குர்ஆன் குறள்

 

வுளுவை அறிந்திடுக மாயிதா ஆறில்
பழுதிலாது தொழுகைநிறை வேற! 5:6

 

அஞ்சிடுக அல்லலாஹ்வை தேடிடுக வழிதனை
துஞ்சிடாதவன் நெருக்கம் பெற! 5:35

 

ஓராத்மாவில் நம்மனை வ‌ரையும் படைத்தவனின்
பேறை விளங்கி யறி! 6:98

 

அடைந்திடாதே பார்வைகள் அவனை என்றும்
அடைந்திடுவன் நும்பார்வை தனை! 6:103

 

கலிமத்து ரப்பி பரிபூரணம் அடைந்துளது
உண்மையாலும் நீதத்தாலும் காண்! 6:115

 

- நிஹா -