Author Archives: factsbeh

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

உங்கள் பொருள்களிலும், உங்களது ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களில் இருந்தும், இணை வைத்துக் கொண்டிருப்பவர்களில் இருந்தும் அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். பொறுமையை மேற்கொண்டும் பயபக்தியுடன் நீங்கள் இருப்பீர்களாயின், நிச்சயமாக அதுவே காரியங்களில் உறுதியானதில் நின்றுமுள்ளதாகும்.

- நிஹா –

Continue reading

அறிந்திட சில …

அறிந்திட சில ….

இருந்தால் கொல்வது இயற்கை உபாதை
இழந்தால் வருவது எய்ட்ஸ் தரும் உபாதை!

உய்யும் வழியை மெய்யினில் தேடு
வையம் வாழ்த்தும் வருமே வீடும்! Continue reading

நற்சிந்தனை 18

நற்சிந்தனை 18

முன்னும் பின்னும் பொய் சேர்த்திட முடியாத உண்மை!

இவ்வுண்மை, குர்ஆனிய வசனத்திற்குரியது என்பதால், அவ்வசனத்தில் இருந்தே இச்சிறு ஆக்கத்தைத் தொடரலாமென நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!

41:42 இதற்கு முன்னும், இதன் பின்னும், பொய் வந்து சேராது. தீர்க்க ஞானத்திற்கும் புகழுக்கும் உரியவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளதாகும்.

இவ்வசனத்தில் நேரடியான கருத்தும் மறைவான வேறு கருத்துக்களும் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. அறியக் கூடியதான கருத்து வாசிப்போருக்கு விளங்கி இருக்குமாயினும், அதனைச் சொல்லிச் செல்ல நினைக்கிறேன். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 32:02

தன்னுடைய ரப்பின் வசனங்கள் நினைவுபடுத்தப்பட்டால், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணித்து விட்டவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்! நிச்சயமாக நாம் இக்குற்றவாளிகளைத் தண்டிப்பவர்கள் ஆவோம்! Continue reading

குறள் – வாய்

குறள் – வாய்

1. வாய்கட்டி வாழார் வாழ்வு பின்னாளில்
வாய்விட்டு அழவே வைக்கும்!

2. வாய்பேணி உண்ணார் நலம் எந்நாளும்
வாய்வையே விலையாயத் தரும்!

3. வாயாலே வம்புகள் வளருவதால் தீய
வார்த்தைதனை நீயும் வெறு! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 40:75

அல்லாஹ்வால் வழி கெடுக்கப்பட்டதன் காரணம்:

அது, நீங்கள் நியாயமின்றி மகிழ்ச்சி அடைந்தவர்களாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாகவும் இருந்ததன் காரணத்தினால்தான்.

மேலதிக விளக்கம் பெற 74ஐயும் 76ஐயும் வாசிக்க!

– நிஹா –

 

Al Quran 40:75

 

“ That was because ye were wont to rejoice on the Earth in things other than the Truth, and that ye were wont to be insolent. ‘’

– niha -

அறிந்திட சில…

அறிந்திட சில ….

தோற்றம் என்பது மாற்றம் ஆகும்
மாற்றம் என்பதே மாறா விதியாம்!

படிப்பின் பெருமை பட்டங்களி லில்லை
படிப்பின் அருமை படைப்பை அறிதலில்!

படைப்பினை அறிந்து படைத்தவனை உணர்
படையினை நகர்த்த வழிமுறை தேவை! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 6:114

அல்லாஹ் அல்லாதவனையா தீர்ப்பளிப்பவனாக நான் தேடுவேன்? வன்தான் உங்களின்பால் இவ்வேதத்தை விவரிக்கப்பட்டதாக இறக்கி வைத்தான். எவர்களுக்கு நாம் வழங்கினோமோ அவர்கள், ‘நிச்சயமாக இது உம்முடைய ரப்பிடமிருந்து உண்மையைக் கொண்டு இறக்கப்பட்டது’ என்பதை அறிவார்கள். எனவே சந்தேகிப்பவர்களில் உள்ளவராக நிச்சயமாக நீர் ஆகிவிடாதீர்.

 

- நிஹா –

Al Quran 6:114

Say, “ Shall I seek for judge other than Allah? When He it is who hath sent unto you the Book, explained in detail. They know full well, to whom We have given the Book, that it hath been sent down from thy Lord in truth. Never be then of those who doubt.

- niha –

அல் குர்ஆன் வசனம் 2:102 உண்மை நிலையைக் கண்டறிதல்…

அல் குர்ஆன் வசனம் 2:102
உண்மை நிலையைக் கண்டறிதல்…

மேலும், சுலைமானுடைய ஆட்சிக் காலத்தில் ஷைத்தான்கள் ஓதிய ஒன்றையே பின்பற்றினார்கள். மேலும், சுலைமான் நிராகரித்துக் கொண்டிருக்கவில்லை. எனினும், ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். மேலும், மக்களுக்குச் சூனியம் என்னும் கலையையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்னும் இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டிருந்ததையும், கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘தவிர, நாம் ஒரு சோதனையேதாம்’ ஆகவே, நிராகரிப்பவனாக ஆகிவிடாதே என்று, அவ்விருவரும் சொல்லும் வரை எவருக்கும் அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை. பின்னரும், அவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை உண்டு பண்ணக் கூடியதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொண்டனர். மேலும், அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாது அதைக் கொண்டு எவருக்கும் அவர்கள் இடர் ஏற்படுத்துபவர் அல்லர். இன்னும், அவர்கள் தங்களுக்குப் பயனளிக்காததும், இடர் அளிக்கக் கூடியதுமான ஒன்றைக் கற்றுக் கொள்கின்றனர். ‘எவரொருவர் இதை விலைக்கு வாங்குவாரோ அவருக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் இல்லை’ என்பதை உறுதியாக அறிந்தே இருந்தனர். மேலும், எதற்காகத் தங்கள் ஆத்மாவை விற்று விட்டார்களோ, அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! Continue reading