சீன கம்யூனிஸ இராணுவத்தினரின் பாத யாத்திரை – 1934

சீனாவில் கம்யூனிஸம் தோற்றம் பெற்ற நிலையில் அன்றைய நெருக்கடி நிலையின் தேவையான தீர்வாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர நடை உலக வரலாற்றில் தனித்துவத்துடன் ‌பேசப்படுவது.

மாவோ சே துங் அவர்களின் தலைமையில், அன்றைய ஆட்சியாளரின் சீன தேசியக் கட்சியின் கே.எம்.ரி என அழைக்கப்பட்ட இராணுவத்தின் அழிவிலிருந்து, மக்களைக் காப்பாற்ற மக்கள் விடுதலை இராணுவம் எனும் கம்யூனிஸ இராணுவத்திரால் முன்னெடுக்கப்பட்டது. இது 1934ஆம் ஆண்டில் தொட்ங்கி முன்னூற்றி எழுபது நாட்களுக்கு மேல் நீடித்தது. அக்கால எல்லையில் அவர்கள் கால்களால் கடந்த தூரம் எட்டாயிரம் மைல்கள்.

இந்த நீண்டபாத யாத்திரை தந்திரோபாய ரீதியில் தொழில்நுட்பத் தோல்வியாகக் கருதப்பட்டாலும், அதுவே கம்யூனிஸ இராணுவத்தினருக்கு ஏற்படவிருந்த பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கு வெகுவாக உதவியுள்ளது என்பது நிதர்சனம். அதனை தப்பிச் செல்லும் தந்திரமாகவே கொள்ளலாம். அதனாலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், மாவோவின் கம்யூனிஸ இராணுவம் தம்மை அமைப்பு ரீதியாக மீண்டும் ஒன்றினைத்துக் கொண்டு கேஎம்ரி இராணுவத்தினரை தோற்கடிக்க முடிந்தது.

அன்று அந்த மாவோவின் தலைமையிலான கம்யூனிஸ இராணுவம், தமது வரலாற்றுப் புகழ் பெற்ற நீண்ட பாத யாத்திரையின் போது எட்டு அம்சங்களைத் தமது அணுகு முறையாக கொண்டிருந்தது. இதில் தலைமை தாங்கியவர்கள் மாவோ சேதுங் அவர்களும், சூ என் லாய் என்பவரும். பின்னர் இவர்கள் நாட்டின் ஆட்சியாளர் ஆனார்கள்.

அன்று மாவோ முன்வைத்த கொள்கையே இன்றும் மாவோ சிந்தனை என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. அத்தோடு உலகெங்கும் இவரது சிந்தனை முற்போக்குவாதிகளால் பின்பற்றப்படுகின்றது.

 

- நிஹா -

தொகுப்பு