வாக்கு பற்றி ஒரு நோக்கு!

 

 

வோட்டைப் போட்டு கேட்டை வாங்காதீர்கள்!
‌வோட்டைப் பாவித்து கேட்டை விலக்குங்கள்!

ஒருநாள் இன்பத்துக்காக வோட்டை அளித்தால்
வாழ்நாள் முழுதும் துன்பம் விளைக்கும்!

அறிந்து அளியுங்கள் உங்கள் வாக்கை அன்றேல்
அழிவை விலைக்கு வாங்கி விடுவீர்கள்!

அற்ப எண்ணங்களுக்காகப் போடப்படும் வாக்கு
சொற்ப உரிமையையும் அழித்துவிடும்!

விற்றுப் பிழைக்க எண்ணாதீர் வாக்கை
தோற்றுவிடுவீர்கள் உங்கள் பிறப்புரிமையை!

வோட்டுக்கள் நோட்டுக்களுக்கு விற்கப்பட்டால்
வேட்டுக்களால் பதில் தீர்க்கப்படும்!

- நிஹா -