என்ற ஒளித்துகளின் பருமனே, தவிர, ஒரு ஒளித் தொகுதியின் அளவால் அறியப்படுவதல்ல.

 

- நிஹா -

நீர் பற்றி நான்!

நீர் பற்றி நான்

நீள்நிலமும் பாழாகும் நீரின்றேல் அக்கணமே
ஆளில்லாக் கிரகமாம் அறி

தோன்றும் மறையும் துயர்துடைத்து காக்கும்
என்றுமே அழிவில்லை அறி

சேற்றிலும் சங்கமம் காற்றிலும் பவனி
கூற்றம் காணாது காண் Continue reading

புதிய நீதி மொழிகள் !

புதிய நீதி மொழிகள் !

 
தோட்டிதான் கூட்டுகிறானே என்பதனால்
றோட்டில் கூளம் போடுவது நீதியா!

கோர்ட்டில் நீதி பெறலாம் என்று மட்டும் போகாதீர்
ஓட்டோடு திரும்பி வந்து விடுவீர்கள்!

எத்தனைதான் வாதங்கள் செய்தாலும் நீதி கேட்டு
அத்தனையும் பக்கத்தில் அமர்ந்து எழுதுவோன் கையில்!

கறுப்புக் கோட்டை அணிந்ததனால்தான்
விருப்பமான வழிகளில் நீதி பழஞ் சேதியாகிறதா!

நீதிபதிகள் சேதிகளைக் கேட்டு தீர்ப்பளிப்பதால்
வாதிகள் கவனம் சேதிகளை சமர்ப்பிப்பதில்!

வீட்டின் முன்னால் கூளம் கிடந்தால்
வீட்டுக்காரன் தண்டிக்கப்படுவது புது நீதி!

போதி மாதவர்கள் சாதி பேசி சங்கடம் செய்தால்
நீதி காக்கும் நகர்காவலர் மௌனிகளாகனும்! Continue reading

குர்ஆனில் தொழுகை!

குர்ஆனில் தொழுகை!

தொழுகை சம்பந்தமாக இறக்கி அருளப்பட்ட குர்ஆனிய வசனங்கள்!

2:238 தொழுகைகளையும். நடுத் தொழுகையையும் பேணி வாருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்களாக நில்லுங்கள்.

11:114 பகலின் இரு ஓரங்களிலும், இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக நற்செயல்கள், தீயசெயல்களைப் போக்கிவிடும். நினைவுகூர்ந்திடுவோருக்கு இது ஒரு நல்லறிவரையாகும்!

17:78 சூரியன் சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை தொழுகைகளை நிலைநிறுத்துவீராக! மேலும், ஃபஜ்ர் தொழுகையையும், நிச்சமாக ஃபஜ்ருடைய தொழுகையானது வருகைக்குரியதாக இருக்கிறது.

17:79 நீர் உமக்கு உபரியாக இரவிலும் தஹஜ்ஜுத் தொழுகையைக் கொண்டு நிறைவேற்றுவீராக! உம்முடைய ரப்பு உம்மைப் புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்தப் போதுமானவன்.

20:130 எனவே, அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையை மேற்கொள்வீராக! இன்னும் சூரிய உதயத்திற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும் உம்முடைய ரப்பை புகழ்ந்து துதிப்பீராக! இரவு நேரரங்களிலும், பகலின் ஓரங்களிலும் நீர் துதி செய்வீராக! நீர் திருப்தி பெறலாம்!

30:17 நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், நீங்கள் காலைப் பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதித்து வாருங்கள்.

30:18 வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனக்கே உரியன. நீங்கள் முன்னிரவிலும், நடுப்பகலில் இருந்திடும் போதும்.

50:339 ஆகவே, அவர்கள் கூறுகின்றவற்றின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! சூரிய உதயத்திற்கு முன்னரும், மறையும் முன்னரும் உமது ரப்பின் புகழைக் கொண்டு துதி செய்வீராக!

50:40 மேலும், இரவின் ஒரு பாகத்திலும் சுஜுதுக்குப் பின்னரும்அவனைத் துதி செய்வீராக!

