குர்ஆனின் பார்வையில் முன்ஜென்மம்
அறிமுகம்: முன் ஜென்மம் பற்றிய பல தகவல்களை ஏலவே அறிந்திருந் தாலும் அவை பற்றி எழுதும் எண்ணம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. காரணம் அந்த விடயத்தில், ஏதோ ஒரு விதத்தில் நாமறியாத சில உண்மைகள் பொதிந்துள்ளன என நான் எண்ணியிருந்ததே! அப்படியான வைகள் மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருக்க வேண்டும் என்பதும் எனது எண்ணம். அதற்குக் காரணம், அது போன்ற ஏழு ஜென்மம் அல்லது அதற்கு மேலும் எடுக்கும் கொள்கைகள் எப்படியோ மதங்களின் பெயரால் கூறப்பட்டுக் கொண்டிருந்தமையே!
மதங்களில் அவை காணப்படுகின்றனவோ என்னவோ தனது உலக வாழ்வை நிறைவு செய்யாத ஆவிகள் பேயாக அலைவதாகவும், சில அவரவர் நடபடிகளுக்கு ஏற்ப ஜென்மங்களை எடுத்து முன் ஜென்ம வினையைத் தீர்ப்பதாகவும் மக்கள் மத்தியில் கதைகள் கூறப்படுகின்றன. முத்தியடைந்த ஆன்மா பிறப்பை நிறுத்திக் கொள்வதாகவும் கூறப்படு கிறது. இவைகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கர்ண பரம்பரையாக வந்த கதைகள் உள. Continue reading