கட்டுரையுள் புகமுன் அறிதலுக்காகச் சில ஆயத்துக்கள் … ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 49:2.
‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24.
‘இ(ந்த குர்ஆனான)து மனிதர்களுக்கு எத்திவைத்தாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும் அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லறிவு பெற்றிடவுமாகும்’ – 14:52.
‘மேலும், இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல. அன்றியும், முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை.’ – 10:37
‘நிச்சயமாக இந்தக் குர்ஆன், எது மிக மிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகின்றது. அன்றியும், நற்செயல் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டென்று நற்செய்தி கூறுகிறது’ – 17:9. Continue reading →