நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!
மேற்கண்ட தலைப்புக்கு உரிமையாளன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா. அவன் தனது புனித மாமறையில் காலம் என்ற பெயரிலான 103ஆவது அத்தியாயத்தில் 2ஆம் வசனமாக இதனைக் கூறியிருக்கிறான். முதலாவது வசனம் காலத்தின் மீது சத்தியமாக என சூழுரைப்பது. 3ஆம் வசனம், இரண்டாம் வசனத்துக்கு விதிவிலக்கு. அதாவது, ‘ஈமான் கொண்டு, நற்செயல் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் உபதேசித்தும் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர’ என்ற விதிவிலக்கைக் கூறுவது. 114 அத்தியாயங்களைக் கொண்ட புனி குர்ஆனில் மூன்றே வசனங்களையும், ஓரே விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றது, காலம் என்ற சூரா. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைக் கூற அல்லாஹ் மூன்று சிறிய வசனங்களுடன், தனது சத்தியத்துடன் ஓர் அத்தியாயத்தை இறக்கி இருக்கிறான் என்பது, இறக்கிய அவ்விடயத்துக்கு எந்தளவு முக்கியத்துவத்தை அவன் அளித்திருக்கிறான் என்பதை விளக்குகின்றது. மனிதன் நஷ்டத்தில் இருப்பது அல்லாஹ்வுக்கு உகப்பான காரியமல்ல என்ற அவனது கருணையாலேயே அந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் அவனது விருப்பத்துக்கமைய நாம் நஷ்டமாகாத தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிறு ஆக்கம் வெளியாகிறது. Continue reading