Author Archives: factsbeh

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 76:3

நிச்சயமாக நாம் அவனுக்கு வழியை வினக்கினோம். ஆகவே, நன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம், அல்லது நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம்.

- நிஹா -

Al Quran 76:3

We showed him thw Way: Whether he be grateful or ungrateful.
– niha -

நற்சிந்தனை 20 – ஷைத்தான்கள் யார்மீது இறங்குகின்றனர்?

நற்சிந்தனை 20

ஷைத்தான்கள் யார்மீது இறங்குகின்றனர்?

இக்கேள்விக்கான விடையிறுக்கும் தகுதி அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதால், அவனிடமே கேட்டுப் பார்போமே! அக்கேள்வியை நாம் கேட்போமென்று தெரிந்ததனால்தானோ அன்றி நம்மை எச்சரித்து வைப்பதற்காகவோ அல்லது இரண்டுக்குமாகவோ அதற்கான பதிலைத் தனது குர்ஆன் ஷரீபில் கோடிட்டுக் காட்டியுள்ளான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 25:63

அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையவர்கள் என்றால்,  பூமியில் பணிவாக அவர்கள் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால், ஸலாமுன் எனக் கூறிவிடுவார்கள். Continue reading

Quran Kural !

குர்ஆன் குறள்

பேசிடில் நன்மை பயபக்தியுடன் இரகசியம்
பேசிடேல் அல்லாதன யாண்டும்! 58:9

அகப் பார்வையுள்ளோர் பெற்றிட படிப்பினை
உகப்பாக 59:2 நினை!

துதிக்கின்றன அல்லாஹ்வை ஊர்வன வானம்பூமியில்
விதிகாண ஹஷா ஒன்று!

செல்வந்தர் மத்தியில் சுற்றிவர மட்டுமல்ல
செல்வம் எத்தியுள்ளான் 59:7இல்!

எவர்மானம் காக்கப்பட்டதோ உலோபத்தி லிருந்து
அவர்தாம் வெற்றியாளர் அறி!

– நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 22:19

இவ்விரு வழக்காளிகளும் தங்களது ரப்பின் விஷயத்தில் தர்க்கம் செய்கின்றனர். ஆகவே, நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடைகள் வெட்டப்பட்டுள்ளன. கொதித்திடும் நீர் அவர்களது தலைகளுக்கு மேல் ஊற்றப்படும். Continue reading

நற்சிந்தனை 19 பாதுகாவலர்களைப் பின்பற்றலாமா!

நற்சிந்தனை 19

பாதுகாவலர்களைப் பின்பற்றலாமா!

மனித வாழ்க்கையில் பின்பற்றல் என்பது, நம்மோடு இரண்டறக் கலந்த ஒரு செயற்பாடாகவே உள்ளது. ஐந்தறிவின் மூலம், இயற்கையிடம், மனிதரிடம், இன்ன பிற உயிரினங்களிடம் இருந்து பெற்றவைகளைப் பின்பற்றுபவனாகவே மனிதன் இருந்து வந்துள்ளான். அந்த பின்பற்றல்கள் மனிதனைச் சரியான  வழியில் செலுத்தி இருக்கவில்லை. தனது சக்திக்கு மேற்பட்டவற்றை தெய்வமாகக் கருதிய நிலையும் இப்பின்பற்றலின் பெறுபேறாகவே அறிய முடிகின்றது. Continue reading

அறிந்திட சில …..

அறிந்திட சில …..

 

பாரை தகர்த்திடும் புகுந்தே வேர்!
போரை அழித்திடும் வலிந்தே போர்!

போனால் வராது மானம்
போனாலும் வருமே இணையம்!

பேனா தருவது இன்பம்
பேனால் வருவது துன்பம்!

தானாய் விரிந்தால் மலர்
வீணாய்ப் போமே விரித்தால்!

வெட்டத் தளிரும் சேட்டமாய் மரம்
விட்டால் தொலையும் வேகமாய் பட்டம்!

பானை வனைந்திட களிமண் தேவை
வீணை வடித்திட பெருமரம் தேவை!

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 72:23

அல்லாஹ்விலிருந்து எத்தி வைப்பதையும், அனின் தூதுச் செய்திகளையும் தவிர எவர் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புண்டு. அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பர். Continue reading

அறக் கவிதை!

ஒழுக்கம் 2

 

மேலும் அறிய சாலும் லிங்க்:  http://factsbehind.net/wp/?p=1259

 

வள்ளுவப் பெருந்தகை 
தெள்ளிதிற் கூறினார்
ஒழுக்கம் விழுப்பம் தரலால் அது
உயிரினும் ஓம்பப்படும் என்று!

 
அல்லாஹ் தன் அருள் மறையில்
சொல்லால் தன் தூதரைப் புகழ்ந்தான்
நீர் உயர் குணத்தின் உன்னத
நிலையில் உள்ளீர் என்று!

 
ஒழுக்கமே மனிதனைத்
தாழவும் வைத்திடும்
வாழ்விலும் உயர்த்திடும்
வையகமும் வியந்திட!

 
ஒழுக்கமில்லா அறிஞனும்
இழிவடைவான்
ஒழுக்கமில்லா வீரனும்
அழிவுறுவான்!

 
அறிவு அந்தஸ்தில்லாவிடினும்
வீரம் விவேகமில்லாவிடினும்
விரும்பப்படுவான் அனைவராலும்
ஒழுக்கமுடையவனாயிருப்பின்!

 

 

- நிஹா -

 

மேலும் அறிய சாலும் லிங்க்:

http://factsbehind.net/wp/?p=1259