73:2 இரவில் எழுந்து நிற்பீராக! சிறிது நேரம் தவிர!

73:3 அதில் பாதி அல்லது சிறிது குறைத்துக் கொள்வீராக!

73:4 அல்லது அதைவிட அதிகப்படுத்திக் கொள்வீராக! குர்ஆனை அழகாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக!

73:6 நிச்சயமாக, இரவில் எழுந்திருப்பதானது ஒன்றிணைந்திருக்க அது மிக்க வலிமையுடையதாகும். இன்னும் சொல்லால் மிக நேர்த்தியானதுமாகும்.

2:21 மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்கு(அறி)வீராக! நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.

2:43 மேலும், நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், ருகூஉ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் ருகூஉ செய்யுங்கள்.

2:110 மே லும், நீங்கள் தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள். மேலும், உங்களுக்காக நீங்கள் என்ன நற்செயலை அனுப்பி வைக்கிறீர்களோ அதனையே அல்லாஹ்விடம் அடைந்து கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைக் கூர்ந்து பார்த்தவாறு இருக்கிறான்.

2:239 ஆகவே, நீங்கள் அஞ்சுவீர்களாயின், நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ. அச்சம் நீங்கிவிட்டால், அல்லாஹ் உங்களுக்கு அறியாதிருந்தவற்றைக் கற்றுக் கொடுத்தவாறு அவனை நினைவு கூர்ந்திடுங்கள்.

17:110 நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், எதை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன. நீர் உம்முடைய தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர்.அதில் மெதுமெவாகவும் ஓதாதீர். இன்னும் இவ்விரண்டிற்குமிடையே ஒரு வழியை மேற்கொள்வீராக!

62:9 முஃமின்களே! ஜுமுஆ நாளன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பால் விரைந்து செல்லுங்கள். மேலும், வணிகத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிக்க மேலானதாகும்.

73:20 நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரண்டு பாகத்தைவிட சற்றுக் குறைவாக, இன்னும் அதில் ஒரு பாதியில், இன்னும் அதில் மூன்றில் ஒரு பாகத்தில் நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது ரப்பு அறிவான். இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயித்துள்ளான். அதனை நீங்கள் சரியாகக் கணக்கிட முடியாதென்பதையும் அவன் அறிந்துள்ளான். ஆகவே, அவன் உங்களை மன்னித்து வி்டடான். எனவே, குர்ஆனிலிருந்து இயன்றதை நீங்கள் ஓதுங்கள். உங்களில் நோயுற்றவர்கள் இருக்கக்கூடும் என்பதையும் , இன்னும் சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின பாதையில் போரிட நேரிடும் என்பதையும் அவன் நன்கறிவான். எனவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள். இன்னும் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், அ்ல்லாஹ்வுக்கு அழகிய டனாக கடன் கொடுங்கள். மேலும், நீங்கள் நன்மையானவற்றில் உங்களுக்காக எதை முற்படுத்தி வைப்பீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகும். கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். மேலும், அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.

76:26 இன்னும் இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! இரவில் நீண்ட நேரம் அவனைத் துதி செய்வீராக!

107:4 எனவே தொழுகையாளிகளுக்குக் கேடுதான்!

107:5 அவர்கள் எத்தகையோ‌ரன்றால் தொழுகையில் மறந்தவர்களாக இருப்பார்கள்.

107:6 இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், மற்றவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்!

108:2 எனவே, உமது ரப்பைத் தொழுது, இன்னும் அறுப்பீராக!

4:103 நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால், பிறகு நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், உங்களது விலாப்புறங்களின் மீது அல்லாஹ்வை நீங்கள் துதி செய்யுங்கள். பின்னர், அமைதி பெற்று விட்டால் அப்பொழுது தொழுகையை நீங்கள் நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகையானது இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரங் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கின்றது.

29:45 இவ்வேதத்தில் இருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக1 இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையாகிறது மானக்கேடானவைகளை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிவான்.

