குர்ஆன் குறள் !

 

 

போட்டிடாதீர் கைகளை அழிவின்பால் மேலும்
நாடிடுவீர் நன்ம செய! 2:195

 

ஆயத்தம் செய்தீடுவீர் ஹஜ்ஜுக்காக அறிந்திடுவீர்
இறையச்சமே சிறந்த தென்று! 2:197

 

தந்துவிடெனின் ஹஜ்ஜின் பயன் பூவுலகில்
தந்திடானே மறுமைதனில் நற்பயன்! 2:200

 

பார்த்திட லாகாதோ படைத்தவனின் சான்றுகளை
பார்த்திடுக உமக்குள்ளும் கருத்தாய் ! 51:21

 

அறிந்திடுக அச்சமில்லை அல்லாஹ்வின் நேசருக்கு
தெரிந்திடுக யூனூஸ் 62இல்!

 

 

- நிஹா -