கோடியில் ஒருவனாய் வாழே!

கொள்கையில் திளைத்திட வேண்டும்
கோள்குண்டணி தவிர்த்திட வேண்டும்
உள்ளமை அறிந்திட வேண்டும்
உண்மையில் நிலைத்திட வேண்டும்!

கிள்ளியும் கொள்கை வளர்க்கும்
கள்ளர்கள் கொடுமை களையனும்
அள்ளியும் சென்றிடும் அற்பர்
உள்ளேயும் அனுப்பிட வேண்டும்!

நல்லவர் வாழ்ந்திட வேண்டும்
வல்லவர் உள்ளவர் ஈண்டும்
பொல்லாரை இனங்கண்டு நாளும்
அல்லாதன தவிர்க்க வேண்டும்!

நிலையில்லா வாழ்வென உணர்ந்து
விலையில்லா மனிதத்தை மதித்து
பிழையில்லா வழிகளில் வாழ்ந்து
பழிப்பில்லா நிலையினை அடைவோம்!

பழித்து வாழ்ந்திட நாடில்
இழிவினை இழப்பினை நல்கும்
கழிவினைக் களைந்து வாழின்
கொலுவினில் உன்னை ஏற்றும்!

நலிவற்றோர் நலந்தனை நாடி
பலிவரா வழியினில் தேடி
கிலிகொளா வாழ்வுக்காக
கலியுகந் தன்னைக் கடப்போம்!

கோடாய் நிலைத்திடல் நன்றே
கோடாமல் நிலைப்பது மேலே
கோடிகள் தேடி வரினும்
கோடியில் ஒருவனாய் வாழே!

 

- நிஹா -