20:14 நிச்சயமாக, நான்தான் அல்லாஹ். என்னையன்றி வணக்கத்திற்குரிய நாயனில்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கு(அறி)வீ)ராக! மேலும், என்னை நினைவு கூர்ந்திட, தொழுகையை நிலை நிறுத்துவீராக!  

2:153 முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

http://factsbehind.net/wp/?p=536

14:31 ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! http://factsbehind.net/wp/?p=684

 

 

- நிஹா -

சூனியத்தை அல்லாஹ் அறிவித்தபடி அறிவோம்!

சூனியத்தை அல்லாஹ் அறிவித்தபடி அறிவோம்!

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியே சூனியம் பற்றிய மறுப்பு. குர்ஆனை ஏற்பது கடமை. அதில் நாம் அறியாத விடயங்கள் இருக்கலாம் அதனை மறுப்பதற்கில்லை. நமக்கு விளங்காதது என்பதால் முற்றுமறிந்த அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா, உலக முடிவு வரை முழு உலகையும் வழிகாட்ட அருளிய வேதம் இதில் பல பொருளுள்ளவற்றை, கற்றறிந்தோர் இவை அல்லாஹ்விடம் இருந்து அருளப் பெற்றது என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பது இறை மொழி. ஆதலால் இறைவனும் நமது அக்காலத்தில் விளக்கம் பெற முடியாத விளங்காமையை ஏற்கின்றான். ஆனால், விளங்காமையால், அவசரப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும் நிலை, சிந்திப்போருக்கு மாற்றம் பெறலாம். இன்ஷாஅல்லாஹ்!

சிந்தித்தும் விளங்கிக் கொள்ளாதோரையே அல்லாஹ், பூமியில் ஊர்ந்து திரிவனவற்றில் மோசமானதாகக் கூறுவதுடன், அல்லாஹ் விளங்காதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றான். இதனை அறிந்த ஞானவான்களே அவற்றை மறுக்காது ஏற்கின்றார்கள். இன்று நாம் விளங்க முடியாது இருப்பது, அல்லது பொய் போன்று தெரிவது, நாளை நமது அறிவு மேம்பட்டதன் பின்னர் – அது போன்ற ஒரு நிகழ்வு நமக்குத் தெரிய வந்ததன் பின்னர் உண்மையாகவம் நன்மையாகவும், வீண் அல்லவென்றும் தெரிந்துவிடுகின்றது.

நாம் மிக அண்மைக் காலம் வரை ஒளியே வேகமானது என்ற அறிந்து கொண்டிருந்தோம். ஆயினும, அக்காலத்தி‌லேயே ஞானவான்கள், மனோவேகம் அனைத்திலும் கூடியது என்பதை அறிந்திருந்தனர். அதனைப் பயன்படுத்தி தமது வேலைகளை இலகுவாக, மிகக் குறுகிய நேரத்தில் முடித்தும் இருந்தனர். அவற்றுக்கான ஆதாரம் குர்ஆனே தருகின்றது. அதனால்தான் அல்லாஹ் சில வரலாறுகளைக் கூறிவிட்டு நீர் இவற்றை முன்னர் அறிந்தவராக இருக்கவி்லலை. மார்க்கம் என்றால் என்வென்றும் உமக்குத் தெரியாதிருந்தது அவற்றை நாமே கற்றுத் தந்தோம் என்கின்றான். ஆதம் அலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தனால்தான் வானவர்களைக் கொண்டு சிரவணக்கம் செய்வித்தான். அங்கு சிரவணக்கம் மனிதனுக்குச் செய்யப்பட்டது என்பதைவிட அவனது அறிவுக்கே அதுவும் அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்பட்ட அறிவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் உருவான இயற்கை மார்க்கம். இங்கு மூடக் கொள்கைகளுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இறை வேதங்கள் சூனியமாகப் பார்க்கப்படடன. பூமி தட்டை என நம்பிக் கொண்டிருந்த மக்களிடம்தான் அல்லாஹ் இரவு பகல் வருவதில் உங்களுக்கு அத்தாட்சி உண்டென்கின்றான். இதுவும் அக்காலை சூனியமாகவே கூறப்பட்டது. தூரதிருஷ்டியை ஞானத்தால் கொண்டவர்களே அன்று வானியல் உண்மைகளை வகைப்படுத்தினர். அவை அனைத்தும் அன்று மூடநம்பிக்கைளாகக்கூட தெரிந்திருக்கலாம்.அதனால்தான் பூமி உருண்டை என்ற கலிலியோ தெருவீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

