குர் ஆன் குறள்!

தடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கரங்களை
விடுத்திடாது கொடுத்திடுக ஸக்காத் 4:77

நிறைவேற்றிடுக தொழுகையை கூறுது தொடர்ந்து
மறை எழுபத்தேழு நிஸா!

விற்றிடுவீர் மறுமைக்காய் இவ்வுலக வாழ்வை
பெற்றிடுவீர் போரிட்டு விரைவாய்! 4:74

புறக்கணித்தே அவர்களைக்கூறுவீ ரறிவுரை
தெளிவான சொற்களைக் கொண்டு 4:63

இருப்பீரே நபிமார் நல்லோர் உண்மையாளர் பயபக்தியாளருடன்
வழிப்பட்டே அல்லாஹ்வைத் தூதரை! 4:69

ஏவினான் வழங்கிடில் நீதியாய்த் தீர்ப்பு
மேவிய அமானிதத்தை உரியோர்க்கு! 4:58

– நிஹா -