Category Archives: Religious

நற்சிந்தனை 24

நற்சிந்தனை 24

தங்களுடைய ரப்பை அவனுடைய திருப்பொருத்தத்தை – வஜ்ஹை/முகத்தை – நாடி காலையிலும் மாலையிலும் அழைத்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டி விடாதீர். அவர்களுடைய கணக்கில் நின்றும் உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை. ஆகவே நீர் விரட்டினால் நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் : 5:87

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில், தூய்மையானவற்றை நீங்கள் விலக்கப்பட்டவைக ளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.

– நிஹா -

 

Al Quran 5:87

 

O ye who believe! Make not unlawful the good things which Allah hath made lawful for you. But commit no excess: For Allah loveth not those given to excess.

 Read 5:88 also

 

- niha -

 

 

 

 

 

 

 

நற்சிந்தனை – 23

நற்சிந்தனை – 23

முகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு

குர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 13:22

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் ரப்பின் திருப் பொருத்தத்தை நாடிப் பொறுமையைக் கடைப்  பிடிப்பார்கள். தொழுகையை நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்வார்கள். தீமையை, நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கேதான் மறுமையின் வீடு இருக்கிறது.

- நிஹா -

 

Al Quran 13:22

Those who patiently persevere, seeking the countenance of their Lord; establish regular prayers; spend, out of We have bestowed for their sustenance, secretly and openly; and turn off Evil with good: for such there is the final attainment of the (Eternal) Home. 

- niha -

ஞானக் குறள் !

ஞானக் குறள் !

தன்னை யுணர்வதே பேரின்பம் உணர்ந்தபின்
தானிரண்டறக் கலப்பதே உயர்வு!

கண்ணை மூடித் தன்னைக் காணல்
தன்னையறியும் தவமே யாகும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 8:2

முஃமின்கள் எவர்கள் என்றால், அல்லாஹ் என்று கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கி விடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவ்ர்களுக்கு ஈமானை அதிகமாக்கும். மேலும், அவர்கள் தங்கள் ரப்பின் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 14:52

இது (குர்ஆன்) மனிதருக்கு எத்தி வைத்தலாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும், அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்வு பெற்றிடவுமாகும்.

– நிஹா –

Al Quran 14:52

Here is a Message for mankind: That they may take warning therefrom, and may know that He is One Allah: Let men of understanding take heed.

– Niha -

தீர்ப்புக் கூறுவதற்கு தகுதி பெறுதல்..

தீர்ப்புக் கூறுவதற்கு தகுதி பெறுதல்….

 

உலக விவகாரங்களில், (சிறப்பாக இயற்கையோடு ஒட்டிய விடயங்களில்), கருத்து வேற்றுமை ஏற்படும் போது, இஸ்லாமியராகிய நாம், குர்ஆனிலிருந்து தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றான் வல்ல நாயன் அல்லாஹ். தீர்வு என்ற ஒன்றில் அல்லாஹ்வும் அவனது நபியும் தீர்ப்பளித்துவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இஸ்லாமியனது கடமை.

தற்காலத்தில் அல்லாஹ்வின் வேதமும் தீர்ப்புக்காக நபிகள் ஸல் அவர்களது ஹதீதும் பயன்படுத்தப்படு கின்றது. ஹதீது ஒன்றைத் தீர்வுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் போது, அது குர்ஆனுக்கு முரண்படாத கருத்தைத் தாங்கியுள்ளதா என்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் அச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் விதமாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பிரயோகமாகாத ஆலோசனைகளாகவும் இருக்கலாம். அல்லது, அது போன்ற நிலையில் மட்டுமே அது செல்லுந் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நிலையினைக் கொண்ட ஹதீதுகள், உண்மை யானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அவை தேவை கருதிய செயற்பாடாகவோ, சொல்லாகவோ, அங்கீகாரமாகவோ இருக்கலாம். Continue reading

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

இவ்வாக்கத்தின் மகுடம் குர்ஆனிய வசனமேயானாலும், இது மனித வர்க்கத்துக்கான ஓர் பேருண்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளமையால், இது ஓர் இஸ்லாமிய ஆக்கம் மட்டுமே என்ற சிந்தனையால் இதனை வாசித்தறியாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக திருவள்ளுவர் கூறும் சில அறவுரைகளை தொடக்கத்திற்காகத் தேர்ந்துள்ளேன்.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 4 : 63

அவர்கள் எத்தகையவர்கள் ன்றால், அவர்களின் உள்ளஙகளில் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுரை நல்குவீராக! மேலும், அவர்களது மனங்களில் தெளிவான சொற்களைக் கூறுவீராக! Continue reading