ஞானக் குறள் !

தன்னை யுணர்வதே பேரின்பம் உணர்ந்தபின்
தானிரண்டறக் கலப்பதே உயர்வு!

கண்ணை மூடித் தன்னைக் காணல்
தன்னையறியும் தவமே யாகும்!

உயர்வு என்பது உயர்ச்சியில் இல்லை
கயமையற்ற பணிவில் தானே!

இறப்பு என்பது பிறப்பின் தொடர்ச்சி
இறப்பின்தொடர்ச்சி ஈடிலா நிகழ்வு!

பிறப்பவர் இறப்பது பிறழ்விலா நிகழ்வு
பிறப்புள்ளிறப்பது பேரின்ப வாழ்வு!

 

- நிஹா -