தேர்தல் சட்டங்களில் மாற்றம் வேண்டும்!

வோட்டைப் போட்‌ட பின்னர் பிச்சைப் பாத்திரம் ஏந்தும்
கேட்டை நீக்கும் சட்டங்கள் வேண்டும்!

வோட்டுப் போட்டு பிரதிநிதிகளாக்கும் வாக்காளருக்கு
வோட்டுப் போட்டவர்களை மீளப் பெறும் சுதந்திரம் வேண்டும்!

நோட்டுக் கற்றைகளால் ‌வோட்டைக் காவு கொள்ளும் கயவர்
கோர்ட் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்!

கள்ள வோட்டுப் போடும் குள்ளநரிக் கூட்டத்தின்
தொல்லை அகலும் கடும் சட்டம் வேண்டும்!

எப்படியும் வெல்வேன் என்று செப்படி வித்தை செய்யும்
குப்பைகள்அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்!

தேர்தல் சட்ட்ங்கள் மீற இடமளிக்கும்
தேர்தல் ஆணையாளரும் தண்டிக்கப்படல் வேண்டும்.!

கள்ளவோட்டு அடிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டால்
கொள்ளையர் பட்டமளித்து வாக்குரிமையை பறிக்க வேண்டும்!

அதிகாரத்திலிருக்கும் வரை வேட்புமனு கொடுக்கும்
சதிகாரர் அதிகாரம் நீக்கப்படல் வேண்டும்!

வதியாதார் வோட்டு இனங்காணப்பட்டு நீக்கும்
விதியொன்று செயற்படுத்தப்படல் வேண்டும் ! 

தேர்கால வன்முறைகளை அடக்க சார்க் பொலிஸாரால்
தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படல் வேண்டும்!

 

- நிஹா -