இயற்கையின் அழகும் பயனும் இறையருளே!

  

 

கண்டு களியுங்கள்
மென்றும் தின்னுங்கள்
தின்று மகிழுங்கள்
உண்டு நன்மையே!

 

கனி பூவிலே மலர்ந்து
மணம் வீசிக் கருக் கட்டுகிறது
கன்னியோ மலர்ந்து மணம் வீசி
கருக்கட்டுகின்றாள்

 

கனியாய் மலரே மாறுகின்றது
மீண்டும் மண்ணிலே விதைக்கின்றது
கன்னியோ கருவை உருவாய் சுமந்து
மண்ணிலோர் மழலை தந்து
பெண்ணாய் மிளிர்கின்றாள்!

 

எண்ணிப் பார்த்திடில்
கன்னியும் கனியும் இனிக்கும்தான்
எண்ணம் உயர்ந்திடில்
மண்ணிலவள் பெருமை சொல்லி மாளாதே!

 

- நிஹா –

 

 

Please click and watch 

 

https://www.facebook.com/video.php?v=859155890763026&set=vb.100000058689675&type=2&theater