கம்மளையிலிட்டுக் கருவறுப்பான்!

 

ஆண்டவனை மறந்து கோரத்
தாண்டவமாடிய கோட்டாவே
ஆண்டவர் பலர் உலகில்
மாண்டொழிந்ததை மறந்தாயோ!

கெட்டபய கோட்டபயவின்
கொட்டமழித்திட இறைவன்
திட்டமிட்டான் அதுவே அவனழிவாம்
பட்டத்து மஹாராஜா தேர்தல்!

குறிக்கப்பட்ட நாள் இறையால்
மறுக்கப்பட முடியாதென்பதைனை
மறக்கப்பட முடியா முடிவாய்
இறக்கி வைத்தான் மண்ணில்!

பட்டழிந்த மக்களின் கண்ணீர்
தட்டழிய வைத்துள்ளது அவர்தமை
விட்டொழியாது விரட்டும்
நட்டமே விளையும் நாசமே எஞ்சும்!

நிம்மதியைக் குலைத்தீ்ர்கள்
நேர்மையை விலை பேசினீர்கள்
நன்மை பெறும் வழிகளை அடைத்து
நம்மை அச்சத்தால் நலியவிட்டீர்!

உம்மை இறைவன் ஒருபோதும்
எம்மை அழிக்க நினைத்ததனால்
சும்மாவிட்டுவிட மாட்டான்
கம்மளையிலிட்டு கருவறுப்பான்!

 

- நிஹா -