Author Archives: factsbeh

மலச்சிக்கல் போக்கும் மகிமையுள்ள வெண்டிக்காய் !

 

உலகில் மக்களைப் பாதிக்கும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாயமைந்தது மலச்சிக்கல் எனப் பெரும்பான்மை மாற்று வைத்திய நிபுணர்கள் கருத்துக் கொண்டுள்ளார்கள். மலச்சிக்கலால் அவதிப்படுவோர் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அது அனைவரது வாழ்விலும் சர்வசாதாரணமாகத் தனது கைவரிசையைக் காட்டி வருகிகிறது. இதனால் பெண்களே பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. சாதாரணமாக நமது வீடுகளிலும், சந்தைகளிலும் காணப்படும் வெண்டிக்காய் இதனைப் போக்குமென மக்கள் ஓரளவு அறிந்தே இருந்தனர் என்றாலும் தற்போது ஆராய்ச்சிகளின் மூலம் வெண்டிக்காய் மலச்சிக்கலைப் போக்கும் மகிமை பெற்றது என்பது நிரூபணமாகியுள்ளது. Continue reading

குர்ஆன் குறள் – சன்மானம்

சன்மானம் என்பது எந்நோக்கும் இல்லாது
தன்னாலே கொடுக்கப் பெறும்

தன்மானம் இழக்காத சன்மானம் பெறுவது
பின்னாளில் இகழ்வைத் தரா

பெறுமானம் அற்ற சன்மானம் தனக்கு
வருமானம் எதிர்பாரா தீர் Continue reading

குறும்பா வடிவில் குர்ஆனிய நறும்பா !

அறி லாஇலாஹஇல்லல்லாஹு கலிமா அதை
அறிந்து சொல்வதே விதிமா – பொருளுண்மை
அறியாமல் சாட்சியம் கூறியதால் இற்றைவரை
அறிந்து பொய்யுரைத்த பழிமா ! Continue reading

முற்காப்பும் முதலுதவியும்

 

கடிகாயத்தின் மேல்கட்டி காயத்தைக் கீறி
கடிவாயில் உறிஞ் சிடுக

உண்டநஞ்சின் குணமறிந்து சென்றதை வெளியேற்ற
கைகண்டதைக் கொடுத் திடுக

உண்டது காரமாயின் உடலுளே வசப்படுத்த
வேண்டிய மாற்றினைக் கொடு

மாரடைப்பு வந்தவரை முடிந்தவரை பக்கத்து
மருந்தகம் சேர்த் திடுக Continue reading

Link

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா !

அல்லாஹ், உலக மாந்தர் ஒருவருக்கொருவர் ‘ஸலாம்’ என்ற முகமன் கூறுமாறு தனது திருமறையில் பணித்துள்ளான். நாமும் அவ்வாறே செய்து வருகின்றோம். ஸலாத்துக்கு முந்திக் கொள்ளுங்கள் என்ற நாயக வாக்கியமும் உள்ளது. இந்த வகையில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முகமன் கூறுதல் மூலம் ‘வஅலைக்கும் ஸலாம்’ என்ற பதிலைப் பெறும் போது, மனிதர் மத்தியில் ஐக்கியம், அந்நியோன்யம், நட்பு, நல்லெண்ணம், கருத்துப் பரிமாற்றம் போன்ற இன்னபிற நன்மைகள் உருவாகின்றன. Continue reading

Medicinal values in flowers

ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்

மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

வெட்பாலைப் பூக்கள்

வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும். Continue reading

Medical Benefits of Honey and Cinnamon

( புனித குர்ஆன் தேனை சிறந்த நோய் நிவாரணி என்கின்றமை தற்போது ஆரய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது ! – பதிவாளர் )

It is found that a mixture of honey and cinnamon cures most Diseases. Honey is produced in most of the countries of the world. Scientists of today also accept honey as a “Ram Ban” (very effective) medicine for all kinds of diseases. Honey can be used without any side Effects for any kind of diseases. Continue reading

குர்ஆன் வழியில்… மறுமைக்குமுன் நிலைநிறுத்துங்கள் தொழுகையை!

மறுமைக்குமுன் நிலைநிறுத்துங்கள் தொழுகையை!

14:31 ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! Continue reading

தேன் கண்ணுக்கும் சிறந்த ஔடதம் !

அண்டத் தைலம்..!

இப்போது மிகமிக முக்கியமான ஒரு மருந்து செய்முறையைப் பற்றி இப்போது சொல்லப் போகிறோம். அதுதான் அண்டத் தைலம்.

உலகில் நாம் நம் தேவைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு ஐம்பொறிகளை இறைவன் கொடுத்துள்ளான். அவை கண் , காது ,மூக்கு , வாய் , மெய்யாகிய உடல் . இவற்றில் தலையாயது கண் என்ற பொறியும் அதில் உள்ள பார்வை என்ற புலனும். இந்தப் புலன் பிறவியில் இல்லாது போனால் அதை சமாளிக்கும் வல்லமையை இறைவன் கொடுத்துவிடுவான் .
Continue reading