1. இன்று உலகில் காணப்படும் முளைப்பன, வளர்வன, துளிர்ப்பன, பூப்பன, காய்ப்பன, கனிவன, வாழ்வன, மடிவன போன்ற பண்புகளைக் கொண்ட தாவரங்கள், செடி கொடிகள், மரங்கள் போன்றவையும் பிறப்பன, நகர்வன, ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன போன்ற அனைத்தும் உயிருள்ளவையென அனைவரும் அறிவர். இதற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. Continue reading
Author Archives: factsbeh
வாழ்வாங்கு வாழ இயற்கை நமக்களித்த வாழ்வாதாரச் சட்டம் – ஓர் கண்ணோட்டம்
குர் ஆன் வழியில் …
உறவு முறைத் திருமணம் பிறக்கும் பாலகரைப் பாதிக்குமா?
இன்று மக்கள் மத்தியில் பரப்பப்படும் திருமணம் பற்றிய ஓர் பரபரப்பான செய்தியே உறவு முறைத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன அல்லது ஏதோ வகையில் குறைபாடான பிள்ளைகளாகவே பிறக்கின்றன என்பதே. இது பற்றிய ஓர் வரலாற்று ரீதியான ஆதாரபூர்வமான ஆக்கமே இந்தச் சிறு கட்டுரை.
நாம் ஏதாவது ஓர் விடயத்தில் தீர்வுக்கு வருவதற்குப் பல காரணிகள் உண்டென்பதை அறிந்து வைத்திருக்கிறோம். ஆயினும் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுக் பெறப்படுபவைகள் முடிவான முடிபுகளாகவும் அதிகமாக இருப்பதில்லை. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு விடயத்திலும் முரண்பாடான ஆய்வறிக்கைகளும் கருத்துக்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அதிகமான விடயங்கள், நடைமுறைச் சாத்தியங்களைக் கூறும் சரித்திரச் சான்றுகளில் இருந்து பெறப்படுகின்றன. அவை நிரூபணத்துக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட வேண்டிய உண்மைகளாகவும் உள்ளன. காரணம் நடந்து முடிந்த உண்மைகள் என அனைவராலும் ஏற்கப்பட்டமையே. ஒரு உதரரணத்தைக் காண்போம். அது புனித பைபிளும், புனித குர்ஆனும் கூறியவை. 2000 வருடங்களுக்கு முன்னர் பைபிளில் கூறப்பட்டு, 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட குர்ஆன் கூறிய ஓரே விடயம். Continue reading
குர்ஆன் வழியில் …
உபாயங்களின் மூலம் உதவிகள் செய்யப்படலாம்!
மனித வாழ்வில் தேவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவையற்ற மனிதரைக் காண்பது மிகமிக அருமை. இறைவன் ஒருவனே தேவையற்றவன். அவன் யாருடைய, எதனுடைய தேவையும் அற்றவன். உணவு, உடை, உறையுள் மட்டுமல்ல, உறவு, நட்பு, உதவிகள், பொருள், பணம், பதவி, மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொடர்பாடல் போன்ற இன்னோரன்ன தேவைகள் இருக்கவே செய்கின்றன. இவைகளில் உதவி பெறுவதும் முக்கியமான ஒன்றாகவே உள்ளது. அனைத்துத் தேவைகளிலும் உதவியின் கரம் இன்றியமையாததாகிறது. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான உதவிகளைப் பெறுவதில் சங்கடங்களும் தோன்றுகின்றன. சட்டங்களின் தடைகளும் உண்டே. சமூகக் கட்டுப்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் என பல்வேறு காரணிகளும் உதவி பெறப்படுவதில், செய்வதில் இடைமறிப்புச் செய்வதுமுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு, ஒழுக்க விழுமியங்களுக்கு முரணற்ற விதத்தில் நாம் சில காரியங்களைச் செய்ய வேண்டியே உள்ளது. Continue reading
மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்
அல்குர்ஆன் 21:1 ” மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கி விட்டது. அவர்களோ மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்.“
இது ஓர் அபாய அறிவிப்பு. ஆம் மறைவான எச்சரிக்கையுடன் கூடியது. மறதியில் உள்ளவர்கள் நாம் என்ற நம் குறையைச் சுட்டிக்காட்டி, நாம் மறந்த எதையோ ஞாபகப்படுத்துமாறு மனிதரைத் தூண்டிக் கொண்டிருக்கும் பண்புடன், தனது கிருபா கடாட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் நெருங்கிவிட்ட மறுமை யையும். அங்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி இருப்பதையும் பறை தட்டும், அருளும் பொருளும் பொதிந்த அற்புதமான அழைப்பு. Continue reading
வாதனை செய்வதை விட்டு விடு வேதனை உன்னைப் பிடிக்கு முன்னே!
