Author Archives: factsbeh

குர்ஆன் வழியில் … அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

மேற்கண்ட விடயம் சாமான்யமானதல்ல. தீமைகளை அகற்றுவது பற்றி அறிந்துள்ளோம். அப்படியான வசனம் ஒன்று 47:24 இல் பதிவாகியுள்ளது. அது பற்றி முன்னர் நான் இதுபோன்ற ஓர் கட்டுரை எழுதியுள்ளேன். ஆனால் இங்கு, அல்லாஹ் அதற்கும் மேல் ஒரு படி சென்று நமது தீமைகளை நன்மைகளாக மாற்றிவிடுவதாகக் கூறியுள்ள 25:70ஆம் வசனத்துக்கு வாசக முஸ்லிம்களது கவனத்தை ஈர்க்கின்றேன். குறிப்பிட்ட வசனம், ‘எவர் தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நற்செயல்களைச் செய்தாரோ அவரைத் தவிர. அத்தகையோர், அவர்களின் தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிகக் கிருபையுடையோனுமாவான்’, என்று கூறுகின்றது. Continue reading

QURAN IS THE GUIDANCE

Assalaamu alaikum waraahmathullahihi wa’ barakathu!

The limited little time given to me to speak on the vast topic of “Quran is the Guidance’ is like, to ask a person to put the oceans of water in a coffee cup.  Insha Allah, I’ll try my best to fill the cup by tell few drops of cream from the  Quran’s guidance start with salaam. Continue reading

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளர வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும். Continue reading

முப்பசியின் முக்கியத்துவமும் இறையருளின் இரகசியமும் !

பசிகள் மூவகைத்து. அவை பாலியற் பசி அல்லது காமப்பசி, வயிற்றுப்பசி, அறிவுப்பசி என அறியலாம். இனவிருத்தியை மூலதாரமகக் கொண்டு முதற் பசியும், உயிரினங்களின் இயக்கத்தையும் சமநிலையைப் பேணி உலகைக் காப்பதையும் மையமாகக் கொண்டு உணவு தேடலான வயிற்றுப் பசியையும், இவற்றையெல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வியாபகனும், சர்வ வல்லமையுள்ள வனுமான இறைவனை அறிதலையும், ஆத்ம உய்வையும் மறைமுக நோக்காகக் கொண்டு மனித இனத்துக்கு மட்டும் அறிவுப் பசியையும் இறைவன் அளித்தமை அவனின் அருளே என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் மறுக்க மாட்டார். Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள் ….

                                              ஓட்டிய புலிகளை உவந்திட தகுமோ !                                                 விரட்டிய குற்றம் வேறுலகில் உண்டோ !

எட்டொண்ப தாண்டுகள் ஒட்டு மொத்தமாகப்
பட்டதை எண்ணிப் படைத்திடல் எளிதோ !
சுட்டதை யாற்ற மருந்துக ளுண்டோ !
விட்டதைப் பிடிக்க வித்தைக ளுண்டோ ! Continue reading

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி என்ற இச்சொல் பழமையானது. பொருள் பொதிந்தது. இறையருள் பெற்றது. இதற்கு அனைத்துலக மக்களாலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணமும் உண்டு.

அண்மைக் காலங்களாக இந்நாட்டில் சில பௌத்த மதத் துறவிகள் எனப்படுபவர்களால் தன்னிச்சையாகச் சில இடங்கள் புனித பூமிகள் எனக் கூறப்பட்டு. அவ்விடங்களில் பிற மதவழிபாட்டு நிலையங்கள் கூட இருக்கக் கூடாது என்ற வகையில், பலாத்காரமாக தகர்ப்பு வேலைகளில் கூட ஈடுபடுவதும், இறைதியானத்தில் ஈடுபட வந்தவர்களைத் தமது கடமையைச் செய்ய விடாது கலைத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. Continue reading