நாயகம் ஸல் அவர்களை அண்மையிலுள்ள மஸ்ஜிதுக்கு ஒரு இரவில் அழைத்து சென்றதாகக் கூறியிருப்பதிலும், அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டதிலும் அத்தாட்சிகள் உண்டு என நம்பியவர்கள்தான் அதிவேக விமானங்களையும், தொலைக் காட்சியையும் கண்டு பிடித்தனர். மூஸா அலை அவர்களுக்கு தௌறாத் வேதத்தை எழுதிக் கொடுத்ததை மறுப்போர் இன்று அன்று நடந்தது பொய்யோ சூனியமோ அல்ல என்றே நம்புகின்றார்கள். காரணம் இன்று , வயர்லெஸ், தொலை நகல், குறுஞ்செய்தி எஸ்எம்எஸ், ஈ மெயில் என்பவைகளை கண்ணாரக் காண்பதே! அது மட்டுமல்ல இன்று ஒப்டிக் முறை மூலம்32 டெரா பைட்ஸ் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

இதனால்தான் அன்று சில விடயங்களை அறிஞர்கள் இவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தது என நம்பினார்கள். அவை இன்று விளக்கமும் பெறுகின்றது நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒளியின் வேகத்தைவிட டெச்சியோன் என்ற ஒரு ஹைபோதெட்டிக் சப்ஸ்டன்ஸ் பயணித்துக் கொண்டிப்பதாகக் கூறுகின்றனர். இதைத்தான் அல்லாஹ் நாம் விரிவாக்கலுடையோம் என்று கூறியிருக்கின்றான். இவற்றை எல்லாம் உருவாக்கிய நுண்ணறிவாளனை நம் சின்ன அறிவால் விலை கூற முடியாது.

பக்கத்திலுள்ள பொருளைக் காண முடியாத நாமனைவரும் எங்கோ பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனை வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் காண்கின்றோம் இவை அல்லாஹ்வால் காட்டப்படுகின்றது. இ‌து அவனது அருட்கொடை. குறிப்பிட்ட பருமனுக்கு மேல் நாம் காண முடியாது. சூனியத்தை நாம் காண முடியாது. ஆம் அச்சூன்யம் கண்ணெதிரே உள்ளது. ஐம்புலன்களும் அதில் தோல்வி கண்டுள்ளது. அதனால்தான் அதனைச் சூன்யம் என்கின்றோம். அதனை ஸ்பேஸ் எனும் வெளியாகக் கண்டுள்ளனர்.

இச்சூனியம் இன்றேல் நம்மால் இவ்வுலகில் வாழ்வதை நினைத்தும் பார்க்க முடியாது. 67ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டும், ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று கொண்டுமிருக்கும் இப்பூமியில் நடப்பவற்றை நாமறிகிறோமா! இவை இப்பூமியை நாமிருப்பதற்காக செவ்வைப்படுத்திய இறைகருணை. பூமியில் இவ்வியக்கம் இன்றேல் இது உயிர்க் கிரக‌மாகவோ, ஈர்ப்பு சக்தியைக் கொண்டதாகவோ இருந்திராது. நாமெல்லாம் அண்டவெளியில் தூக்கி வீசப்பட்டு மிதந்து கொண்டிருப்போம் இப்படி அல்லாஹ்வின் கருணையைக் காருண்யத்தை, நுண்ணறிவை என் வாநாள் முழுவதும் எழுதிக் கொண்டிருக்கலாம். அப்போதும் அது முடிவுறாது. நான் மட்டுமல்ல இவ்வுலக மக்களனைவரும் எழுதிக் கொண்டிருந்தாலும் அப்போதும் முடிவுறா. ஆதலால், இந்த அளவில் அவற்றை முடித்துக் கொண்டு மிகுதியைப் பார்ப்போம்.

