Category Archives: Islam

நற்சிந்தனை 28 எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

நற்சிந்தனை 28

எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

 

அல் குர்ஆன் 41:34 நன்மையும், தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்போது எவருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் உமது உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்

 

மேற்கூறிய குர்ஆனிய வசனம் ஒன்றே உலகில் சாந்தி, சமாதானத்தை நிச்சயமாக வருவித்துவிடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.  Continue reading

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

விரித்திடுவான் நெஞ்சத்தை இஸ்லாத்தின் பக்கல்
விரும்பிடில் காட்டிட நேர்வழி! 6:125

 

மடமையினால் கொன்றவர் அறிவின்றிக் குழந்தையை
அடைந்தனர் நட்டமுடன்வழி கேட்டை! 6:140

 

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 19:59

இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோ இச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால் பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 14:13

 

நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களின் தூதர்களிடம், “எங்களின் பூமியை விட்டும் உங்களை நாங்கள் நிச்சயமாக வெளியேற்றி விடுவோம். அல்லது நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடுங்கள் “ என்று கூறினார்கள். அப்போது, “அநியாயக்காரர்களை நிச்சயமாக நாம் அழித்திடுவோம்“ என்று அவர்களது ரப்பு அவர்களுக்கு அறிவித்தான். Continue reading

நற்சிந்தனை 25 தொழுகையை நிலைநிறுத்துவதற்கான காலக்கெடு கூறுவதென்ன!

நற்சிந்தனை 25

 

தொழுகையை நிலைநிறுத்துவதற்கான காலக்கெடு கூறுவதென்ன!

 
வல்ல நாயன் அல்லாஹ் அருளாளன் அன்புடையோன். அதற்கொப்ப, ஈமான் கொண்டுள்ள தனது அடியார்களில் அவன் கொண்டுள்ள அளவற்ற நேசத்தை வெளிப்படுத்துவதற்காக , ஓர் கட்டாய கடமையாக அனைத்து முஸ்லிம்களாலும் தினமும் மேற்கொள்ளபபட்டு வரும் ஐவேளைத் தொழுகையின் அடைவு ஒன்றால் நாம நிலைநிறுத்தல் என்ற கட்டளையை, நமது வாழ்வு முடிவதற்குள் செய்து கொள்வதற்காகக் கொடுக்கபட்ட காலக்கெடுவே, மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலைநிறுத்துமாறு தரப்பட்ட எச்சரிக்கை. Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

அல் குர்ஆன் 50:37

நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு, அல்லது தாம் மன ஓர்மையுடன் செவி சாய்க்கின்றாரோ, அவருக்கு அதில் படிப்பினை உள்ளது. Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 42:15

 

அதற்காக நீர் அழைப்பீராக! நீர் ஏவப்படட பிரகாரம் நிலைத்து நிற்பீராக! அவர்களது மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் வேதத்திலிருந்து இறக்கி வைத்ததையே நான் ஈமான் கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ் எங்களது ரப்பும் உங்களது ரப்புமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையே எந்தவித தர்க்கமுமில்லை, அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.” Continue reading

நற்சிந்தனை 24

நற்சிந்தனை 24

தங்களுடைய ரப்பை அவனுடைய திருப்பொருத்தத்தை – வஜ்ஹை/முகத்தை – நாடி காலையிலும் மாலையிலும் அழைத்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டி விடாதீர். அவர்களுடைய கணக்கில் நின்றும் உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை. ஆகவே நீர் விரட்டினால் நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் : 5:87

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில், தூய்மையானவற்றை நீங்கள் விலக்கப்பட்டவைக ளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.

– நிஹா -

 

Al Quran 5:87

 

O ye who believe! Make not unlawful the good things which Allah hath made lawful for you. But commit no excess: For Allah loveth not those given to excess.

 Read 5:88 also

 

- niha -

 

 

 

 

 

 

 

நற்சிந்தனை – 23

நற்சிந்தனை – 23

முகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு

குர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான். Continue reading