காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தும் அவசியம் என்றாலும், காற்றின் முதன்மை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. காற்று இன்றேல் நாமனைவரும் சில நிமிடங்களிலேயே இறந்து விடுவோமென்பது அனைவருமறிந்த ஓர் உண்மை.
மேலும் காற்றின் பிற நன்மைகளை அநுபவித்துவரும் நம்மில் எத்தனைபேர் அதுபற்றித் தெரிந்துவைத்து இருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூறலாம். காற்றின் முக்கியத்தை அறிய அல்லாஹ் அதன்மீது சத்தியம் செய்வதையும் தொடர்ச்சியாக அனுப்பப்படுவதையும் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம். 77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக. 42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். மனிதருக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்வாழக் காற்றே இன்றியமையாத தேவையாகிறது. அதுவே உயிர்நாடியாகும்.
Continue reading