ஆதலின், நாமனைவரும் குர்ஆனை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை நம்புவோம். இன்றேல் நாம் காபிர்கள். அவற்றைச் சிந்திப்போம். நமக்கு விளங்காதவை இருந்தால், குருடர்கள் போன்று, இதுதான் யானை எனக் கூறிக் கொண்டிருக்க வேண்டாமே! அதற்காகத் தம் சிற்றறிவால் அல்லாஹ்வின் செயல்களுக்கு வரைவிலக்கணம் கொடுத்து நம்முள் சண்டை பிடித்துப் பிரிவுகளை உண்டாக்கி, கேவலப்பட்டு, மார்க்கத்திற்கும் அபகீர்த்தியை உண்டாக்கி, அல்லாஹ்வை அறியாமையில் மூழ்கியிருப்போர் தரக் குறைவாக விமர்சிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஆக்கிக் கொடுக்காதிருப்போமாக!

அதற்காக, சுலைமான் அலை அவர்கள் காலத்தில் ஷைத்தான்கள் ஓதிக் கொண்டிருந்ததை அக்கால மக்கள் ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் பாபிலோனில் நிலவிய அந்த சூனியக் கலையையும், ஹாரூத், மாரூத் ஆகிய வானவர்களுக்கு அல்லாஹ் அருளியதையும் கற்றுக் கொடுத்தாகவும், பின்னர் அ்ம்மக்கள் கணவன் மனைவியருக் கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதையும் கற்றுக் கொண்டதையும், அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் யாருக்கும் அதனால் இடர் விளைவிப்போரல்ல என்பதையும், அவற்றைச் செய்த கொண்டிருந்தமை அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டிருக்கின்றது, அதாவது நிராகரிப்பு எனவும், இல்லாத ஒன்றை அல்லாஹ் தடை செய்திருக்கவும் மாட்டான், அதைச் செய்ததற்காக மறுமையில் தண்டிக்கவும் மாட்டான், அதனை ஆத்மாவுக்குப் பகரமாகப் பெற்றுக் கொண்டதாகவும் கூறி இருக்கவும் மாட்டான் என்பதை விசவாசம் கொள்ளுங்கள். தாங்களும் அறியாதவர்களாக இருந்து அடுத்தவர்களையும் வழி கெடுத்து அனைவரினதும் பாவங்களைச் சுமக்காதீர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இவற்றில் வீணே காலத்தைப் போக்கி, மக்களைத் திருத்துவதாகக் கூறி கலகத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை முற்றும் அறிந்த அல்லாஹ் அறிந்திருந்ததாலேயே, மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை எனவும், தனது தூதை மட்டுமே எடுத்துச் சொல்லும்படியும் ஏற்றுக் கொள்ளாத அறிவீனர்களிடம் இருந்து ஸலாம் கூறி விலகி்க் கொள்ளுங்கள் எனவும், உமக்கு யாரையும் வழிப்படுத்திட முடியாது எனவும், நேர்வழியோ, வழிகேடோ இரண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் மட்‌டுமே அறிந்து அதற்கேற்ப வழிகெடுத்தோ, வழிநடத்தியோ வருவதாகவும் கூறியுள்ளான்.

அதற்காகவே ஏழு வசனங்களைக் கொண்ட மீண்டும் மீண்டும் ஓதக் கூடிய அந்த சூரா பாத்திஹாவில் நேர்வழியைக் காட்டுமாறு இறைஞ்சும்படியும் ‌அறிவுறுத்தி உள்ளான். ஆதலால் அதன்படி நடந்து அவன் கூறியபடி படிப்படியாகப் படிகளைக் கடந்து, அவனது திருப்தியைப் பெற்று, அவனது பதவியேற்றத்தையும் பெற்று, ஏற்கனவே வெற்றி பெற்ற நல்லோருடன் அவன் சந்நிதானத்தில் இணைந்து கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!

 

 

- நிஹா -