உங்களுக்குத் தெரியுமா!

 

மாலை மாற்று   –  PALINDROME 

 

PALINDROME இதனைத் தமிழில் இருவழி ஒக்குஞ்சொல் – மாலை மாற்று எனலாம். இதன் விளக்கம்: சுருக்கமாகக் கூறின் விகடகவி என எழுதப்பட்டுள்ளதை முன்புறத்தால் வாசிப்பது போன்றே பின்னிருந்து தொடங்கி வாசிப்பதை ஒத்ததாம்.

 

இம்முறையில் அக்காலத்தில் பேரின்பப் பாடல்களைக் கூட புலவர்கள் யாத்துள்ளார்கள் என்றறியும் போது , நாம் எம்மாத்திரம்.

 

எளிய பாடல் [தொகு] தேரு வருதே மோரு வருமோ மோரு வருமோ தேரு வருதே இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும் பாடலின் பொருள் வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

 

இது போன்று ஆங்கிலத்திலும் உண்டே!

 

ஆங்கிலத்தில் Was it a cat I saw?, Do gees see God?, A Toyota’s a Toyota, A nut for a jar of tuna, Madam, I am Adam

 

உலகிலேயே பழைய, முதல் மாலைமாற்றுச் சொற்றொடர் இலத்தின் மொழியின் Sator Arepo Tenet Opera Rotas என்பதே ஆகும். இது கி.மு. 79ல் கண்டுபிடிக்கப்பட்டது.

 

- நிஹா -