குர்ஆன் குறள்!

 

அறிவதற்காய் வந்தமகன் அறிந்திடனும் நல்லவற்றை
தெரிந்து தெளிந்து காலமெலாம்!

 

அக்கணமே முடிந்துவிடும் மூச்சிழந்தால் வாழ்வு
சிக்கனமாய் செலவு செய்!

 

சிறப்பான வாழ்விற்கு உரித்தான ஆயத்தம்
பிறப்புமுதல் செய்து வரனும்!

 

மிச்சமுள்ள வாழ்வுதனை கச்சிதமாயக் கடந்துசெல
இச்சைதனை ஒழித்து விடு!

 

ஈமானின் முதல்படிவம் தொழிலே‌யாமது சீரானால்
ஈசனிடை விலகும் திரை !

 

- நிஹா -