புது பல சேனா போதுமடா உன் அடாவடித்தனம்
புத்தம் காக்க என்கின்றாய் பகைமைதனை வளர்க்கின்றாய்
சித்தம் கலங்கி திரிகிறாய் சேற்றை வாரி இறைக்கின்றாய்
பித்துப் பிடித்து அலைகின்றாய் அத்துமீறி அழிக்கின்றாய் Continue reading
சுகக் குறள்
1. அதிகாலை எழுந்து மிதமாக நீரருந்தி
இதமான வாழ்வுகாண் பீர்.
2. நார்ச்சத்தும் நீர்ப்பொருளும் மலபந்தம் அகற்றும்
நேர்மைமிகு ஒளடத மாம்.
3. பார்வைக் கோளாறைப் பக்குவமாய்த் தள்ளிவிட
சீராக ஏ டீ எடுப் பீர்.
4. எலுமிச்சை நெல்லியில் எளிதாகச் சீ சத்தை
நலமாகப் பெற்றிடு வீர்.
5. பத்துவகை நன்மைகள் சத்தாகப் பெற்றிடுக
நித்தமும் நன்மீனை உண்டு. Continue reading
மூளை நலத்துக்கு உறக்கம் அவசியம்.
நமது வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக நாம் ஒதுக்குகிறோம். போதுமான தூக்கமின்மை, வேலையில் நமது வேகம், கவனம், ஞாபகம், காரணங்காணும் திறன் போன்றவற்றில் மோசமான தன்மைகளை ஏற்படுத்தும்.
உறக்கத்துக்குப் போனதும் நமக்கு என்ன நடக்கின்றது என்பதை மிகச் சரியாக யாராவது கூற முடியுமா என வினவினால், மிகச் சுருக்கமாக யாராலும் நிட்சயப்படுத்திக் கூறமுடியாது என்பதே பதிலாக வரும். Continue reading
குர்ஆன் வழியில்…
நபிகளார் மூலம் புனித குர்ஆன் புவிக்கு இறக்கப்பட்டதன் நோக்கம்.
அனைத்து செயல்களும் நோக்கம், தாக்கம், விளைவு, பயன்பாடு போன்றவைகளை அடியொற்றியதாகவே காணப்படுகின்றன. வீணாக நாம் எதனையும் படைத்துவிடவில்லை என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது அல் குர்ஆன். இக்குர்ஆனே கூட புனித நோக்கத்தோடே படைக்கப்பட்டு உள்ளதை அக்குர்ஆன் வாயிலாகவே அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளமை நம் கருத்தைக் கவர்வது. விளக்கத்தைத் தருவது. விவேகத்தை வளர்ப்பது. வேதனையைக் களைவது. வீடுபேற்றைத் தரவல்லது. கீழ்க்கண்ட வசனம் மிகத் தெளிவாக சான்று தருகின்றது. Continue reading
பெண்ணியம் புன்னியமல்ல, பெரும் புண்ணியம், உயர் கண்ணியம்.
ஆசியாவில் குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளி லேயே அதிக அளவில் பெண்ணியம் பற்றிப் பேசப்படுகின்றது. பெண்ணியம் பற்றிப் பேசுவதே பெருமை சேர்ப்பதாகவும், உயர் பண்பாகவும், தாராளத் தன்மையைக் காட்டுவதாகவும், கலாசார மேன்மையைக் குறிப்பதாகவும், கௌரவமாகவும், பெண்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பாகவும், மரியாதையாகவும் போன்ற வகையில் சிந்திக்கப்படுகின்றன. எழுதப்படு கின்றன. பேசப்படுகின்றன. போராட்டங்கள், கோஷங்கள் என வளர்ந்து கொண்டே போகின்றன. பெண்ணியம் பற்றிப் பேச விழைபவர்கள் பெண்ணியத்திற்கான வரைவிலக் கணம், வரம்பு, பண்பு போன்றவற்றை அறியாதவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் எதிர்த் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
பாதங்களைப் பாதிக்கும் கால் ஆணி
கால் ஆணி
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.
இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. Continue reading