அறிந்திட சில…

 

வளைவும் நிமிர்வும் வடிவைக் கொடுக்கும்
வளைந்தவைதானே நிமிர்ந்திட முடியும்!

உழைத்தவன்தானே ஓய்ந்திட முடியும்
அழைத்தவன்தானே அணுகிட முடியும்!

ஓய்வும் உறக்கமும் இதயத்துக்கில்லை
வாய்வும் பிடிப்பும் படுத்திடும் தொல்லை!

மலர்ந்தவை வாடல் உலர்ந்தவைக்கில்லை
உலர்ந்த பின்னும் பயன்தருவனவும் உண்டே!

விளைந்தவை சிலவே விதையாய் மாறும்
களை ஒழிந்த பின்னரே பயிரும் செழிக்கும்!

வேளை தவறாது வேலையைச் செய்
வேலையை நீயும் விரும்பியே செய்!

சாலையைத் திருத்தின் தடங்கள் ஒழியும்
சோலையைத் திருத்தின் தூயமணங் கமழும்!

– நிஹா -